லதானந் செய்தது சரிதானே...!

Monday, August 11, 2008

லதானந் என்கிற பதிவர், பரிசல்காரன் என்கிற பதிவர் மீதிருக்கும் அதீத அக்கறையினால் அவரின் வலை மோகத்தினை கண்டித்து மனம் திறந்த மடல் ஒன்றினை பதிவாக இட்டிருக்கிறார். அந்த பதிவினை படித்த கணத்தில் பரிசல்காரனின் அறியாமை அகன்று அகக்கண் திறந்து உணர்வுவயப்பட்ட நிலையில் பதிவுலகை விட்டு போவதாக ஒரு ரெஸ்பான்ஸ் பதிவும் போட்டிருக்கிறார்.

தமிழ் டிவி சீரியல் வசனங்கள் பிச்சை வாங்குமளவிற்கு செண்ட்டிமெண்ட்டான வசனங்களுடன் பின்னூட்டங்கள்,பின்னூட்டங்களை படிக்கும் போது..லதானத் அவர்களின் மேன்மையான குணத்தினை நினைத்து நெக்குருகிப் போனேன். சக பதிவரின் மீதான அவரின் அக்கறை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.அவரின் பதிவினை படித்த பின்னர்தான் இங்கே வலைபதியும் முக்கால் வாசி பேருக்கு தாங்கள் வெட்டியாக பொழுதை கழித்துக் கொண்டிருப்பதே தெரிய வந்திருக்கிறது. இதற்காக நான் லதானந் அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

சரி...இனி எனக்கு தோன்றிய சில அற்பமான எண்ணங்கள்......

லதானந் அவர்களின் பதிவின் மூலம் இருவரும் பதிவின் வழியாகவும், நேரிலும், தொலைபேசியிலும்,சாட்டிலும் பரஸ்பரம் ஸ்நேகமானவர்கள் என தெரிகிறது . இத்தனை புரிந்துணர்வுடன் செயல்படும் லதானந் அவர்கள், பரிசல்காரன் வழிமாறிப் போவதாய் உணர்ந்தவுடன், தொலைபேசியிலோ அல்லது சாட்டிலோ அல்லது நேரில் அழைத்தோ...தம்பி முதலில் குடும்பத்தை பார் அப்புறம் வலையுலகில் கும்மியடிக்கலாம் என சொல்லியிருக்கலாம்.

ஒரு வேளை அன்றைக்கு லதானந் அவர்கள் மௌனவிரதம் மேற்கொண்டிருந்திருக்கலாம், அல்லது பரிசல்காரன் பதிவெழுதுகிற அவசரத்தில் தனது அலைபேசியை சார்ஜ் செய்ய மறந்திருக்கலாம்.அதனால்தான் மின்னஞ்சல் வழியாக கூட அறிவுறுத்த மனமில்லாமல் அவசர அவசரமாய் பதிவெழுதியிருப்பார் என உறுதியாக நம்புகிறேன். இந்த தியாக திருப்பணியை கொச்சைப் படுத்தும் வகையில், திரு.லதானந் தனது பதிவு சூடான இடுகையில் வரவேண்டும்மென்றோ, அல்லது இப்படியாக ஒரு செண்ட்டிமெண்ட் ட்ரமா மூலம் வலைபதிவர்கள் மத்தியில் ஒரு பரபரப்பினை ஏற்படுத்த வேண்டுமென திட்டமிட்டு அதற்காக பரிசல்காரனை பலி கொடுத்தார் என்று நீங்கள் நினைப்பீர்களானால் உங்களை திருத்த நான் தனியே பதிவெழுத வேண்டியிருக்கும்.


எது எப்படியோ லதானந் அவர்களின் அறிவுரையினால் பதிவுலகில் அதிகமாய் பதிவெழுதுபவர்கள் தங்களை சந்தேகத்துடன் சுயபரிசோதனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.முதல்கட்டமாய் பரிசல்காரன் என்கிற மொக்கைச்சாமி வெளியேறிவிட்டார்.மேலும் பல மொக்கைச்சாமிகள் தங்களுக்கு சூடும் சொரணையும் வ்ந்துவிட்டதாக வாக்குமூலம் வேறு கொடுத்திருக்கிறார்கள்.இத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதற்காக திரு.லதானந் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி நன்றி நன்றி....

