இம்புட்டு நாளா இது தெரியாம போச்சே...!

Wednesday, September 24, 2008

இன்றைக்கு எக்குத்தப்பாய் கையில் சிக்கிய அரவிந்தரின் ஒரு புத்தகத்தை அப்டீக்கா மேலாப்ப்ல மேஞ்சிட்டு இருந்தப்ப ஒரு மேட்டர் பச்சக்குன்னு மனசுல ஒட்டுச்சு, வலையுலக தர்மத்தின் படி உடனடியா அதை சபையில வைக்கிறேன்....படிச்சுப்பாருங்க....

“மெய்யான கல்வியின் முதலாவது அடிப்படைக் கொள்கை, எதையும் கற்பிக்க முடியாது என்பதேயாகும். ஆசிரியர், பாடங்களை எடுத்துச் சொல்லும் அறிவுரையாளரோ, வேலை வாங்கும் மேலாளரோ அல்லர், அவர் உதவியளித்து வழிநடத்துபவர் ஆவார். கருத்துக்களைச் சுட்டிக்காட்டுவதே அவருடைய பணியாகும், அவற்றை வலிய சுமத்துவதன்று.உண்மையில் ஆசிரியர் மாணவனின் மனத்துக்குப் பயிற்சியளிப்பதில்லை, மாணவன் தன் அறிவு சாதனங்களை எவ்வாறு செம்மைப்படுத்திக் கொள்ளலாம் என்பதை அவனுக்குக் காட்டி, அதில் அவனுக்கு ஆதரவளித்து ஊக்கமூட்டுகிறார். அவர் மாணவனுக்கு அறிவை கொடுப்பதில்லை.அவன் எவ்வாறு தன் முயற்சியால் அறிவை எய்தக் கூடும் என்பதை அவனுக்கு காண்பிக்கிறார்.ஆசிரியர் உள்ளிருக்கும் அறிவை வெளிக்கொணர்வதில்லை; அறிவு எங்கே புதையுண்டு கிடக்கிறது என்பதையும், அதை எவ்வாறு மேற்பரப்பிற்கு அடிக்கடி எழுந்து வருமாறு பழக்கப்படுத்தலாம் என்பதை அவர் அவனுக்கு காண்பிக்கிறார்”


- ஸ்ரீ அரவிந்தர்


இப்ப மேட்டருக்கு வருவோம்...இந்த சமாச்சாரம் இவ்வளவு நாளா எனக்கு தெரியாததால நாந்தான் மக்கோன்னு நினைச்சிட்டு இருந்தேன்...இப்பத்தான் புரியுது, தப்பு நம்ம மேல இல்லை நமக்கு சொல்லிக்குடுத்த புண்ணியவான்களோட கைங்கர்யந்தான்னு...

ஹி....ஹி...

2 comments:

jevan said...

புதிதாக ஒரு மொழியை கற்று கொடுக்கிறார் ஒரு ஆசிரியர் . அவருக்கு இது பொருந்துமா ?

jevan said...

good