நோ தங்கமணி என்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய் !

Saturday, September 27, 2008

ஆசிஃப் அலி சர்தாரி H/O பெனாசீர் புட்டோ, அந்த அம்மா மண்டைய போடங்காட்டி, சைக்கிள் கேப்ல பாக்கிஸ்தானுக்கு அதிபரான, பணக்காரவூட்டு புள்ளையான சர்தாரி வயசுல பெரிய சோக்காளியாம்.அதாங்க அந்த ஊரு மல்லுவேட்டி மைனர்.வூட்டுக்காரம்மா போய்ச்சேர்ந்த சோகத்துல கொஞ்சநாள் சோகமாருக்கற மாதிரி டகால்ட்டி வேலையெல்லாம் காட்டீட்டு மனுசன் இப்ப பூந்து வெள்ளாட்றார், சமீபத்துல...அட நம்புங்க மெய்யாலுமே சமீபத்துல அமெரிக்கா போன இடத்துல சாரா பாலின், அதாங்க துனை ஜனாதிபதிக்கு நிக்கிறாங்களே,(ஹூம்ம்ம்ம்ம்...இந்த இடத்தில் எனது பெருமூச்சினை பதிந்து வைக்கிறேன்), அந்தம்மா ஒரு மருவாதிக்கு மீட்பண்ண வந்தா நம்ம மைனர் குஞ்சு இன்னா மாதிரி ப்ராக்கட் போடறார் பாருங்க....

சாரா...என்னா மாதிரி வழியுது பாருங்க....நமக்கில்லை...நமக்கில்லை...

நெஞ்சத்தொட்டு சொல்லுங்க யார் பெஸ்ட்...!

Friday, September 26, 2008

எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த இரண்டு ஒளித்துண்டுகளையும் பாருங்கள். பார்த்து/கேட்டு விட்டுச் சொல்லுங்கள்....யார் பெஸ்ட்.


அமைதியான பின்னிரவில்....மொட்டை மாடியின் தனிமையில், தலைமாட்டில் இந்த பாடல் மெலிதாய் ஒலிக்க நட்சத்திரங்களை எண்ணிய நாட்கள் மட்டும் திரும்ப கிடைக்குமானால் நான் எதுவும் செய்ய தயாராக இருக்கிறேன். அத்தனை பொக்கிஷமான தருணங்கள்....

சுசீலாவும் , லதாவும்...கொஞ்சம் கொஞ்சமாய் உயிர்வரை ஊடுருவும் குரல் ராட்சசிகள்....ஒரு அதி காலையில் விழுப்புரம் அர்ச்சனா உணவகத்தில்,திருமதி.சுசீலாவை நேரில் கண்ட மாத்திரத்தில் கொஞ்சம் தடுமாறி, செய்வதறியாது காலைத்தொட்டு வண்ங்கிய போது அந்த தேவதை முகத்தில் காட்டில பெருமிதமான சிரிப்பும், என் தலையை தொட்டு நல்லாயிருங்க என சொன்ன வார்த்தைகளும்....வாழ்நாளைக்கும் போதும்.

இம்புட்டு நாளா இது தெரியாம போச்சே...!

Wednesday, September 24, 2008

இன்றைக்கு எக்குத்தப்பாய் கையில் சிக்கிய அரவிந்தரின் ஒரு புத்தகத்தை அப்டீக்கா மேலாப்ப்ல மேஞ்சிட்டு இருந்தப்ப ஒரு மேட்டர் பச்சக்குன்னு மனசுல ஒட்டுச்சு, வலையுலக தர்மத்தின் படி உடனடியா அதை சபையில வைக்கிறேன்....படிச்சுப்பாருங்க....

