நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே....

Friday, September 19, 2008

ஆடிக்கொன்றும் அம்மாவாசைக்கொன்றுமாய் பதிவெழுதுவதே எனக்கு வழக்கமாய் போய்விட்டது. நான் பதிவெழுதாவிட்டால் ஒன்றும் குறைந்து விட போவதில்லைதான், ஆனாலும் உள்ளேன் ஐயா என பின்வரிசையில் இருந்து குரல் கொடுக்கவாவது அவ்வப்போது இந்த மாதிரி எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

வர வர தமிழில் பெண்பதிவர்கள், பதிவெழுதுவதை குறைத்துக் கொண்டே வருகிறார்கள் என்பது என்னுடைய அவதானம். இப்படியே போனால் பதிவுலகில் பெண்பதிவர்களே இல்லாமல் போய்விடும் ஆபத்தினை இந்த நிலையிலாவது உண்ர்ந்து புதிய பழைய பெண் பதிவர்களை ஊக்குவிப்பதாய் சபதமெடுத்திருக்கிறேன். அதற்காக நீங்கள் யாரேனுமென்னை ஜொள்ளு பார்ட்டி என கேலி செய்தாலும் கவலையில்லை.

நம்ம பரிசல் மாதிரி ஒரு சோப்பு பதிவு போடுவோமென்றுதான் இந்த பதிவினை துவக்கினேன், ஆனால் சம்மந்தப்பட்ட பார்ட்டி இந்த பக்கமெல்லாம் வருவதில்லை என்பதால் ஏதேதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு செய்தியை மட்டும் இந்த இடத்தில் பதிந்து வைக்க விரும்புகிறேன். சிங்கத்தை கூண்டுல அடைச்சி இன்னியோட பன்னிரெண்டு வருசமாச்சு...ம்ம்ம்ம்

இந்த இடத்தில் ஒரு பாட்டு....



அருமையான பாட்டு....இந்த மாதிரியான சிக்கலான இசை கட்டமைப்போடு இப்போதைய பாடல்கள் வருவதில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. சம்மந்தப்பட்ட பார்ட்டிக்கு ரொம்பவும் பிடித்த பாட்டு இது, இன்றைக்கு கோவிலுக்கு போய்விட்டு வரும்போது இந்த பாடலினை கண்ணை மூடி ரசித்துக் கொண்டே வந்தார், பார்க்கவே சந்தோஷமாயிருந்தது...வேறென்ன வேண்டும் வாழ்க்கையில்....

12 comments:

கப்பி | Kappi said...

வாழ்த்துகள்ண்ணே :)

நிலா said...

//சம்மந்தப்பட்ட பார்ட்டிக்கு ரொம்பவும் பிடித்த பாட்டு இது, இன்றைக்கு கோவிலுக்கு போய்விட்டு வரும்போது இந்த பாடலினை கண்ணை மூடி ரசித்துக் கொண்டே வந்தார், பார்க்கவே சந்தோஷமாயிருந்தது...வேறென்ன வேண்டும் வாழ்க்கையில்.... //

படிக்கும்போதே சந்தோஷமாயிருக்கு.

நிலா said...

//புதிய பழைய பெண் பதிவர்களை ஊக்குவிப்பதாய் சபதமெடுத்திருக்கிறேன். அதற்காக நீங்கள் யாரேனுமென்னை ஜொள்ளு பார்ட்டி என கேலி செய்தாலும் கவலையில்லை.//

புதிய,பழைய ரெண்டுக்கும் நடுவுல இருக்கேன் நான். என்னயும் ஊக்குவிங்களேன்.
என்ன ஊக்குவிச்சா ஜொள்ளுப்பார்டின்னு உங்கள யாரும் சொல்ல மாட்டாங்க :P

நிலா said...

அடடா சொல்ல மறந்தாச்சு வாழ்த்துக்கள் மாமா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துகள். ..
ரசித்துக்கொண்டே வந்தாருன்னா இப்ப என்ன சொல்ல வர்ரீங்க.. என்ன புடிக்கும்ன்னு தெரிஞ்சு பாட்டை போட்டு விட்டீங்கன்னு தானே.. :)

பரிசல்காரன் said...

//நம்ம பரிசல் //

இதுக்காகவே இன்னைக்கு ஒரு பார்ட்டி வெச்சுக் குடிச்சு கூத்தாடணும் போல இருக்கு!

பரிசல்காரன் said...

வாழ்த்துக்கள் சீனியர்!

சிம்பா said...

//சிங்கத்தை கூண்டுல அடைச்சி இன்னியோட பன்னிரெண்டு வருசமாச்சு...//இந்த வார்த்தைகள்.. ஒரு வேலை நான் நினைப்பது சரியா, அவரா நீங்க....

மங்கை said...

ஆஹா...இதை நான் பார்க்கலையே

பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

Anonymous said...

dear SK
VAZKA PALLANDU...

தமிழ் அமுதன் said...

''யட்சன்''' நச்சுன்னு இருக்கு தலைப்பு அது சரி யட்சன் அப்படின்னா என்னங்கோ புரியலையே ?

தென்றல் said...

வாழ்த்துக்கள்! வாழ்க, பல்லாண்டு!!

உங்க கவலை நியாயமான கவலைதான்... அப்புறம் 'மிளகாய்' காரமே இல்லாம இருக்கு..

சரி...இந்தப் பாட்டு எந்தப் படம்?