நெஞ்சத்தொட்டு சொல்லுங்க யார் பெஸ்ட்...!

Friday, September 26, 2008

எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த இரண்டு ஒளித்துண்டுகளையும் பாருங்கள். பார்த்து/கேட்டு விட்டுச் சொல்லுங்கள்....யார் பெஸ்ட்.






அமைதியான பின்னிரவில்....மொட்டை மாடியின் தனிமையில், தலைமாட்டில் இந்த பாடல் மெலிதாய் ஒலிக்க நட்சத்திரங்களை எண்ணிய நாட்கள் மட்டும் திரும்ப கிடைக்குமானால் நான் எதுவும் செய்ய தயாராக இருக்கிறேன். அத்தனை பொக்கிஷமான தருணங்கள்....

சுசீலாவும் , லதாவும்...கொஞ்சம் கொஞ்சமாய் உயிர்வரை ஊடுருவும் குரல் ராட்சசிகள்....ஒரு அதி காலையில் விழுப்புரம் அர்ச்சனா உணவகத்தில்,திருமதி.சுசீலாவை நேரில் கண்ட மாத்திரத்தில் கொஞ்சம் தடுமாறி, செய்வதறியாது காலைத்தொட்டு வண்ங்கிய போது அந்த தேவதை முகத்தில் காட்டில பெருமிதமான சிரிப்பும், என் தலையை தொட்டு நல்லாயிருங்க என சொன்ன வார்த்தைகளும்....வாழ்நாளைக்கும் போதும்.

4 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ சுசீலாவை நான் தில்லியில் தமிழ்ச்சங்கத்தில் பார்த்தேன்.. ஒரு தேவதையைப்போல இருந்தாங்க.. அவங்களைப்புகழும் போதும் ஒரு கனிவு முகத்துல..

ஆகா வாழ்த்துவாங்கினீங்களா..ஹ்ம்..

யட்சன்... said...

கவி.முத்துலட்சுமி....

அவரின் மென்மையான கம்பீரம்...அவரின் குரலைப்போன்றே ரசிக்கத்தக்கது.

முதலில் அவரை கொடைக்கானலில் சாய்பஜனில்தான் பார்த்தேன். தூரத்தில் இருந்து பார்த்தபோதே அத்தனை சந்தோஷமாயிருந்தது.ஆனால் விழுப்புரம் சந்திப்பு...இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிற அனுபவம். அந்த மேதை வாழ்கிற காலத்தில் நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதே பெருமை.

லதா மங்கேஷ்கரை ஒரு முறை சென்னை விமான நிலையத்தில் வைத்துப் பார்த்திருக்கிறேன்....இவரின் மென்மையில் ஒரு குழந்தைத்தனமிருக்கும்.

மங்கை said...

எளிமையும் அன்பான முகமும் எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துது
... எனக்கு இன்னும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை...லதா மங்கேஷ்கரின் முகத்தில் இந்த வயதிலும் நீங்க சொன்ன மாதிரி ஒரு குழந்தைத்தனம் இருக்கத்தான் செய்கிறது...

தமிழ்நதி said...

சுசீலாவின் குரல் அப்படியே மனசுக்குள் புகுந்து வருடுவது மாதிரி இருக்கும். ஒரு காலத்தில் அந்தப் பாடல்களைக் கேட்டு கண்ணீர் பெருக்கியிருக்கிறேன். (சும்மா கற்பனையில் மிதந்தால் கண்ணீர் தானாய் வரும்)அவரை நான் கனடாவில் ஒரு மேடையில் பார்த்தேன். பேசவில்லை. பிரபலங்களைத் தொலைவில் இருந்து பார்த்தால் போதுமெனத் தோன்றுகிறது. நெருங்கினால் சில சமயங்களில் நமக்குள் வளர்த்திருக்கும் பிம்பங்கள் உடைபட்டுவிடுவோமோ என்ற அச்சம்தான் காரணம்.