“மெய்யான கல்வியின் முதலாவது அடிப்படைக் கொள்கை, எதையும் கற்பிக்க முடியாது என்பதேயாகும். ஆசிரியர், பாடங்களை எடுத்துச் சொல்லும் அறிவுரையாளரோ, வேலை வாங்கும் மேலாளரோ அல்லர், அவர் உதவியளித்து வழிநடத்துபவர் ஆவார். கருத்துக்களைச் சுட்டிக்காட்டுவதே அவருடைய பணியாகும், அவற்றை வலிய சுமத்துவதன்று.உண்மையில் ஆசிரியர் மாணவனின் மனத்துக்குப் பயிற்சியளிப்பதில்லை, மாணவன் தன் அறிவு சாதனங்களை எவ்வாறு செம்மைப்படுத்திக் கொள்ளலாம் என்பதை அவனுக்குக் காட்டி, அதில் அவனுக்கு ஆதரவளித்து ஊக்கமூட்டுகிறார். அவர் மாணவனுக்கு அறிவை கொடுப்பதில்லை.அவன் எவ்வாறு தன் முயற்சியால் அறிவை எய்தக் கூடும் என்பதை அவனுக்கு காண்பிக்கிறார்.ஆசிரியர் உள்ளிருக்கும் அறிவை வெளிக்கொணர்வதில்லை; அறிவு எங்கே புதையுண்டு கிடக்கிறது என்பதையும், அதை எவ்வாறு மேற்பரப்பிற்கு அடிக்கடி எழுந்து வருமாறு பழக்கப்படுத்தலாம் என்பதை அவர் அவனுக்கு காண்பிக்கிறார்”


- ஸ்ரீ அரவிந்தர்


இப்ப மேட்டருக்கு வருவோம்...இந்த சமாச்சாரம் இவ்வளவு நாளா எனக்கு தெரியாததால நாந்தான் மக்கோன்னு நினைச்சிட்டு இருந்தேன்...இப்பத்தான் புரியுது, தப்பு நம்ம மேல இல்லை நமக்கு சொல்லிக்குடுத்த புண்ணியவான்களோட கைங்கர்யந்தான்னு...

ஹி....ஹி...

நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே....

Friday, September 19, 2008

ஆடிக்கொன்றும் அம்மாவாசைக்கொன்றுமாய் பதிவெழுதுவதே எனக்கு வழக்கமாய் போய்விட்டது. நான் பதிவெழுதாவிட்டால் ஒன்றும் குறைந்து விட போவதில்லைதான், ஆனாலும் உள்ளேன் ஐயா என பின்வரிசையில் இருந்து குரல் கொடுக்கவாவது அவ்வப்போது இந்த மாதிரி எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

வர வர தமிழில் பெண்பதிவர்கள், பதிவெழுதுவதை குறைத்துக் கொண்டே வருகிறார்கள் என்பது என்னுடைய அவதானம். இப்படியே போனால் பதிவுலகில் பெண்பதிவர்களே இல்லாமல் போய்விடும் ஆபத்தினை இந்த நிலையிலாவது உண்ர்ந்து புதிய பழைய பெண் பதிவர்களை ஊக்குவிப்பதாய் சபதமெடுத்திருக்கிறேன். அதற்காக நீங்கள் யாரேனுமென்னை ஜொள்ளு பார்ட்டி என கேலி செய்தாலும் கவலையில்லை.

நம்ம பரிசல் மாதிரி ஒரு சோப்பு பதிவு போடுவோமென்றுதான் இந்த பதிவினை துவக்கினேன், ஆனால் சம்மந்தப்பட்ட பார்ட்டி இந்த பக்கமெல்லாம் வருவதில்லை என்பதால் ஏதேதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு செய்தியை மட்டும் இந்த இடத்தில் பதிந்து வைக்க விரும்புகிறேன். சிங்கத்தை கூண்டுல அடைச்சி இன்னியோட பன்னிரெண்டு வருசமாச்சு...ம்ம்ம்ம்

இந்த இடத்தில் ஒரு பாட்டு....அருமையான பாட்டு....இந்த மாதிரியான சிக்கலான இசை கட்டமைப்போடு இப்போதைய பாடல்கள் வருவதில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. சம்மந்தப்பட்ட பார்ட்டிக்கு ரொம்பவும் பிடித்த பாட்டு இது, இன்றைக்கு கோவிலுக்கு போய்விட்டு வரும்போது இந்த பாடலினை கண்ணை மூடி ரசித்துக் கொண்டே வந்தார், பார்க்கவே சந்தோஷமாயிருந்தது...வேறென்ன வேண்டும் வாழ்க்கையில்....

குன்னக்குடி வைத்தியநாதன் மரணம்....

Monday, September 8, 2008


வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் சற்றுமுன் காலமானார். அன்னாருக்கு வயது 73. இன்று இரவு மருத்துவமனையொன்றில் உடல்நலக்குறைவின் காரணமாய் காலமானார்.