எழுதத்தான் நினைக்கிறேன்....

Tuesday, August 26, 2008

எழுதுவதை மறந்து விடக்கூடாதென்பதற்காய் இந்த பதிவு....சொல்லத்தான் நினைக்கிறேன் மாதிரி இது எழுதத்தான் நினைக்கிறேன்.

இலக்கின்றி எழுதுதல் என்பது இலகுவான ஒன்று, எவ்வித முன் தயாரிப்புமின்றி தோன்றுவதையெல்லாம் எழுதலாம்...அதாவது நல்ல நகைச்சுவையை கேட்ட மாத்திரத்தில் வாய்விட்டு சிரிப்பதைப்போல,.அத்தகைய செயலில் பாசாங்கிருக்காது அல்லவா?

எனது கடைசி பத்து பதிவுகளில் மூன்று விமர்சன பதிவுகள் அதுவும் என் சகபதிவர்களை சகட்டு மேனிக்கு காட்டு காட்டென காட்டிய பதிவுகள், அந்த கணத்தில் ஏற்பட்ட உணர்வுகளின் உந்துதலால் அப்படி எழுதவேண்டியதாயிற்று. இப்போது தோன்றுகிறது, அப்படி எழுதியதில் எனக்கு மகிழ்ச்சியில்லையென்று...யாரேனும் காயப்பட்டிருப்பார்களேயானால் அவர்களுக்காய் எனது வருத்தத்தினை இந்த இடத்தில் பதிந்து வைக்கிறேன்.

இப்போதைய எனது பிரச்சினை நேரம்தான்....எப்படித்தான் சமாளிக்கிறேன் எனபது இது வரை எனக்கு புரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம், எதையும் திட்டமிடுவதில்லை, எல்லாம் தானாய் போகிறது, எத்தனை நாளைக்கு இப்படி சர்க்கஸ் வித்தைக்காரன் மாதிரி ஓடிக்கொண்டிருக்கப் போகிறேனோ தெரியவில்லை.

எங்காவது மலைவாசஸ்தலத்தில் ஆளில்லாத தனிமையான வீட்டில், தேனீர் கோப்பையின் துனையுடன், பள்ளத்தாக்கின் அழகை பருகியபடியே நிறைய எழுத ஆசையாயிருக்கிறது...வாய்க்குமா தெரியவில்லை.

இப்போதெல்லாம் தமிழ்வலைப்பதிவர்களில் காணாமல் போகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது...ம்ம்ம்ம்ம், எத்தனை பேருக்கு மதுரா என்கிற பதிவரை தெரியும்?

என்னை பொறாமைபட வைத்த வார்த்தை பிரயோகங்கள், திருடிக்கொள்ள நினைத்த எழுத்து நடை, முயற்சித்தும் பார்த்தேன் முடியவில்லை, அருமையான எழுத்துக்கும் கருத்துக்கும் சொந்தக்காரி,....

சில அரைவேக்காட்டு பதிவர்களால் தனது தமிழ் பதிவினையே அழித்து விட்ட அருமையான தமிழ் பதிவர் அவர். இப்போது ஆங்கிலத்தில் மட்டுமே பதிவிடுகிறார்.

டெல்பின், காட்டாறு, உஷா ராமசந்திரன்...இவங்களை எங்காவது யாராவது பார்த்தா நான் கேட்டதா சொல்லுங்க.....விவேக் சொல்ற மாதிரி எனக்கு அவிங்களை தெரியும்....அவிங்களுக்கு என்னை தெரியாது..!

குசேலன் குப்புற விழுமென எதிர்பார்த்ததுதான்...ஆனால் இந்த இடறலில் தசாவதாரம் வெற்றிப்படம் என சொல்வதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை. தனிப்பட்ட முறையில் வர்த்தக ரீதியாய் தசாவதாரம் முதலுக்கு மோசமில்லைதான், குசேலனால் எட்டு லட்ச ரூபாய் வரை நஷ்டம்...முப்பது சதவிகிதம் திரும்ப தருவதாய் சொல்லியிருக்கிறார்கள்.....கையில் வந்தால்தான் உறுதி....பார்ப்போம். பேராசை பெருநட்டம் என்பது ரஜினி விசயத்தில் இரண்டாவது முறையாய் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