20 comments:

PPattian : புபட்டியன் said...

இப்போ இந்த பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத குப்பை பதிவும் சூடான இடுகையில வந்திடும்

கங்கிராட்ஸ்.. சூப்பர் டெக்னிக் சாரே..

இராம்/Raam said...

அண்ணே,


வருசா வருசம் வெவ்வேறு பேரு'லே எழுதுறவங்களுக்கு யாராச்சும் அறிவுரை சொல்லுவாங்களா???

வால்பையன் said...

//இப்போ இந்த பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத குப்பை பதிவும் சூடான இடுகையில வந்திடும்//

ரிப்பீட்டுடுடுடுடு்

வால்பையன்

Anonymous said...

ஏய் சொல்லிடாருப்பா கேட்டுக்குங்க...

VIKNESHWARAN said...
This comment has been removed by the author.
லக்கிலுக் said...

பதிவு சொல்லவரும் கருத்து எப்படியோ? எனக்கு கூட உள்குத்து உள்ளே இருக்கிறமாதிரி தெரியுது!

ஆனா ஒவ்வொரு லைனும் விழுந்து விழுந்து சிரித்தேன். Keep it up!!!

:-))))))))

SanJai said...

//இராம்/Raam said...

அண்ணே,


வருசா வருசம் வெவ்வேறு பேரு'லே எழுதுறவங்களுக்கு யாராச்சும் அறிவுரை சொல்லுவாங்களா???//

ரிப்பீட்டு...:))

// லக்கிலுக் said...

பதிவு சொல்லவரும் கருத்து எப்படியோ? எனக்கு கூட உள்குத்து உள்ளே இருக்கிறமாதிரி தெரியுது!

ஆனா ஒவ்வொரு லைனும் விழுந்து விழுந்து சிரித்தேன். Keep it up!!!

:-))))))))//

ரிப்பீட்டு :))


யட்சனின் போன வருஷ பெயரை சொல்கிறவர்களுக்கும் அடுத்த வருஷம் வைப்பதற்கு நல்ல பெயரை சொல்பவர்களுக்கும் யட்சனால் பொற்"கிழி" வழங்கப் படும் என அறிவிக்கப்படுகிறது....

முத்துலெட்சுமி-கயல்விழி said...

யட்சன் .. பரிசல் பதிவெழுதப்போறதில்லன்னு உறுதியாத்தெரியுமா? ஏங்க நீங்க?

இராமின் பின்னூட்டத்தை நானும் வழிமொழிந்துக்கறேன்..

யட்சன்... said...

வேலையின் நெடுகில்...பதிவின் பின்னூட்டங்களை கவனிக்கமுடியவில்லை.

நிச்சயமாக சூடான இடுகையில் எனது பதிவுகளை வரவைக்க வேண்டுமென நான் எப்போதுமே நினைத்ததில்லை.அதற்கான அவசியமும் இன்று வரை எனக்கு இல்லை புபட்டியன்.

இராம்....உங்களுக்கு இல்லாத உரிமையா, நீங்களே அந்த ஆளுக்கு அறிவுரை சொல்லலாம்ல...நீங்க சொன்ன அவர் நிச்சயம் கேப்பாரு :-)

லக்கி..உங்களின் ரசிப்பு மற்றும் சகிப்புத்தன்மையை நான் மதிக்கிறேன்.

சஞ்சய்...ரிப்பீட்டுக்கு ரீப்பீட்டு, கடைசில ஏன் அந்த ஆப்பு! :-)

கவி.முத்துலட்சுமி !....இந்த பதிவு நீங்கள் சொல்லும் அந்த எல்லைக்குள் வராது என்பது என் கருத்து.

PPattian : புபட்டியன் said...

