தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கடிதம்...

Tuesday, April 28, 2009

தமிழீழத்தின் தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கடிதம்.....

மரியாதைக்கு உரிய ஐயா,

நலம், நலமே விழைய பிரார்த்திக்கிறேன். தங்களின் தற்போதைய முகவரி தெரியாததால் இந்த கடிதத்தினை எனது வலைபதிவின் மூலமாக தங்களின் மேலான பார்வைக்கு வைக்கிறேன். இந்த கடிதத்தை இங்கே வலையுலகமெங்கும் நீக்கமற நிரம்பியிருக்கும் தமிழ் இன உணர்வாளர்கள் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவார்கள் என உறுதியாக நம்புகிறேன். சமீபகாலமாக என் போன்ற சாமானிய தமிழனுக்கு, தமிழகத்திலும் சரி, வலையுலகத்திலும் சரி கொசுத்தொல்லையை விட மோசமாக தொல்லை தருபவர்கள் இந்த தமிழுணர்வாளர்கள்.இவர்களின் பேச்சையும் எழுத்தையும் கடந்து போகும் போது எனக்குள் குற்றவுணர்வு மேலோங்குகிறது. நான் தமிழனாய் பிறந்திருந்தாலும் அநியாயத்திற்கு இந்தியனாக இருக்கிறேனோவென்ற சந்தேகம் என்னை மிகவும் உறுத்தியதால் இது குறித்து மேலதிகமாய் சிந்தித்த போது எனக்குள் எழும்பிய சில சந்தேகங்களை இந்த கொசுத்தொல்லை ஆசாமிகளிடம் கேட்பதை காட்டிலும் பிரச்சினையின் நாயகனாகிய உங்களையே கேட்டிடலாமென இந்த கடிதத்தினை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

தங்களுக்கு நேரமிருந்தால் பின்வரும் எனது சந்தேகங்கள் அல்லது கேள்விகளுக்கு பதில் தரவேண்டுகிறேன்.

