ஹேப்பி பர்த்டே வாத்யாரே....!

Saturday, January 17, 2009



மருதூர் கோபாலமேனன் ராமசந்திரனுக்கு இன்று 93 வது பிறந்தநாள்...

இப்படிச்சொன்னால் எத்தனைபேருக்கு தெரியும்....

ஏழைகளின் இதயதெய்வம்(நன்றாக கவனிக்கவும்”ஏழைகளின்”), பொன்மனச்செம்மல்,மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு இன்று பிறந்தநாள். அநேகமாய் தேர்தல் சமயங்களில் மட்டுமே நினைக்கப்படும் அளவிற்கு சுருக்கபட்டு விட்ட ஒரு மனிதனின் பிறந்த நாள்.

அரசியல் எம்.ஜி.ஆரை எனக்கு எப்போதுமெ பிடித்ததில்லை, ஆனால் ஒரு நடிகராய் அவரின் தீவிர ரசிகனென சொல்லிக்கொள்வதில் எனக்கு எப்பொழுதுமே ஒரு புளகாங்கிதமிருந்ததுண்டு. மிகச்சிறந்த நடிகரென அவரை சொல்லிவிடமுடியாது, ஆனாலும் தேசிய விருதெல்லாம் வாங்கியிருக்கிறார். ஆனால் வேறெந்த பொழுதுபோக்குமில்லாத அன்றைய சூழலில் உழைத்துக் களைத்துவரும் சாமான்யனை வேரோடும் தூரோடும் மகிழ்வித்த கலைஞர்.

தன் படங்களில் எப்போதும், தன்னை எப்பொழுதும் ஒரு மகாமனிதனாய் காட்டிக்கொண்டதில்லை, சாமனியனின் குரலாய் ஒலித்ததில்தான் அவரது வெற்றியிருந்திருக்க வேண்டும். அவரின் கவர்ச்சியும், ஆளுமையும் இன்றைய கதாநாயகர்களிடம் தேடினாலும் கிடைக்குமா சந்தேகமே....

இன்றைக்கும் அவரின் படங்களை பார்ப்பது ஒரு சந்தோஷ அனுபவமே....

ஹேப்பி பர்த்டே...வாத்யாரே !

5 comments:

சிம்பா said...

பொதுவாக என்வயதுடைய நபர்களுக்கு தலைவரின் படத்தை பார்க்க மாறுமே வாய்ப்பு இருக்கிறது...

ஆனால் அவரது அரசியல் வாழ்கையில் நேரடி அனுபவம் இல்லை. ஆனால் ராமாவரம் தோட்டம் பற்றி கேள்விப்பட்டதுண்டு. இருந்தாலும் ஏழையாகிய எனக்கும் அவரே தலைவர்.

என்றும் நிலைக்க வேண்டும் அவர் புகழ்....

சிம்பா said...

குரு தங்களுக்கான அன்பு பரிசை ஏற்றுக்கொள்ளவும்.

விவரங்களுக்கு நம்ம வீட்டுக்கு வரவும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

அபி அப்பா said...

:-)

Anonymous said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி