அவளுக்காய்....ம்ம்ம்ம்ம்

Sunday, October 26, 2008மாடிபடியின் வளைவொன்றில் மின்னல்கீற்றாய்...

எப்பவாவது என்னை நினைக்கறியா?

மறக்கமுடியுமா!...பொய்சொன்னேன்

தப்பு பண்ணீட்டேன்,நீயாவது போகாமலிருந்திருக்கனும்

மௌனமாய் வெறுமையாய் கொஞ்சம் எரிச்சலாய்....

நல்லாருக்கியா? - நான்

ப்ப்ப்ச் - அவள்

நீ ?

இருக்கேன்...

இன்னும் என் மேல கோவமாயிருக்கியா?

அதையெல்லாம் நான் அப்பவே மறந்துட்டேன்

என்னால உன்னை மறக்க முடியலைடா

தப்பு பண்ணீட்டேன்...தடுமாறினாள்

அவசரமாய் போய்ட்டு இருக்கேன்

எனக்கு வேலையில்லை நான் கூட வரவா?

ம்ம்ம்ம்...Too late

அர்த்தமாய் சிரிக்கிறாள்...

மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லு

சிரித்துக்கொண்டே கடக்கிறேன்...

மேலேறி திரும்பிப்பார்கிறேன்....

பார்த்துக்கொன்டு நின்றவளிடம்...

கையாட்டி கடந்து போனேன்.

ஹேய்...தீபாவளி...

நாட்ல பொருளாதார நெருக்கடின்றாய்ங்க, பங்குமார்க்கெட் பங்ச்சராய் எல்லாப்பக்கமும் காத்துப் போவுது, விலவாசி அரசியல்வாதியோட சொத்து மாதிரி அதிகமாய்ட்டே போவுது, டாலர் என்னடான்னா எகிறுதுன்றாய்ங்க ஆனாலும், ங்கொக்கா மக்கா...எங்கிட்டு திரும்பினாலும் கூட்டம், நம்ம பயல்ககிட்ட காசுகொட்டி கெடக்குதுன்னேன்.

நமக்கும் தீபாவளிக்கும் பெருசா சொந்தபந்தமெல்லாம் கெடயாது...பொங்கல்லதான் நம்ம கும்மியெல்லாம். ஆனாலும் கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு ஒன்னு இருக்கே...(என்னடா பெரிய வார்த்தையெல்லாம் எளுதறானேன்னு ஃபீலாவாதீங்க...கல்லாயணம் ஆன பயபுள்ளைகளுக்கு நான் எதைச்சொல்றேன்னு புரியும்,தெரியும்.)அதுகாக இந்த சம்பிரதாயத்துக்கெல்லாம் தலைவணங்கி வருசா வருசம் மொட்டையடிச்சிக்கறது உண்டு. ஆனா என்ன ஆனாலுஞ்சரி எனக்கு மட்டும் புது உடுப்பெல்லாம் வாங்க மாட்டேன். ஹைகமாண்ட் வாங்கீட்டு வந்து போட்டுக்கடான்னு மெரட்டுனாக்கூட எதனாச்சும் டகால்ட்டி வேலை காட்டி வம்பா பழசத்தான் போட்டுக்கறது.

இம்புட்டு வீம்பும், நானெல்லாம் தமிழன்ன்னு காட்டிக்கி்றதுக்காகத்தான்....ஹி..ஹி...

ஆனா நம்ம வூட்ல அப்டீல்லாம் இல்லை, பயபுள்ளைக ஒரு மாசம் முன்னாலயே ஏதோ ராக்கெட் ஏவுற கணக்கா கவுண்ட்டவுன் ஆரம்பிச்சிட்டாய்ங்க...பெர்ஃபெக்ட் கவுண்டவுனாக்கும்,இதுவரை ஒரு இடத்துல கூட ஒரு சின்ன தப்பு நடக்கல, என்ன எண்ணி எண்ணி கொடுக்கும்போது மட்டும் ஊருக்குள்ள எம்புட்டு பேரு கஷ்டப்படறாய்ங்க இப்படி பொறுப்பில்லாம செலவு பன்றமேன்னு உறுத்தும். ஆனாலும் இத்தகைய சந்தோசங்கள் தேவைப்படுது...சுத்தியிருக்கறவுங்கள சந்தோசப்படுத்தி பாக்கறது ஒரு சந்தோசந்தானே....

இந்த பதிவுல அத எளுதலாமான்னு தெரியல...ஆனா நான் பதிவெளுதற வேகத்துக்கு இந்த பதிவ விட்டா அப்புறம் இந்த மேட்டர் ஆறி பழசாயிரும்....ம்ம்ம்ம்

என்னாடா ரொம்ப பில்டப்புறேனேன்னு டென்சனாவாதீங்கோ...இந்த இலங்கை மேட்டர்தான் அது...நான் சொல்றது நெறயபேருக்கு புடிக்காதுதான், என்ன பண்றது, இத என் ப்ளாக்குல கூட ப்ளாக்கலைன்னா நான் வேற எங்கன போய் சொல்றது....

மக்கா...எங்கூருபக்கம் ஒரு பழமொழி சொல்வாய்ங்க...

