சின்னப்பயலுக சண்டை....ம்ம்ம்ம்ம்

Thursday, November 13, 2008

ங்கொய்யால...பதிவு எழுதாமலா சுத்தீட்டு இருக்ற...இப்ப எழுதுவேல்ல...என்பது மாதிரியாய் தூண்டிய நிகழ்வு நேற்றைய சென்னை சட்டக்கல்லூரி வளாகத்தைய நிகழ்வுகள். சரி சீரியஸா ஒரு பதிவு எழுதுவோம்னு தமிழ்மணம் பக்கம் வந்தா அல்லாரும் கருத்து கந்தசாமியாய் பதிவெழுதி குவித்து விட்டபடியால்...அதை பெரிதாய் தொட்டுத்தொடர விருப்பமில்லை.

ஆதிக்க சாதி...அடிமை சாதிகளாய் வெளிச்சம் காட்டப்பட்டவர்கள் மோதிக்கொண்டிருக்கிறார்கள்...அவ்வளவே!

தலையிட்டாலும், இடாவிட்டாலும் அவர்கள் தலை உருளப்போவது உறுதியென்கிற நிலையில் போலீஸார் வேடிக்கை பார்த்தது இயலாமையின் நிதர்சனம்...

இத்தனை பிரச்சினை நடுவில் கல்லூரி முதல்வர் என்ன செய்து கொண்டிருந்தார்?

ங்கொய்யால...

நேற்று சக மாணவர்களை மனிதாபிமானத்துடன் தாக்கிய அந்த மாணவச்செல்வங்களுக்கு பின் வரும் பாடலை டெடிக்கேட் செய்கிறேன்....

8 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பாட்டு.. கேட்டாச்சு..

ஆனா பாவம் அந்த பாப்பா.. என்ன அழுகை.. என்ன அழுகை..

தமிழ் அமுதன் said...

சட்டம் படிச்சவங்க அதான்
''சட்டத்த'' கைல எடுத்துகிட்டாங்க!

அதுல என்ன தப்பு!

ஜனநாயக நாட்டில இதெல்லாம்
''ஜகஜம்''

போலீஸ் என்ன பண்ணுவாங்க?

எல்லோரும் சிரிப்பு போலீசா மாறிட்டங்க!

யட்சன்... said...

கவி.முத்துலட்சுமி...

உண்மையில் மிக அருமையான பாடல்...இப்ப இந்த மாதிரி பாட்டு வர்றதில்லை...

உங்க தேன்கிண்ணத்துல இந்த பாடலை சேர்க்கலாமே !

யட்சன்... said...

ஜீவன்..

கொலைவெறியோடதான் பதிவெழுத வந்தேன்...ஆனா தமிழ்மணத்துல ஆளாளுக்கு எழுதியிருந்ததை படிச்சவுடனே எரிச்சல்தான் வந்தது...

பிரச்சின்

யட்சன்... said...

பிரச்சினைகள் நடந்தவுடன் நாமெல்லாம் உத்தமர்களாகி கருத்துச்சொல்வது மாதிரி எரிச்சலான செயல் எதுவுமில்லை என்றே நினைக்கிறேன்....

நடந்தவைகளுக்கு நாம் அனைவரும் ஏதோ ஒருவகையில் பொறுப்பாளிகள் என்பதை உணரத்துவங்கினாலே வருங்காலத்தில் இத்தகைய நிகழ்வுகளுக்கு அவசியமிருக்காது....

சிம்பா said...

குரு இன்னிக்கு தந்தி பேப்பர்ல பார்த்து தான் இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு தெரிஞ்சது.. அடி வாங்கின மாணவனோட அம்மா எதோ பேட்டி குடுத்தாங்க போல..

ஒரு வேலை அடி வாங்கின அந்த பையன் வச்சுருந்த கத்தி யாரோட உடம்புல பாஞ்சிருந்தா.. உசுரு போனா வராது.. இந்த லட்சணத்துல இவங்க இனி சட்டத்த காப்பாத்த போறாங்களா...

படிக்கும் போது இப்படி ரௌடித்தனம் பண்ற இவங்க இருக்கிறதும், இல்லாததும் ஒன்னு தான்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அதிகமா உணர்ச்சிவசப்பட்டு எழுதப்பட்ட பதிவுகளை படிக்கிறப்ப..இதேமாதிரி தானே உணர்ச்சிவசப்பட்டு அவங்களும் அடிச்சிக்கிட்டாங்கன்னு தோணுச்சு..

தென்றல் said...

இந்த மாதிரி பாட்டு கேட்டு ரொம்ப நாளாச்சி...நன்னி!!

'அச்சம் என்பது மடமையடா...' (மன்னாதி மன்னன்)
'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா..' (என் அண்ணன்)

இந்த ரெண்டு பாட்டை எங்கயாவது பார்த்தா..அந்த link (you tube?) அனுப்பிவிட்டா புண்ணியமா போகும்...சாமியோவ்..!!

/ஆனா பாவம் அந்த பாப்பா.. என்ன அழுகை.. என்ன அழுகை../

;) :)