ங்கொய்யால...திரும்ப வந்துட்டம்ல...

Monday, March 9, 2009


எம்புட்டு நாளுதான் தேமேன்னு வேடிக்கை பார்க்கறது...நெறய எழுதனும்னு நினைசாலும் அதெல்லாம் அப்பப்ப நெனப்போட போயிருச்சு...என்னத்த எளுதி, என்னத்த படிச்சி...என்னத்த பின்னூட்டம் போட்டுன்னு...இருந்தது போரடிச்சதனால இனிமேல தெனமும் எளுதிக்கிளிச்சி தமிழ் வலையுலகத்தை காப்பாத்தனும் முடிவுபணி களத்துல குதிச்சிட்டேன்.நேத்திக்கு அரைப்பாவாடைன்னு ஒரு பதிவு...பார்த்தவுடனே வயசுக்கேத்த பதிவா இருக்கேன்னு ஜெர்க் ஆகி..எகிறிகுதிச்சு உள்ள போனா அந்தம்மா அவங்கள அரைபாவாடை போடவிடாத கொடுமையை புலம்பிருந்தாங்க...வருத்தமா போச்சு, அப்பாலிக்கா ...ஆஹா இதப் படிக்கவா எகிறிகுதிச்சோம்னு... செம கடுப்பாய்டுச்சி

அரைபாவாடைன்னு தலைப்பு போட்டா உள்ளார அப்டிக்கா இப்படிக்கா நாலஞ்சு படம் போடோனும்...அப்பத்தான் நம்ம ஏரியாவுக்கு வந்து போறவுகளுக்கு சந்தோசமா இருக்கும்....இதெல்லாம் அவுகளுக்கு புரியாது அதுனால நமக்கு நாமே திட்டத்தின் கீழ இங்கன ரெண்டு புள்ளைங்க படம் போட்ருக்கேன்...ஹி..ஹி...

சமீபத்துல வலை பதிவுகள் எல்லாம் ஒரே மாதிரியான பேட்டர்ன்ல இருந்தது மாதிரியான எரிச்சலான விசயம் வேறெதும் இருந்திருக்க முடியாது...

அநேகமா எல்லா பதிவரும் தமிழின உணர்வு தறிகெட்டு ஓட, எங்கூட்டுக்காரரும் அரண்மனையில வேலபார்ககிறாருங்கற மாதிரி பிழிய பிழிய ஈழப்பிரச்சினைய பிரிச்சி மேஞ்சதுதான் பெரிய கேலிக்கூத்து....இதுல நெறய பேர் மல்லாக்க படுத்துட்டு எச்சி துப்புனதுதான் ஹைலைட்....ஹி..ஹி..

இது வரை இந்த பிரச்சினையை எழுதாத தமிழின துரோகிகளுக்காக சில தலைப்பு வச்சிருக்கேன்...யாராச்சும் தேவைபட்டா யூஸ் பண்ணிக்கங்க...

”பிரபாகரன் மீசை மயிர்தான் அண்ணன் சீமான்”

”சோனியா மேனியாவும் சொரனையற்ற தமிழனும். ”

”கருனாநிதிக்கு முதுகெலும்பு...மருத்துவ ஆச்சர்யம் - வாய் பிளந்த டாக்டர்கள் ”

”சோ ஒரு சொக்கத்தங்கம்”
(அநேகமா இதை டோண்டு ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருப்பார். அவர் கைல பெர்மிசன் வாங்கீடுங்க)...

இன்னும் நெறய எளுதனும்யா....அப்புறமா வர்றேன்.


10 comments:

ஜீவன் said...

எங்கேயோ ஆரம்பிச்சு எதுலயோ முடிச்சு இருக்கீங்க
ம்ம் ஒன்னும் புரியல!!

யட்சன்... said...

வாங்க எழுத்தாளர் அமுதன் அவர்களே...