உப்புத்தின்னா தண்ணி குடிச்சாவனும்....ராசீவ் காந்தி உப்பத்தின்னாரு, தண்ணிய குடிச்சாரு, அமைதிப்படை உப்ப தின்னுச்சு தன்னிய குடிச்சிச்சு, பிரேமதாசா உப்பத்தின்னாரு தண்ணிய குடிச்சாரு, லக்‌ஷ்மன் கதிர்காமர் உப்பத்தின்னாரு தண்ணிய குடிச்சாரு...இந்த வரிசையில பிரபாகரன் உப்பத்தின்னாரு இப்ப தண்ணிய குடிக்கறாரு, ராஜபக்‌ஷே உப்ப தின்னுட்டு இருக்காரு எப்பவாச்சும் கட்டாயமா தண்ணிய குடிப்பாரு....

ஆனா...இந்த வக்கத்த அப்பாவிச்சனங்க என்னய்யா பாவம் பண்ணுச்சு, புள்ளையுங்குட்டியுமா கொத்துக்கொத்தா செத்த்துப் போறாய்ங்களே..ஒரு பயலும் அதைப்பத்தி கவலைப்படல...தன் குண்டிக்கி கீழ நெருப்பு எரியும்போது மட்டுந்தான் அமைதின்றானுங்க, சமாதான தீர்வுன்றானுங்க, போர் நிறுத்தம்ன்றாய்ங்க...தமிழ்நாட்டுத்தமிழனெல்லாம் வரிச கட்டி நின்னு ஆதரவு தரணும்ன்றாய்ங்க. நான் ரெண்டுபேரயுந்தான் சொல்றேன்...புரியுதா!

உள்ளூர் அரசியல்ல பருப்பு வேகனுமேன்னு இன்ஸ்டண்ட் தமிழுனர்வு வந்து சுருசுருன்னு கெளம்பி இலங்கை தமிழனுக்காவ அரசியல் பண்றாய்ங்க....சரி அவய்ங்களுக்கு ஏதோ ஆதாயமிருக்குமாக்கும், நெனச்சா சினிமாவுல இருந்து செல சிந்தனை சிற்பிகளெல்லாம் கெளம்பி ராமேஸ்வரம் போய் ஒத்திகையில்லாம நடிச்சிட்டு வந்திருக்காய்ங்க...அதுல ரெண்டு பேர் மப்புல உளறி வச்சி இன்னிக்கு இலங்கை தமிழனுக்கு இன்னொரு நம்பிக்கை நச்சத்திராமாய்ட்ட கொடுமைய எங்கனன்னு போய்ச்சொல்லுவேன்.

இத்தன ட்ராமாவும் நடந்து என்னடா விளைவுன்னு பார்த்தா,அண்ண்ன் தீவாளி காசு வாங்கீட்டு வரச்சொன்னாருங்கற் மாதிரி ராஜபக்‌ஷேயோட தம்பி டெல்லிக்கு வந்து பல்லைகாட்டீட்டு நிக்கறார். இத்தன கூத்தும் இலங்கைல தெனந்தெனம் செத்து சுண்ணாம்பாவுறானே அவனுடைய நலனுக்கு ஒரு மயித்தயும் புடுங்கலை...இனியும் புடுங்கப்போறதில்லை.

பெரச்சினையோட அடியாளத்துல போய் பார்த்தம்னா இலங்கை அரசாங்கமுஞ்சரி, தமிழீழ விடுதலைப்புலிகளுஞ்சரி....ரெண்டு பேருமே யோக்கியமில்லை. ரெண்டுபேருக்குமே வாய்ச்சுத்தமுமில்லை....ரெண்டு பேருமே விட்டுக்கொடுக்கவிரும்பலை...ரெண்டு பேருக்குமே அமைதியிலயோ, சமாதானத்துலயோ, தன்ன நம்பியிருக்கற மக்களை பத்தின அக்கறையோ இல்லை. ஆக ரெண்டு பேருமே கடைஞ்செடுத்த காரியவாதிகள்...அறிவியல்ல என்ன சொல்றாய்ங்கன்னா எதிர் துருவத்த ஒன்னோட ஒன்னா ஒட்டவச்சிரலாம்...ஆனா ஒரே துருவத்த ஒன்னோட ஒனனா ஒட்ட வைக்க முடியுமா...

கொள்ளிக்கட்டைய வச்சி சமைக்கலாம்...இவய்ங்க அதவச்சி தலையச்சொறிவோம்ன்னு அலையும் போது நாம என்னத்தச்சொல்றது...

அதனால....

இப்பதைக்கு தீவாளிய கொண்டாடீட்டு அப்பாலிக்கா இந்த மேட்டர பத்தி மறுபடி யோசிப்போம்...ஏன்னா இது மெகாசீரியல் மாதிரி அத்தனை சீக்கிரத்துல முடிக்க மாட்டாய்ங்க, இந்த ட்ராமா போய்ட்டேதானிருக்கும்.

வெட்கக்கேடு....

Wednesday, October 15, 2008

உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தும், தண்ணீர் தரமறுத்த கர்நாடகாவின் அடாத செயலை தட்டிக்கேட்டு கூண்டோடு ராஜினாமா செய்ய துப்பில்லாதவர்கள்....

முல்லைப் பெரியாற்றுப் பிரச்சினையில் கூண்டோடு ராஜினாமா செய்ய வக்கற்றவர்கள்....

கர்நாடகமெங்கும் சக தமிழன் விரட்டி விரட்டி அடிக்கப்பட்ட போது கூண்டோடு ராஜினாமா செய்யும் சொரணையற்றவர்கள்....

இப்போது கூண்டோடு ராஜினாமா செய்கிறார்களாம்...

வெட்கக்கேடு...

இன்னிக்கு ஆயுத பூசை......

Tuesday, October 7, 2008எல்லாரும் கும்புட்டுங்கங்கப்பேய்....