ஹேய்...தீபாவளி...

Sunday, October 26, 2008

நாட்ல பொருளாதார நெருக்கடின்றாய்ங்க, பங்குமார்க்கெட் பங்ச்சராய் எல்லாப்பக்கமும் காத்துப் போவுது, விலவாசி அரசியல்வாதியோட சொத்து மாதிரி அதிகமாய்ட்டே போவுது, டாலர் என்னடான்னா எகிறுதுன்றாய்ங்க ஆனாலும், ங்கொக்கா மக்கா...எங்கிட்டு திரும்பினாலும் கூட்டம், நம்ம பயல்ககிட்ட காசுகொட்டி கெடக்குதுன்னேன்.

நமக்கும் தீபாவளிக்கும் பெருசா சொந்தபந்தமெல்லாம் கெடயாது...பொங்கல்லதான் நம்ம கும்மியெல்லாம். ஆனாலும் கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு ஒன்னு இருக்கே...(என்னடா பெரிய வார்த்தையெல்லாம் எளுதறானேன்னு ஃபீலாவாதீங்க...கல்லாயணம் ஆன பயபுள்ளைகளுக்கு நான் எதைச்சொல்றேன்னு புரியும்,தெரியும்.)அதுகாக இந்த சம்பிரதாயத்துக்கெல்லாம் தலைவணங்கி வருசா வருசம் மொட்டையடிச்சிக்கறது உண்டு. ஆனா என்ன ஆனாலுஞ்சரி எனக்கு மட்டும் புது உடுப்பெல்லாம் வாங்க மாட்டேன். ஹைகமாண்ட் வாங்கீட்டு வந்து போட்டுக்கடான்னு மெரட்டுனாக்கூட எதனாச்சும் டகால்ட்டி வேலை காட்டி வம்பா பழசத்தான் போட்டுக்கறது.

இம்புட்டு வீம்பும், நானெல்லாம் தமிழன்ன்னு காட்டிக்கி்றதுக்காகத்தான்....ஹி..ஹி...

ஆனா நம்ம வூட்ல அப்டீல்லாம் இல்லை, பயபுள்ளைக ஒரு மாசம் முன்னாலயே ஏதோ ராக்கெட் ஏவுற கணக்கா கவுண்ட்டவுன் ஆரம்பிச்சிட்டாய்ங்க...பெர்ஃபெக்ட் கவுண்டவுனாக்கும்,இதுவரை ஒரு இடத்துல கூட ஒரு சின்ன தப்பு நடக்கல, என்ன எண்ணி எண்ணி கொடுக்கும்போது மட்டும் ஊருக்குள்ள எம்புட்டு பேரு கஷ்டப்படறாய்ங்க இப்படி பொறுப்பில்லாம செலவு பன்றமேன்னு உறுத்தும். ஆனாலும் இத்தகைய சந்தோசங்கள் தேவைப்படுது...சுத்தியிருக்கறவுங்கள சந்தோசப்படுத்தி பாக்கறது ஒரு சந்தோசந்தானே....

இந்த பதிவுல அத எளுதலாமான்னு தெரியல...ஆனா நான் பதிவெளுதற வேகத்துக்கு இந்த பதிவ விட்டா அப்புறம் இந்த மேட்டர் ஆறி பழசாயிரும்....ம்ம்ம்ம்

என்னாடா ரொம்ப பில்டப்புறேனேன்னு டென்சனாவாதீங்கோ...இந்த இலங்கை மேட்டர்தான் அது...நான் சொல்றது நெறயபேருக்கு புடிக்காதுதான், என்ன பண்றது, இத என் ப்ளாக்குல கூட ப்ளாக்கலைன்னா நான் வேற எங்கன போய் சொல்றது....

மக்கா...எங்கூருபக்கம் ஒரு பழமொழி சொல்வாய்ங்க...

