டோண்டுவும், செயமோகனும் ,செந்நாயும் பின்னே ஒரு வயித்தெறிச்சலும்....
Monday, November 17, 2008
நான் படிப்பதை நிறுத்தி வருடஙகள் ஆகிவிட்டது...அனேகமாய் படிப்பதில் இருந்து ரிட்டயர்மெண்ட் அறிவித்த ஒரே ஆள் நானாகத்தான் இருக்கும். கல்லூரி இறுதி நாளன்று ஒரு பெரிய பார்ட்டி வைத்து நண்பர்களிடம்...புதியவர்களுக்கு வழிவிடவும், தொடர்ந்து படித்துக் களைத்து(?) விட்டதாலும், நானொருவனே எல்லாவற்றையும் படித்துக்கிழிக்க வேண்டுமென்கிற பேராசை இல்லாததாலும்....இன்று முதல் படிப்பதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தவன். இருந்த போதும் காசுக்காக காட்சிப் போட்டிகளில் விளையாடும் ரிட்டயர்ட் கிரிக்கெட்டர்களைப் போல அவ்வப்போது எதையாவது ஆர்வக் கோளாறால் படித்துத் தொலைத்து விடுகிறேன்.
முதலில் இந்த ஜெயமோகன் என்கிற எழுத்தாளரை முந்தாநாள் வரை நான் படித்ததேயில்லை,அந்த ஆள் மலையாள எழுத்துக்களை டிங்கரடித்து தமிழில் போனி செய்யும் ஆசாமியாத்தான் உருவகித்து வைத்திருந்தேன்.
இத்தனை பில்டப் எதுக்குன்னா...நேத்து நம்ம பெரியவர் டோண்டு, திரு.ஜெயமோகன் எழுதிய ஊமைச்செந்நாய் என்கிற கதையை பற்றி எழுதியிருந்தார்...நேரமிருந்து தொலைத்த படியால் படிக்கத்துவங்கினேன்.
பெரிசாய் கதையென ஒன்றுமில்லைதான் இல்லை, சம்பவங்களின் தொடர்ச்சியினை, ஒரு சின்ன புள்ளியில் இருந்து கோடிழுத்த மாதிரியாய் நீட்டிக்கொண்டே போயிருக்கிறார்....போகிற வழியில் அந்த கோட்டின் விளிம்புகளில் அலங்கார வில்லைகளை ஒட்டியதைப் போல விவரனைகள். முதல் வாசிப்பில் விவரனைகள் மட்டுமே தங்கியது, அடுத்த வாசிப்பில் உள்ளார்ந்த சமூக கீறலகளை அவதானிக்க முடிந்தது. ஒரு வேளை வருடக்கணக்கில் இந்த மாதிரியான கதைசொல்லிகளின் எழுத்துகக்ளை வாசிக்காததனால் ஒரு ஆச்சர்யம் வந்ததா, இல்லை உண்மையில் உணர்வுகளின் ஊடே கிழித்துப் பாயும் தீர்க்கத்துடன் எழுதப்பட்டிருக்கிறதா என்பதை படித்துப் பார்த்துச் சொல்லுஙகள். தொடுப்புக்கு டோண்டுவின் பதிவில் போய் பாருங்கள்...ஹி...ஹி...ம்ம்ம்ம்
அடுத்து இன்றைக்கு மதியம் வண்டியோட்டிக்கொண்டிருந்த போது ஒரு எஃப்.எம் ரேடியோவில் கேட்டது, நிலையத்தின் பெயர் நினைவில்லை. அதுல ஒரு ப்ரோக்ராம்...,
எவனாவது எவளையாவது....டாவு கட்டனும்னு தோனிச்சுன்னா உடனே அங்கன போன் போட்டு அந்த அறிவிப்பாளர்கிட்ட அந்த புள்ளையோட பேரையும், அதோட போஃன் நம்பரையும் குடுத்துட்டு...அந்த புள்ளைக்காய் எப்படி ஃபீலாவுறோம்னு சொல்லிடனுமாம். உடனே அந்த காதல் தூதர்..அதாங்க அந்த அறிவிபபளரு....நேரலையிலயே அந்த புள்ளைய போஃன்ல கூப்ட்டு, இந்த மாதிரி இந்த மாதிரி..இவர தெரியான்னு மொதல்ல கேப்பாராம். உடனே அந்த புள்ளையும் ஆமா அவர தெரியும்னு சொல்லுச்சுன்னா...உடனே டகால்னு அந்த பயபுள்ள உன்ன நெனச்சே கெறங்கி கெடக்கான், என்னத்தா சொல்றன்னு இவரு கேப்பாராம். அந்த புள்ள மட்டும் தடுமாறி சிக்னல் கொடுத்தா கொண்டாடிருவானுங்களாம்...இல்லாங்காட்டி இந்த பயலுக்கு பெட்ட்ர் லக் நெக்ஸ்ட் டைம்னு சொல்லீருவாய்ங்களாம்.
