நன்றி நண்பர்களே...!

Wednesday, June 17, 2009

என்னுடைய இரண்டு இனைய இனைப்புகளும் எதிர்பாராதவிதமாய் செயலிழந்து விட கடந்த இரண்டு வாரங்களாய் எனது பதிவுத் தொல்லையிலிருந்து தப்பித்திருந்தீர்கள் தமிழ்மணம் என்னை தள்ளி விட்ட பின்னர் இனி நிறைய தொடர்ந்து எழுதிட வேண்டுமென நினைத்திருந்தேன்....ம்ம்ம்

முந்தைய பதிவில் எனக்கு ஆதரவாய் நின்ற அன்புள்ளங்களுக்கு நன்றி....லக்கிக்கு ஒரு ஸ்பெசல் நன்றி. நான் இதுவ்ரை அவரை நேரில் சந்தித்ததில்லை. அவ்ர் பதிவுகளில் சென்று கும்மியடித்தவனுமில்லை. அவரின் அன்பு அந்த கணத்தில் என்னை நெகிழச்செய்தது என்றால் மிகையில்லை. தேங்க்ஸ் லக்கி !

நாலைந்து பதிவுகள் எழுதி வைத்திருக்கிறேன்....திருத்தம் செய்து பதிப்பிக்க வேண்டும். ஆனால் எழுதி வைத்து பதிவிடுகிற பதிவுகளை விட ச்ச்சுட ச்ச்ச்சுட எழுதுகிற பதிவுகள்தான் என்வரையில் நன்றாக வருகிறதாய் ஒரு எண்ணம். நேற்று இனையம் வந்த சந்தோசத்தில் யு ட்யூப் பக்கமாய் சுத்திக் கொண்டிருந்த போது இந்த பாடல் சிக்கியது.....



கொஞ்சம் கிளுகிளுப்பான பாடல்தான்....ரம்யா க்ருஷ்ணனை கையை காலை ஆட்டி உட்ற்பயிற்சி செய்திருக்கிறார்!, நமக்கு அது முக்கியமில்லை (ஹி..ஹி..நெசமாத்தான் சொல்றேன்!).ரம்யாவின் பின்னனியில் அவர் காட்டியிருக்கும் வித்தையை கவனித்துப் பாருங்கள். தேர்ந்த ஒரு ஓவியனின் ஆயில் பெயிண்ட்டிங் போல ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து இழைத்திருக்கிறார். இன்றைக்கு பெரும்பாலான ஒளிப்பதிவாளர்கள் செயற்கையான லைட்டிங்கில் காட்டும் அற்புதங்களை பாலுமகேந்திரா இயற்கையான வெளிச்சத்தில் படம் பிடித்திருக்கிறாரென நினைக்கிறேன்.மங்கலான அந்த எஃபெக்ட் கூட நன்றாகத்தானிருக்கிறது.

பாலுமகேந்திரா என்கிற கலைஞர் அவர் வாழும் காலத்தில் சரியான முறையில் கௌரவிக்கப் படவில்லை என்பது என் கருத்து....மற்றபடி இந்த பாடலில் ரம்யாவுக்கு பதிலாக பானுப்பிரியா மட்டும் ஈரம் சொட்ட சொட்ட ஆடியிருந்தால்....ஹெ...ஹெ...எழுதும் போதே மூடாவுதுப்பா....ஹி..ஹி...கன்னா பின்னான்னு கற்பனை பண்ணாம கண்ணை மூடீட்டு பாட்டைமட்டும் கேட்டுப் பாருங்க....விரகதாபம் வழிந்தோடும்...இளையராசா தி க்ரேட் !

”பத்தியகறி” , “வழுதுணங்காய்” இது எதை குறிக்கிறது என்பதை தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்....இல்லாங்காட்டி அடுத்த பதிவுல சொல்றேன்...


8 comments:

மங்கை said...

நானும் இயற்கையை ரசிச்சேன்

பத்தியக்கறி தான் பேர்லேயே இருக்கே.. 'பத்தியம்'-கறி

வழுதுணங்காய்-கத்திரிக்காய்

:-)))

தமிழ் அமுதன் said...

///கண்ணை மூடீட்டு பாட்டைமட்டும் கேட்டுப் பாருங்க....விரகதாபம் வழிந்தோடும்...இளையராசா தி க்ரேட் !///


இதுக்கு ஆடியோ மட்டும் போட்டு இருக்கலாமே?;;))
ஆனாலும் இது ரொம்ப சேட்டை ;;))

யட்சன்... said...

நானும் இயற்கையைதான் சொன்னேன்....

ஹி...ஹி....

பத்தியகறி, வழுதுணங்காய் ரெண்டுமே கத்தரிக்காய்தான்...பழைய சித்தர் பாட்ல கத்தரிக்காயை இப்படித்தான் சொல்லிருக்காங்க...

சரும வியாதி இருக்கற்வங்க கத்தரிக்காய சேர்த்துக்க கூடாதாம்....

யட்சன்... said...

ஜீவன்..

வார்ம் அப்...பதிவு இது...அதுனால கொஞ்சம் ஜூடாத்தான் இருக்கும்...

கண்டுக்காதீங்க...

லக்கிலுக் said...

நீங்களும் ரம்யா ரசிகரோ! :-)

கலக்கல்!

எனக்கு இந்த சீனியர் ரம்யாவையும் பிடிக்கும். இப்போதிருக்கும் ஜூனியர் (குத்து) ரம்யாவையும் ரொம்பப் பிடிக்கும்.

தென்றல் said...

/பாலுமகேந்திரா இயற்கையான வெளிச்சத்தில் படம் பிடித்திருக்கிறாரென/

இந்தப்பாட்டுல 'இவ்வளவு' விசயம் இருக்கா? எகொஇச!!

'மிளகாய்'ல இப்பலாம் ஏன் காரமே இல்ல..? ;(

இராம்/Raam said...

அண்ணே,

போன பதிவுக்கு போட வேண்டிய பின்னூட்டம்.. இங்கன போட்டுக்கிறேன்..

நீங்க ஒரு வருசமாகியும் பேரை மாத்திக்காமே இருக்கிறதுதான் ஒங்களே தூக்கினதுக்கு ரீசன் போலே... :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இராம் சொன்னது தான் சரியான காரணம் யட்சன் சார்...:))