உப்புத்தின்னா தண்ணி குடிச்சாவனும்....ராசீவ் காந்தி உப்பத்தின்னாரு, தண்ணிய குடிச்சாரு, அமைதிப்படை உப்ப தின்னுச்சு தன்னிய குடிச்சிச்சு, பிரேமதாசா உப்பத்தின்னாரு தண்ணிய குடிச்சாரு, லக்‌ஷ்மன் கதிர்காமர் உப்பத்தின்னாரு தண்ணிய குடிச்சாரு...இந்த வரிசையில பிரபாகரன் உப்பத்தின்னாரு இப்ப தண்ணிய குடிக்கறாரு, ராஜபக்‌ஷே உப்ப தின்னுட்டு இருக்காரு எப்பவாச்சும் கட்டாயமா தண்ணிய குடிப்பாரு....

ஆனா...இந்த வக்கத்த அப்பாவிச்சனங்க என்னய்யா பாவம் பண்ணுச்சு, புள்ளையுங்குட்டியுமா கொத்துக்கொத்தா செத்த்துப் போறாய்ங்களே..ஒரு பயலும் அதைப்பத்தி கவலைப்படல...தன் குண்டிக்கி கீழ நெருப்பு எரியும்போது மட்டுந்தான் அமைதின்றானுங்க, சமாதான தீர்வுன்றானுங்க, போர் நிறுத்தம்ன்றாய்ங்க...தமிழ்நாட்டுத்தமிழனெல்லாம் வரிச கட்டி நின்னு ஆதரவு தரணும்ன்றாய்ங்க. நான் ரெண்டுபேரயுந்தான் சொல்றேன்...புரியுதா!

உள்ளூர் அரசியல்ல பருப்பு வேகனுமேன்னு இன்ஸ்டண்ட் தமிழுனர்வு வந்து சுருசுருன்னு கெளம்பி இலங்கை தமிழனுக்காவ அரசியல் பண்றாய்ங்க....சரி அவய்ங்களுக்கு ஏதோ ஆதாயமிருக்குமாக்கும், நெனச்சா சினிமாவுல இருந்து செல சிந்தனை சிற்பிகளெல்லாம் கெளம்பி ராமேஸ்வரம் போய் ஒத்திகையில்லாம நடிச்சிட்டு வந்திருக்காய்ங்க...அதுல ரெண்டு பேர் மப்புல உளறி வச்சி இன்னிக்கு இலங்கை தமிழனுக்கு இன்னொரு நம்பிக்கை நச்சத்திராமாய்ட்ட கொடுமைய எங்கனன்னு போய்ச்சொல்லுவேன்.

இத்தன ட்ராமாவும் நடந்து என்னடா விளைவுன்னு பார்த்தா,அண்ண்ன் தீவாளி காசு வாங்கீட்டு வரச்சொன்னாருங்கற் மாதிரி ராஜபக்‌ஷேயோட தம்பி டெல்லிக்கு வந்து பல்லைகாட்டீட்டு நிக்கறார். இத்தன கூத்தும் இலங்கைல தெனந்தெனம் செத்து சுண்ணாம்பாவுறானே அவனுடைய நலனுக்கு ஒரு மயித்தயும் புடுங்கலை...இனியும் புடுங்கப்போறதில்லை.

பெரச்சினையோட அடியாளத்துல போய் பார்த்தம்னா இலங்கை அரசாங்கமுஞ்சரி, தமிழீழ விடுதலைப்புலிகளுஞ்சரி....ரெண்டு பேருமே யோக்கியமில்லை. ரெண்டுபேருக்குமே வாய்ச்சுத்தமுமில்லை....ரெண்டு பேருமே விட்டுக்கொடுக்கவிரும்பலை...ரெண்டு பேருக்குமே அமைதியிலயோ, சமாதானத்துலயோ, தன்ன நம்பியிருக்கற மக்களை பத்தின அக்கறையோ இல்லை. ஆக ரெண்டு பேருமே கடைஞ்செடுத்த காரியவாதிகள்...அறிவியல்ல என்ன சொல்றாய்ங்கன்னா எதிர் துருவத்த ஒன்னோட ஒன்னா ஒட்டவச்சிரலாம்...ஆனா ஒரே துருவத்த ஒன்னோட ஒனனா ஒட்ட வைக்க முடியுமா...