 1. ஏசு வருகிறார்...வந்து விட்டார்...வந்து கொண்டேயிருக்கிறார் என்பது மாதிரியாக முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக தமிழீழம் வருகிறது...வந்து கொண்டிருக்கிறது...வந்து விட்டது என்று நீங்கள் சொன்னதை வாய்பிளந்து உளம் மகிழ்ந்து கேட்ட அப்பாவி ஈழத்துப் பொதுமகனுக்கு, அல்லது வேர்வை சிந்தி உழைத்த தங்கள் பணத்தை ஆயுதம் வாங்கிட அள்ளி அள்ளிக் கொடுத்த புலம் பெயர்ந்த தமிழனுக்கு நீங்கள் இது வரையில் நீங்கள் திரும்பக் கொடுத்தது என்ன?
 2. பிராந்திய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்றவர்களின் அனுசரனையும் ஆதரவு இல்லாமல் தமிழீழம் சமைக்க இயலாது என்கிற அடிபடை அரசியல் கூறை எங்கனம் மறந்தீர்கள்? உண்மையில் தமிழீழம் படைக்க நினைத்திருந்தால் மாவோ தீவிரவாதிகள் சீனாவிடம் ஆதரவு பெறுவதைப் போல நீங்கள் ஏன் இந்தியா, சீன, பாகிஸ்தான் போன்ற அதிகார மய்யங்களோடு சுமூகமான உறவினை ஏற்படுத்திக் கொள்ள முனையவில்லை?
 3. ராஜீவ்காந்தியின் கொலைக்கு பிந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த போது கலைஞர் அந்த கூட்டணியில் இருந்தார், தமிழகத்தின் தவப்புதல்வன் அண்ணன் வைக்கோவின் கட்சியினர் அமைச்சராக கூட இருந்தனர், அந்த சந்தர்ப்பத்தை ஏன் தாங்கள் பயன்படுத்திக் கொள்ள முனையவில்லை? ஐரோப்பிய நாடுகளின் அடிவருடியாகி அவர்கள் பின்னால் போனதன் மர்மம் என்ன? புலம் பெயர் தமிழர்களிடம் இருந்து பணம் கறக்கும் உத்தியாக அந்த நிலைப்பாட்டினை எடுத்தீர்களா?
 4. போரில் உங்கள் கை ஓங்கியிருந்த போது ஐரோப்பிய நாடுகளின் மேற்பார்வையில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது அதை சமயோசிதமாக பயன் படுத்திக் கொள்ளாதது யார் குற்றம்? இந்தியாவின் குற்றமா?
 5. ராஜபக்‌ஷே தேர்தலில் வெற்றிபெற்றால் அரசின் தீவிரத்தன்மை அதிகரிக்குமென தெரிந்தும் மென்மையான போக்கினை கடைபிடித்த ரணில் விக்கரமசிங்கேயை தோற்கடிக்க ஏன் முனைந்தீர்கள்?
 6. ”துன்பியல் நிகழ்வு” என்கிற வார்த்தையின் பின்னால் இத்தனை பெரிய வலியும் வேதனையும் இருக்கும் என்பதை எப்போதாவது உணர்ந்திருந்தீர்களா? அதன் எதிர்வினையை தவிர்க்க என்ன முயற்சிகளை முன்னெடுத்து செயல்படுத்தினீர்கள்?
 7. ராஜீவ் காந்தியை கொல்ல உங்களுக்கு எத்தனை நியாயமிருக்கிறதோ அத்தனைக்கு குறைவில்லா நியாயம் சோனியாவிற்கு உங்களை பழிதீர்ப்பதில் இருக்கக் கூடாது என நினைக்கிறீர்களா?
 8. ஆண்ட்டன் பாலசிங்கம், தமிழ்செல்வன் மாதிரியான ராஜ தந்திரிகள் இல்லாமல் போனதுதான் உங்களின் படுதோல்விக்கு காரணம் என நினைக்கிறீர்களா?
 9. “செய் அல்லது செத்துமடி” என இன்றைக்கு தமிழகத்தில் உங்களின் ஆதரவாளர்கள் தமிழக முதல்வரை ஏகத்துக்கு கேள்வி கேட்கின்றனரே, அந்த கேள்வி இப்போது உங்களுக்கும் பொருந்தும்தானே? உன்னால் முடியாவிட்டால் பதவியை தூக்கியெறிந்து விட்டு போய்விடு, ஜெயலலிதா வந்து தமிழீழம் வாங்கித்தருவார் என்பது மாதிரியாக கலைஞரை பார்த்து கேள்வியெழுப்பும் இந்த தமிழுணர்வாளர்கள் நாளைக்கு உங்களை பார்த்து இதே மாதிரியான கேள்வியை கேட்டால் என்ன செய்வீர்கள்?
 10. இன்றைக்கு உங்களின் ராணுவ கட்டமைப்பு முழுமையாக இலங்கை அரசினால் தகர்க்கப் பட்டுவிட்ட நிலையில், காடுகளுக்குள் பொதுமக்களை கேடயமாக நிறுத்திக் கொண்டு பதுங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்கிற இலங்கை அரசின் பரப்புரையினை அறிவீர்களா? அப்படிபட்ட ஒரு நிலையினை நீங்கள் இழிவாக கருதவில்லையா? அதை தவிர்க்க என்ன செய்ய போகிறீர்கள்?
 11. கருணா, ஜெயலலிதா இவர்களில் யார் நல்லவர்?, யாரை நம்பலாம்?
 12. மக்களின் நலனுக்காக இயக்கமா? அல்லது இயக்கத்திற்காக மக்களா? இத்தனை சாவுக்கும் இலங்கை அரசும், இந்தியாவும் மட்டும்தான் காரணமா?இத்தனை பேர் செத்துப் போனதில் உங்களின் பங்கென எதுவுமில்லை என நினைக்கிறீர்களா?
இன்னமும் ஒரு சில கேள்விகள் இருக்கிறது, ஆனால் நீங்கள் நேரடியாக யுத்தகளத்தில் செயல்படுவதாக வந்த செய்திகளின் காரணமாய் உங்களின் பொன்னான நேரத்தினை கருத்தில் கொண்டு இத்துடன் இந்த மடலை நிறைவு செய்கிறேன். எனது இந்த கடிதத்தில் எந்தவித உள்நோக்கமோ அரசியல் உள்குத்துகளோ இல்லையென்பதை உறுதிபட கூறிட விரும்புகிறேன். ஒரு சாமானிய இந்தியனின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வீர்கள் என்கிற நம்பிக்கையுடம் விடைபெறுகிறேன்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள

யோசிக்க ஆரம்பித்திருக்கும் தமிழன்.
17 comments:

Anonymous said...

fuck

சென்ஷி said...