எழுதனும்னு தோணிச்சு...ஆனா என்ன எழுதனும்னு தோணலை...
அதான்...

கண்டுக்காதீங்க..நம்ம எழுதெல்லாம் இந்த ரேஞ்சுலதான் இருக்கும் ...ஹி..ஹி....ம்ம்ம்ம்

சிம்பா said...

அதிரடி சரவெடி... அண்ணனோட ரெண்டாவது இன்னிங்க்ஸ் ஆரம்பம்..

அப்போவே தோணிச்சு சும்மா இருந்த ஆளுக்கு நல்ல நல்ல பந்துகளை போட்டு 163 அடிக்க வச்சாங்க.. நல்ல வேலை தசை பிடிப்புன்னு வெளிய போய், இவர 200 அடிக்க வைகோனும்னு நினைச்சவங்க மனசுல மண்ணை போட்டார்...

அது மாதிரி இல்லாம சரக்குக்கு தொட்டுகிற மட்டை ஊறுகாய் மாதிரி சும்மா ஜிவ்வுன்னு இருக்கோனும்..

சரியா குரு...

சிம்பா said...

ஆமா அரைப்பாவடை என்று சொல்லி கோவணத்தை கட்டி இருக்க புள்ளைக படத்தை போட்டிருகீக?

யட்சன்... said...

என்ர டிக்‌ஷனரில இதத்தான் அரப்பாவாடைன்னு வச்சிருக்கேன்...

உங்கூர்ல இதான்..கோ...மா...?

என்ன கொடுமையிது...ஹி..ஹி..

இராம்/Raam said...

அண்ணே வாங்க.... :))


நம்மூரூ பாசையிலே ங்கொய்யால'ன்னா என்ன அர்த்தம் தெரிஞ்சே இங்கன நீங்க ஊசூ பண்ணலாமா????? :((

அறிவே தெய்வம் said...

\\இன்னும் நெறய எளுதனும்யா....அப்புறமா வர்றேன்.\\

சீக்கிரம் வாங்க..

கவிதா | Kavitha said...

நேத்திக்கு அரைப்பாவாடைன்னு ஒரு பதிவு...பார்த்தவுடனே வயசுக்கேத்த பதிவா இருக்கேன்னு ஜெர்க் ஆகி..எகிறிகுதிச்சு உள்ள போனா அந்தம்மா அவங்கள அரைபாவாடை போடவிடாத கொடுமையை புலம்பிருந்தாங்க...வருத்தமா போச்சு, அப்பாலிக்கா ...ஆஹா இதப் படிக்கவா எகிறிகுதிச்சோம்னு... செம கடுப்பாய்டுச்சி

அரைபாவாடைன்னு தலைப்பு போட்டா உள்ளார அப்டிக்கா இப்படிக்கா நாலஞ்சு படம் போடோனும்...அப்பத்தான் நம்ம ஏரியாவுக்கு வந்து போறவுகளுக்கு சந்தோசமா இருக்கும்....இதெல்லாம் அவுகளுக்கு புரியாது அதுனால நமக்கு நாமே திட்டத்தின் கீழ இங்கன ரெண்டு புள்ளைங்க படம் போட்ருக்கேன்...ஹி..ஹி...
//

வரும்போதே நாந்தான் கிடைச்சேனா..?? :)))

கவிதா | Kavitha said...

அரைபாவாடைன்னு தலைப்பு போட்டா உள்ளார அப்டிக்கா இப்படிக்கா நாலஞ்சு படம் போடோனும்...//

நான் அப்படி போடுவேன்னு எதிர்பார்க்கலாமா? வேனும்னா அரைடவுசர் ன்னு ஒரு பதிவு போட்டு அப்படிக்கா இப்படிக்கா நாலஞ்சு படம் போடறேன்.. சரியா? :))))

தென்றல் said...

இவ்வளவு நாளா எங்க போயிருந்திங்க, ராசா..!!