//நிச்சயமாக சூடான இடுகையில் எனது பதிவுகளை வரவைக்க வேண்டுமென நான் எப்போதுமே நினைத்ததில்லை.அதற்கான அவசியமும் இன்று வரை எனக்கு இல்லை புபட்டியன்.
//

ஆமா இதை நான் நம்புறேன்.. இல்லன்னா, என்னை திருத்த நீங்க தனியே இன்னொரு பதிவெழுத வேண்டியிருக்கும்... எதுக்கு உங்களுக்கு சிரமம்..:)

உங்க போன ஜென்ம பேரு வவ்வாலா?

மங்கை said...

ஐயா

நான் ஒரு பதிவு போட உங்களை அழைத்தேன்....

முத்துலெட்சுமி-கயல்விழி said...

புதிய பதிவர்தானேன்னு எல்லாரும் இது சூடான இடுகையில் வருவதற்க்காக எழுதியதாக நினைப்பார்கள்..இல்லன்னா இப்படி அவரோ இவரோன்னு பின்னூட்டம்போடுவாங்க..
மங்கை கேக்கறாங்க பாருங்க.. அவங்களே பதிவிடுவது இல்லை போட்டாலும் தொடரலன்னா எப்படி?

இந்த பதிவு எந்தவகைன்னு இரண்டாவது தடவை வாசிப்பில் புரிந்து கொண்டேன். :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

புதிய பதிவர்தானேன்னு எல்லாரும் இது சூடான இடுகையில் வருவதற்க்காக எழுதியதாக நினைப்பார்கள்..இல்லன்னா இப்படி அவரோ இவரோன்னு பின்னூட்டம்போடுவாங்க..
மங்கை கேக்கறாங்க பாருங்க.. அவங்களே பதிவிடுவது இல்லை போட்டாலும் தொடரலன்னா எப்படி?

இந்த பதிவு எந்தவகைன்னு இரண்டாவது தடவை வாசிப்பில் புரிந்து கொண்டேன். :)

பரிசல்காரன் said...

//முதல்கட்டமாய் பரிசல்காரன் என்கிற மொக்கைச்சாமி வெளியேறிவிட்டார்.//

யாரு? நானா?

ஐயோ! ஐயோ!

இப்படியெல்லாமா நம்பிவீங்க சீனியர்!!

எப்படியோ, என் பெயரும் உங்களைப் போல வலையுலகில் பழுத்த, மதிப்பிற்குரிய உங்களைப் போன்றவர் பதிவில் வருவதில் மகிழ்ச்சி!

விரைவில் அடுத்த மொக்கையில் சந்திப்போம்!

யாத்ரீகன் said...

>> சூப்பர் டெக்னிக் சாரே..

:-))))))))

அய்யனார் said...

அடுத்தவருக்கு அறிவுரை என்கிற பெயரில் பகிரங்க கடிதமெழுதுவதை விட ஈனத்தனமான காரியம் வேரெதுவுமில்லை.மாதத்திற்கு 25 பதிவு்களை சராசரியாய் எழுதிக் குவிக்கும் லதானந்த் பரிசலுக்கு அறிவுரை சொல்றாராம்..
"நடுராத்திரி வரை ஆன்லைனில் இருக்காதே" பரிசல் ஏதோ கொலைக் குற்றம் செய்தது போலவும் குடும்பத்தை நிர்கதியாய் விட்டதுபோலவுமாய் ஒரு பதிவு அதற்கு ஒத்து ஊதும் பின்னூட்ட ஆமாம் சாமிகள் என்ன கொடுமடா சாமி!

அடுத்தவனுக்கு அட்வைஸ் பன்றோம்னு ஆளாளுக்கு தயவு செய்து கெளம்பாதீங்க மக்களே ..
:(

மதுவதனன் மௌ. said...

//PPattian : புபட்டியன் said...

இப்போ இந்த பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத குப்பை பதிவும் சூடான இடுகையில வந்திடும்

கங்கிராட்ஸ்.. சூப்பர் டெக்னிக் சாரே..//

ஆமா...இதுவரைக்கும் சூடான இடுகையில உலகத்தை புரட்டிப்போடும் சிந்தனைகள் பற்றிய பதிவுகள்தான் வந்திச்சாக்கும்.