ஆஹா.. என்ன யட்சன் இப்படில்லாம் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்ல லெட்டர் எழுதறீங்க..! இப்ப நாங்க உங்களை எந்த கட்சியிலயும் சேர்க்காம சராசரியால்ல நினைக்க வேண்டியிருக்குது.

சென்ஷி said...

//சமீபகாலமாக என் போன்ற சாமானிய தமிழனுக்கு, தமிழகத்திலும் சரி, வலையுலகத்திலும் சரி கொசுத்தொல்லையை விட மோசமாக தொல்லை தருபவர்கள் இந்த தமிழுணர்வாளர்கள்.//

ஆஹா.. இதை படிச்சதுமே எனக்கு தோணுன கவுஜ...

மஸ்கிட்டோ நெட் கொசுவ தடுக்குது
இண்ட்டர்நெட்டு மனச கெடுக்குது

சென்ஷி said...

மகாபாரதம்
இதிகாசமானது
பகவத்கீதை
வேதமானது
கண்ணன்
அர்ச்சுனர்
அனைவரும்
கடவுளானார்கள்
எல்லாம் சரி
கூட்டம் கூட்டமாக
வெட்டிக்கொண்டும்
குத்திக்கொண்டும்
செத்துப்போன‌
சிப்பாய்கள்
என்ன ஆனார்கள்?

-------------------இரா.பூபாலன்

உங்க பதிவை படிச்சதும் நினைவுக்கு வந்த கவிதை இது..

மக்கள் அநியாயமா சாகடிக்கப்படுறப்ப அதை செய்தி ஊடகங்கள் எந்த சூழலையும் உண்மையை மக்கள்கிட்ட கொண்டு சேர்க்காதப்ப இணையம் உதவுது. வேற வேற நாட்டுல இருக்குறவங்க உணர்வால இணையற இந்த ஒரு விசயத்த சிலர் தங்களோட விளம்பரமா தேடிக்கிறதைதான் சகிக்க முடியலை.

சாவுலயும் விளம்பரம் தேடுறதுக்குன்னு ஒரு கும்பல் அலையறதை இங்கதான் நாம பார்க்க முடியும்.

பகிர்விற்கு நன்றி யட்சன்.

Anonymous said...

Super, prabhakaran never answer this questions. because He cannot give proper answer.

harveena said...

இதுல நிறைய பெயர்கள் இருக்கு சார்,, யாரு சார் இவங்க ???
are they doing politics or selling politics???? i wanna like to give a dictionary to those NAME SAKE politicians, to kw the meang of a good political leader,, but i afraid, they may change the meaning of that word n the same dictionary to their ease,,,,

Anonymous said...

Kalinger only brought the Casefire. He can only bring TAMIL ELEM. So VOTE to DMK, eventhough you dont vote to Congress.

Anonymous said...

Sorry to type in ENGLISH. Prabhakaran is not needed to answer these questions friend.

// 1. ஏசு வருகிறார்...வந்து விட்டார்...வந்து கொண்டேயிருக்கிறார் என்பது மாதிரியாக முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக தமிழீழம் வருகிறது...வந்து கொண்டிருக்கிறது...வந்து விட்டது என்று நீங்கள் சொன்னதை வாய்பிளந்து உளம் மகிழ்ந்து கேட்ட அப்பாவி ஈழத்துப் பொதுமகனுக்கு, அல்லது வேர்வை சிந்தி உழைத்த தங்கள் பணத்தை ஆயுதம் வாங்கிட அள்ளி அள்ளிக் கொடுத்த புலம் பெயர்ந்த தமிழனுக்கு நீங்கள் இது வரையில் நீங்கள் திரும்பக் கொடுத்தது என்ன?
//

Nothing is the answer at the moment. But how many countries liberetaed within a year or two in the world history??

