மாடிபடியின் வளைவொன்றில் மின்னல்கீற்றாய்...
எப்பவாவது என்னை நினைக்கறியா?
மறக்கமுடியுமா!...பொய்சொன்னேன்
தப்பு பண்ணீட்டேன்,நீயாவது போகாமலிருந்திருக்கனும்
மௌனமாய் வெறுமையாய் கொஞ்சம் எரிச்சலாய்....
நல்லாருக்கியா? - நான்
ப்ப்ப்ச் - அவள்
நீ ?
இருக்கேன்...
இன்னும் என் மேல கோவமாயிருக்கியா?
அதையெல்லாம் நான் அப்பவே மறந்துட்டேன்
என்னால உன்னை மறக்க முடியலைடா
தப்பு பண்ணீட்டேன்...தடுமாறினாள்
அவசரமாய் போய்ட்டு இருக்கேன்
எனக்கு வேலையில்லை நான் கூட வரவா?
ம்ம்ம்ம்...Too late
அர்த்தமாய் சிரிக்கிறாள்...
மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லு
சிரித்துக்கொண்டே கடக்கிறேன்...
மேலேறி திரும்பிப்பார்கிறேன்....
பார்த்துக்கொன்டு நின்றவளிடம்...
கையாட்டி கடந்து போனேன்.
அவளுக்காய்....ம்ம்ம்ம்ம்
Sunday, October 26, 2008
Posted by யட்சன்... at 11:57 AM
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஆஹா தலைவா இது தீபவளி சிறப்பு கவிதையா இல்ல நம்ம மார்கெட்டுக்கு பாடும் பாடலா (வழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா)
தங்கள் கவிதை மற்றும்
பாடல் அருமை
சுகமோ சுகம்
முருகன்
சென்னை
//நான் கூட வரவா?
ம்ம்ம்ம்...Too late
அர்த்தமாய் சிரிக்கிறாள்...//
இந்த பதிவ வெறும் வரிகளா பார்க்க முடியல. அருமையா இருக்கு குரு. குறிப்பா மேலே உள்ள வரிகள்... அதில் எத்தனை அர்த்தங்கள்...
தல இதெல்லாம் எங்கிருந்து வருது.. பழைய அனுபவமோ...
Post a Comment