கொள்ளிக்கட்டைய வச்சி சமைக்கலாம்...இவய்ங்க அதவச்சி தலையச்சொறிவோம்ன்னு அலையும் போது நாம என்னத்தச்சொல்றது...

அதனால....

இப்பதைக்கு தீவாளிய கொண்டாடீட்டு அப்பாலிக்கா இந்த மேட்டர பத்தி மறுபடி யோசிப்போம்...ஏன்னா இது மெகாசீரியல் மாதிரி அத்தனை சீக்கிரத்துல முடிக்க மாட்டாய்ங்க, இந்த ட்ராமா போய்ட்டேதானிருக்கும்.

11 comments:

யட்சன்... said...

ஹேய்...ஆராச்சும் பின்னூட்டம் போடுங்கப்பேய்...

தீவாளியும் அதுவுமா சந்தோசப்படுவம்ல....

ஜீவன் said...

ராஜபக்‌ஷே உப்ப தின்னுட்டு இருக்காரு எப்பவாச்சும் கட்டாயமா தண்ணிய குடிப்பாரு....


அருமையா சொன்னிங்க!

யட்சன்... said...

வாங்க ஜீவன்...

அவர் அநியாயத்துக்கு தண்ணிய குடிக்கப்போறாரு அதுமட்டும் நிச்சயம்.

தீபத்திருநாள் வாழ்த்துகள் ஜீவன்...

சிம்பா said...

ஏலே மக்கா... நல்லா கேட்டுகிடுங்க... இப்போ எங்க தென்னாடு சிங்கம், வைகை ஆத்து வெள்ளம், சைடு பர்டற ஒடச்சு flow ஆகிட்டு இருக்கு.

இத்தினி நாள் அடங்கி இருந்ததுக்கு காரணம் இதுதான... கொஞ்சம் கொஞ்சமா என்ட்ரி கொடுக்க...

மின்சார பிரச்சனை மறைக்கணும். அரிசி கடத்தல நல்ல படியா தொடரனும், மண்ண தோண்டி பொன்னாக்கணும். இதுக்கெல்லாம் மக்களோட கவனம் வேறு பக்கம் மாறனும்.

எடுடா தமிழீழ பிரச்சனைய.... நாலு பேர போட்டு தாக்கு.. சென்னைல இருந்து செங்கல்பட்டு வரை செயின் ந போடு...

ஆகா இப்படி பதிவு போட்டு ஒளர வச்சுட்டாங்களே...

சிம்பா said...

இப்படியெல்லாம் அவரசபட கூடாது.. சும்மா மொக்க பதிவுனா விட்டு வீசலாம்,,

இது அப்படியா..

சிம்பா said...

அதுக்காக மொத கமன்ட்ட நீங்களே போட்டுக்கிறது சுத்தமா சரி இல்ல...

யட்சன்... said...

சிம்பா...நீங்க நெம்ப ஷார்ப்பு...

நம்மூரு அரசியல்வியாதிங்களை போறபோக்குல போட்டுட்டு போனத இபப்டி கிண்டி கெழங்கெடுத்தா எப்படி...

இலங்கை தமிழனுக்கு ஆதரவா பேசுனேன்னு என்னை புடிச்சிட்டு போய்ருவாய்ங்க...ஹி..ஹி..ம்ம்ம்ம்

சிம்பா said...

இப்படி இங்க இருக்க ஆளுக ஒருத்தரை ஒருத்தர் வாரிக்கிட்டு இருகாங்க. இனி தமிழ் நாட்டையே தீவரவாதிகள் நாடுன்னு சொல்லி, வரப்போற விரிவாக்க திட்டங்கள், முதலீடுகள் எல்லாம் நிக்க போகுது..

எதுக்கும் சீக்ரமா நாமளும் வேற ஊரு பாக்கணும் போல..;)))

மாதவராஜ் said...

தீபாவளி வாழ்த்துக்கள் !

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தீபாவளி கொண்டாடமாட்டாராமா,ஆனா தீபாவளிக்கு சந்தோஷமா, இருக்க கமெண்ட் வேணுமாம் இது என்னது?
சரி வாழ்த்திக்கிறேன்..இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Senthil Kumar.R said...

தீபாவளி வாழ்த்துக்கள்