If we have oil or something else, Eelam could have been liberated 10 years ago or even more.

// 2. பிராந்திய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்றவர்களின் அனுசரனையும் ஆதரவு இல்லாமல் தமிழீழம் சமைக்க இயலாது என்கிற அடிபடை அரசியல் கூறை எங்கனம் மறந்தீர்கள்? உண்மையில் தமிழீழம் படைக்க நினைத்திருந்தால் மாவோ தீவிரவாதிகள் சீனாவிடம் ஆதரவு பெறுவதைப் போல நீங்கள் ஏன் இந்தியா, சீன, பாகிஸ்தான் போன்ற அதிகார மய்யங்களோடு சுமூகமான உறவினை ஏற்படுத்திக் கொள்ள முனையவில்லை?
//

Who said they never ask anyone.

// 3. ராஜீவ்காந்தியின் கொலைக்கு பிந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த போது கலைஞர் அந்த கூட்டணியில் இருந்தார், தமிழகத்தின் தவப்புதல்வன் அண்ணன் வைக்கோவின் கட்சியினர் அமைச்சராக கூட இருந்தனர், அந்த சந்தர்ப்பத்தை ஏன் தாங்கள் பயன்படுத்திக் கொள்ள முனையவில்லை? ஐரோப்பிய நாடுகளின் அடிவருடியாகி அவர்கள் பின்னால் போனதன் மர்மம் என்ன? புலம் பெயர் தமிழர்களிடம் இருந்து பணம் கறக்கும் உத்தியாக அந்த நிலைப்பாட்டினை எடுத்தீர்களா?
//

Are you sure, they didn't take any actions on this.

//4. போரில் உங்கள் கை ஓங்கியிருந்த போது ஐரோப்பிய நாடுகளின் மேற்பார்வையில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது அதை சமயோசிதமாக பயன் படுத்திக் கொள்ளாதது யார் குற்றம்? இந்தியாவின் குற்றமா?
//

If not whay did they participated in round & round talks again and again??

// 5. ராஜபக்‌ஷே தேர்தலில் வெற்றிபெற்றால் அரசின் தீவிரத்தன்மை அதிகரிக்குமென தெரிந்தும் மென்மையான போக்கினை கடைபிடித்த ரணில் விக்கரமசிங்கேயை தோற்கடிக்க ஏன் முனைந்தீர்கள்?
//

This one already explained. I don't have a link for this.

//6. ”துன்பியல் நிகழ்வு” என்கிற வார்த்தையின் பின்னால் இத்தனை பெரிய வலியும் வேதனையும் இருக்கும் என்பதை எப்போதாவது உணர்ந்திருந்தீர்களா? அதன் எதிர்வினையை தவிர்க்க என்ன முயற்சிகளை முன்னெடுத்து செயல்படுத்தினீர்கள்?
//

If he doesn't know then he would have not taken arms in his hand.

// 7. ராஜீவ் காந்தியை கொல்ல உங்களுக்கு எத்தனை நியாயமிருக்கிறதோ அத்தனைக்கு குறைவில்லா நியாயம் சோனியாவிற்கு உங்களை பழிதீர்ப்பதில் இருக்கக் கூடாது என நினைக்கிறீர்களா?
//

Can. Go for it. But that does not mean killing people?? Then his son will come and take revenge on it. Then you people start shouting???

// 8. ஆண்ட்டன் பாலசிங்கம், தமிழ்செல்வன் மாதிரியான ராஜ தந்திரிகள் இல்லாமல் போனதுதான் உங்களின் படுதோல்விக்கு காரணம் என நினைக்கிறீர்களா?
//

hmm. Others don;t have enough experience like these two. Anton Balasingham's lost is a huge one. No doubt about it.


// 9. “செய் அல்லது செத்துமடி” என இன்றைக்கு தமிழகத்தில் உங்களின் ஆதரவாளர்கள் தமிழக முதல்வரை ஏகத்துக்கு கேள்வி கேட்கின்றனரே, அந்த கேள்வி இப்போது உங்களுக்கும் பொருந்தும்தானே? உன்னால் முடியாவிட்டால் பதவியை தூக்கியெறிந்து விட்டு போய்விடு, ஜெயலலிதா வந்து தமிழீழம் வாங்கித்தருவார் என்பது மாதிரியாக கலைஞரை பார்த்து கேள்வியெழுப்பும் இந்த தமிழுணர்வாளர்கள் நாளைக்கு உங்களை பார்த்து இதே மாதிரியான கேள்வியை கேட்டால் என்ன செய்வீர்கள்?
//

He didn't do any acting. He is there and still fighting.