ஏதோ இதுவரைக்கும் சூடான இடுகைகளில வந்த பதிவுகளைப் படிச்சிருந்தாலே எல்லோரும் மகாத்மாவா வந்திருக்கலாம் என்ற மாதிரியல்லவா இருக்கு..

PPattian : புபட்டியன் said...

//இப்போ இந்த பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத குப்பை பதிவும்//

பதிவும். பதிவும்.. பதிவும்...

//ஏதோ இதுவரைக்கும் சூடான இடுகைகளில வந்த பதிவுகளைப் படிச்சிருந்தாலே எல்லோரும் மகாத்மாவா வந்திருக்கலாம் என்ற மாதிரியல்லவா இருக்கு..//

அப்படியா இருக்கு.. எனக்கு அப்படி தெரியலயே..

Anonymous said...

//அடுத்தவருக்கு அறிவுரை என்கிற பெயரில் பகிரங்க கடிதமெழுதுவதை விட ஈனத்தனமான காரியம் வேரெதுவுமில்லை.மாதத்திற்கு 25 பதிவு்களை சராசரியாய் எழுதிக் குவிக்கும் லதானந்த் பரிசலுக்கு அறிவுரை சொல்றாராம்..
"நடுராத்திரி வரை ஆன்லைனில் இருக்காதே" பரிசல் ஏதோ கொலைக் குற்றம் செய்தது போலவும் குடும்பத்தை நிர்கதியாய் விட்டதுபோலவுமாய் ஒரு பதிவு அதற்கு ஒத்து ஊதும் பின்னூட்ட ஆமாம் சாமிகள் என்ன கொடுமடா சாமி!

அடுத்தவனுக்கு அட்வைஸ் பன்றோம்னு ஆளாளுக்கு தயவு செய்து கெளம்பாதீங்க மக்களே ..
:( //

சரியாகச் சொன்னீர்கள்

அதுவும் எப்படி நூறாவது பதிவு போடப் போறேன்னு 99 வத பதிவு

எனக்கு பிறந்த நாள்னு யாரவது தம்பட்டம் அடிப்பாங்களா இவரு அடிச்சாரு

அத்தோட விட்டாரா பொறந்த நாளுக்கு ரிக்கார்ட் டான்ஸ் அதைப் படம் பிடித்து ப்ளாக்கில் வேற போட்டார்

எல்லா ப்ளாக்கிலேயும் அவரு போட்டா

அப்புறம் சேட்டிங் டிப்ஸ் சாட்டிங் டிப்ஸ் இப்படினு அநாகரீகமாக

எங்க போய் முட்டிக்றது

Anonymous said...

//நூறாவது பதிவு போடப் போறேன்னு 99 வத பதிவு //

அட இந்த ரோசனை நல்லாருக்கே

இது மாதிரிக்கா எழுதினா 100 என்ன 1000 எழுதலாமே

இப்ப பாரு

1ம் பதிவு- முதல் பதிவு போட்டாச்சி
2ம் பதிவு- முதல் பதிவை பாத்தீகளா
3ம் பதிவு- ரெண்டாம் பதிவைப் பாத்தீகளா


99ம் பதிவு-- இங்க பாரு அய்யா பாரு எல்லாம் பாரு சாமி பாரு 99 பதிவு இது எனக்கு க்ஷ்க்ஷ்க்ஷ் அன்னிக்கு பொறந்த நாளு அன்னிக்கு 100

100 வது பதிவு-- இதோ எனக்கு இன்னிக்கு பொறந்த நாளு இப்பதான் ரெக்கார்ட் டான்ஸ் முடிஞ்சி சரக்கெல்லாம் தீந்து போய் தள்ளாடி வந்தேன். அதனால நாளைக்கு பேசறேன்

10 வது பதிவு-- நேத்தி மப்பு சாஸ்தியாய்டிச்சி இப்படி ரெண்டு வரி

நான் தண்ணியடிப்பேன் நான் தண்ணியடிப்பேன் அப்படினு சொல்றதிலே என்னையா பெருமை