அந்த வரிசையில...இன்னிக்கு ”நாய்னா” ஒரு பயபுள்ள...ஹாசினின்னு ஒரு பொன்னு பேரச்சொல்லி அந்த புள்ளய பாக்கும் போதெல்லாம் உள்ளார சுளுக்கெடுத்த மாதிரி ஃபீலிஙகாவுதுன்னு கதவிட்டான்...அவய்ங்களும் சரி அந்த புள்ளயாண்ட பேசுவோம்னு பேசுனாய்ங்க...அது ரொம்ப உசாரா நான் ஏற்கனவே கமிட் ஆய்ட்டேன்...சாரி பாஸ்னு..கூலா பீலாவுட...இந்த பக்கம் பய பங்ச்சராக...அறிவிப்பாளர் பெட்டர் லக்ன்ன்ன்ன்ன்ன்னு...சொல்லல்ல...
மளமளன்னு...ஆறேழு புள்ளங்க படம் வரிசயா மனசுல ஓடிச்சு...அடப்பாவிங்களா...ஒரு 15 வருசம் முன்ன்னால இந்த மாதிரி ப்ரோக்ராம் வச்சிருந்தா வரிசையா லிஸ்ட் வச்சி தெனம் ஒரு புள்ளைக்கு நூல்விட்டு பார்த்திருப்பேனேன்னு...வயித்தெறிச்சல்...என்னத்தச் சொல்ல...ஹி..ஹி...
Posted by யட்சன்... at 6:58 AM 10 comments
சின்னப்பயலுக சண்டை....ம்ம்ம்ம்ம்
Thursday, November 13, 2008
ங்கொய்யால...பதிவு எழுதாமலா சுத்தீட்டு இருக்ற...இப்ப எழுதுவேல்ல...என்பது மாதிரியாய் தூண்டிய நிகழ்வு நேற்றைய சென்னை சட்டக்கல்லூரி வளாகத்தைய நிகழ்வுகள். சரி சீரியஸா ஒரு பதிவு எழுதுவோம்னு தமிழ்மணம் பக்கம் வந்தா அல்லாரும் கருத்து கந்தசாமியாய் பதிவெழுதி குவித்து விட்டபடியால்...அதை பெரிதாய் தொட்டுத்தொடர விருப்பமில்லை.
ஆதிக்க சாதி...அடிமை சாதிகளாய் வெளிச்சம் காட்டப்பட்டவர்கள் மோதிக்கொண்டிருக்கிறார்கள்...அவ்வளவே!
தலையிட்டாலும், இடாவிட்டாலும் அவர்கள் தலை உருளப்போவது உறுதியென்கிற நிலையில் போலீஸார் வேடிக்கை பார்த்தது இயலாமையின் நிதர்சனம்...
இத்தனை பிரச்சினை நடுவில் கல்லூரி முதல்வர் என்ன செய்து கொண்டிருந்தார்?
ங்கொய்யால...
நேற்று சக மாணவர்களை மனிதாபிமானத்துடன் தாக்கிய அந்த மாணவச்செல்வங்களுக்கு பின் வரும் பாடலை டெடிக்கேட் செய்கிறேன்....
Posted by யட்சன்... at 6:18 AM 8 comments