// 10. இன்றைக்கு உங்களின் ராணுவ கட்டமைப்பு முழுமையாக இலங்கை அரசினால் தகர்க்கப் பட்டுவிட்ட நிலையில், //
Are you sure about this??
Even IPKF time also they were in jungles.

//காடுகளுக்குள் பொதுமக்களை கேடயமாக நிறுத்திக் கொண்டு பதுங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்கிற இலங்கை அரசின் பரப்புரையினை அறிவீர்களா? அப்படிபட்ட ஒரு நிலையினை நீங்கள் இழிவாக கருதவில்லையா? //

This is not the first time governments doing false propaganda.
During IPFK time also.. IPKF said same story when they killed innocent people.

//அதை தவிர்க்க என்ன செய்ய போகிறீர்கள்?
//

I cannot answer for this.


// 11. கருணா, ஜெயலலிதா இவர்களில் யார் நல்லவர்?, யாரை நம்பலாம்?//

Is there any difference??

//12. மக்களின் நலனுக்காக இயக்கமா? அல்லது இயக்கத்திற்காக மக்களா?
//

No doubt, for people.

//இத்தனை சாவுக்கும் இலங்கை அரசும், இந்தியாவும் மட்டும்தான் காரணமா?இத்தனை பேர் செத்துப் போனதில் உங்களின் பங்கென எதுவுமில்லை என நினைக்கிறீர்களா?
//

I hope that you know the current political, economical & geographical problems.
During peace talk time, after every round of talk Eri Solheim went India and explained the talk details to Indian authorities(??). India wasn't partner in the peace process that time. Have you ever wondered why did he do that??

If India not help us, is OK. Not going against us and blocking others. Other countries cannot do anything directly because of India. Can't you see that my friend. India has huge population and big market for other country's products. Do you think they will loose because of eelam tamils and go against India??


I don't answer briefly enough. My typing is poor.

- Kiri

ஜோசப் பால்ராஜ் said...

கண்களை மூடிக்கொண்டு உண்மையிலேயே தூங்குபவர்களை எழுப்பிவிடலாம்.
ஆனால் தூங்குவது போல நடிப்பவர்களையும், அந்த நடிப்புத் தூக்கத்திலும் இப்படி புத்திசாலித்தனமென்று நினைத்துக்கொண்டு கேள்வி கேட்பவர்களையும் ஒன்னியும் செய்ய முடியாது.

நீங்க‌ புத்தனுமில்லை..ஞானச் சித்தனுமில்லை...வெறும் பித்தன்!

யட்சன்... said...

அனானி நண்பரே...

நச்சுன்னு பதில் சொல்லிருக்கீங்க...நன்னி..

சென்ஷி...

திட்டமிட்டெல்லாம் எழுதலை...திடீர்னு தோனிச்சு எழுதீட்டேன். மத்தவங்க மாதிரி அநாகரிகமாவோ தரக்குறைவாகவோ கொச்சைப்படுத்தியோ எழுதலை. என் கேள்விகளில் குறைந்தபட்ச நியாயம் கூட இல்லை என எவராலும் சொல்ல முடியாது.

அப்புறம் சொன்னா கோவிக்க கூடாது...உங்க கவிதைகள்லயே எனக்கு புரிஞ்ச கவிதை இது ஒன்னுதான் ...ஹி..ஹி..

யட்சன்... said...

வீனா...

சந்தர்ப்பவாதம்...அதுக்கேத்த மாதிரி தங்களை நியாயப்படுத்திகிறது, இதுதான் இப்பொ எங்கெயும் நீக்கமற நிறைந்திருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் நமது மான்பு மிகு அரசியல் வாதிகளாகட்டும், திரு.பிரபாகராகட்டும் தங்களை எப்பொழுதுமே குற்றமற்றவர்களாகவே கருதிக்கொள்கின்றனர்.