பரிசல் பழைய பாஃர்மில் எழுத ஆரம்பித்து விட்டார். சந்தோஷம்தான்...அவரின் சமீபத்தைய சோப்பு பதிவு அருமை.....ஹய்யடா, நம்மள மாதிரியே ஒரு ஆள்னு சந்தோசமாய்ட்டேன். ஆனால் நான் பரிசல் அளவுக்கெல்லாம் நீட்டி முழக்கியிருக்க மாட்டேன். ஒரே வரியில ஹைகமாண்ட்டை ஃப்ளாட் ஆக்கீருப்பேன். அந்த மேஜிக் வார்த்தை....”நீயல்லால் தெய்வமில்லை”....ஹி..ஹி...

அம்மணி இந்த பக்கம் வர்றதில்லைங்கிற தைரியத்துல என்னோட சீக்ரெட் வெப்பனை உங்க பார்வைக்கு வச்சிருக்கேன்.புத்திசாலிங்க யூஸ் பண்ணி சந்தோசமா இருங்க. வரும் காலங்களில் பரிசல் இதைக் காட்டிலும் அருமையான பல சோப்புகளை தயாரித்திட வாழ்த்துகிறேன்.

பரிசலின் எழுத்துக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்...இதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது சமீபத்தைய பதிவுகள், நேயர் விருப்பம் மாதிரி அவரின் ரசிகர்களை குஷிப்படுத்த எழுதப்படுவதற்காகவே எனக்கு தோன்றுகிறது.இது சரியா, தவறா என்பதை அவரின் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.

எழுத நினைச்ச எல்லாத்தையும் இப்பவே எழுதீட்டா அடுத்த பதிவெழுத மேட்டருக்கு எங்க போவேன்....அதுனால இப்பதைக்கு இங்கன வுட்ரேன் ஜூட்....

5 comments:

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தலைப்பு நல்லா இருக்கு.. மதுரா .. :( அப்பல்லாம்யாரும் இப்படி பதிவெழுதி கூப்பிடற ட்ரெண்ட் இல்லையோ.. மறந்துடுச்சு..
காட்டாறு திரும்ப வந்து தலையக்காட்டிட்டு ஓடிட்டாங்க.. இரண்டு அழுவாச்சி மெயில் அனுப்பனும் திரும்பவும்..
எனக்கும் எழுதறது மறந்துட்டுவருது.. :(

முத்துலெட்சுமி-கயல்விழி said...

y for யட்சன் என்னாச்சு? அவங்க போராட்டத்துல இறங்கறதுக்குள்ள ....

யட்சன்... said...

கவி முத்துலட்சுமி...

மதுராவின் எழுத்துக்கள் அசாத்தியமான ஆளுமை கொண்டவை...இப்போது வலையுலகில் பின்நவீனத்துவம் எழுதுகிறவர்கள் எல்லாம் அவரிடம் பாடம் படிக்க வேண்டும். நான் அசந்து போன பதிவர்களில் அவரும் ஒருவர்.

உங்க ஊர் மங்கையிடம் கேட்டுப்பாருங்கள் அவரைப்பற்றி...நிறைய தகவல் வைத்திருப்பார் என நினைக்கிறேன்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நான் மதுராவை மறந்துடுச்சுன்னு சொல்லல.. அப்படி சொல்லவும் என்னால் முடியாது.. அப்ப இந்த மாதிரி அழுவச்சி பதிவு போட்டு போறேன்னு சொல்றதும் வான்னு க்கூப்பிடறது ட்ரெண்டு இல்லையோ ..ன்னும் அவங்ககபோனப்ப இருந்த நிலமைகளும் மறந்துடுச்சுன்னு சொன்னேன்..

இரண்டாவது பின்னூட்டத்தை மறந்துட்டு முதல் பின்னூட்டத்துக்கு மட்டும் பதில் போட்டதில் இருந்து போராட்டம் தேவைன்னு தோணுது..

யட்சன்... said...

ஹி....ஹி....அது வந்து...எளுதீட்ட்ட்ட்ட்டே இருக்கேன். இருபத்தி ஆறு எழுத்துல்ல...எம்புட்டு எளுதனும். சீக்கிரமா எளுதீர்றேன் தாயீ!