விமர்சனங்களை தாங்கிக்கொள்ளாதது ஒரு புறமிருந்தாலும் அதன் நியாயங்களை எடைபோட்டு தங்களை புதுப்பித்துக் கொள்ளவோ திருத்திக் கொள்ளவோ எவரும் முனைவதில்லை....

இத்தகைய போக்குதான் பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்துகிறது.

Anonymous said...

Hi Yatchagan,

I'm not anony. I gave my name @ last. but I don't have account. Sorry about it.


//திட்டமிட்டெல்லாம் எழுதலை...திடீர்னு தோனிச்சு எழுதீட்டேன். மத்தவங்க மாதிரி அநாகரிகமாவோ தரக்குறைவாகவோ கொச்சைப்படுத்தியோ எழுதலை. என் கேள்விகளில் குறைந்தபட்ச நியாயம் கூட இல்லை என எவராலும் சொல்ல முடியாது.//

Your questions are correct nothing wrong about it.

Keep writing.

- Kiri

யட்சன்... said...

அனானி நண்பரே...

ஒவ்வொரு கேள்விக்கும் சிரமேற்கொண்டு உங்களின் எண்ணங்களை பதிலாக்கியதற்கு நன்றி.

இத்தகைய ஆரோக்கியமான விவாதங்களையே நான் எதிர்பார்க்கிறேன்.

யட்சன்... said...

ஜோசஃப்...

தூங்கிக் கொண்டிருப்பவனை தாமதமாய் கூட எழுப்பிக்கொள்ளலாம். ஆனால் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறவனை உடனடியாக காப்பாற்ற வேண்டியது அவசியம்.

நோய்க்கு மருந்துதான் தீர்வேயொழிய, அனுதாபங்களும், ஆதரவும் தீர்வாகாது.

என்னை பித்தனென ஒப்புக்கொண்டதற்கு நன்றி...நீங்கள் ஒருவர்தான் பாக்கி....டேங்ஸ்

சென்ஷி said...

/அப்புறம் சொன்னா கோவிக்க கூடாது...உங்க கவிதைகள்லயே எனக்கு புரிஞ்ச கவிதை இது ஒன்னுதான் ...ஹி..ஹி..//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

ரொம்ப சந்தோசம்.. ஆனாலும் அது நான் எழுதுனது இல்லை. வெறும் டைப்பிங்க் மாத்திரம்தான். அதை எழுதுனது கவிஞர் பேரு இரா. பூபாலன் :-)

யட்சன்... said...

வாக்களித்த அன்பர்களுக்கு நன்றி...தமிழ் மணத்தில் வாசகர் பரிந்துரையில் வரவிடாமல் செய்வதற்காக எதிர்வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றி..நன்றி...

ஹி...ஹி...

Anonymous said...

//முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக தமிழீழம் வருகிறது...வந்து கொண்டிருக்கிறது...வந்து விட்டது என்று நீங்கள் சொன்னதை வாய்பிளந்து உளம் மகிழ்ந்து கேட்ட அப்பாவி ஈழத்துப் பொதுமகனுக்கு, அல்லது வேர்வை சிந்தி உழைத்த தங்கள் பணத்தை ஆயுதம் வாங்கிட அள்ளி அள்ளிக் கொடுத்த புலம் பெயர்ந்த தமிழனுக்கு நீங்கள் இது வரையில் நீங்கள் திரும்பக் கொடுத்தது என்ன?//

பாவம் அவர் தமிழீழம் கிடைக்கும் என்று தான் யோசித்து இருப்பார்.
இடையில் உங்கள் தலைவி சோனியா இப்படி நச்சு ஆயுதம் வழங்கி
தம்மை அழிப்பார்கள் என்று அவர்கள் யோசித்து இருக்க வாய்ப்பில்லை.

போரை தொடங்கும் போது அரசாங்கத்திடம் உள்ள ஆயுத, படை பலத்தை
கணக்கு பார்த்து வியூகம் அமைத்திருப்பார்கள்.
அம்மா மேலதிக படையை அனுப்புவார் என்று அவர் யோசித்திருக்க‌
வாய்ப்பில்லை தான்.