முட்டாள் குமரனும் சில முழு பூசனிக்காய்களும்....

Friday, January 30, 2009

தமிழுணர்வாளர்களின் வெறும் வாய்க்கு அவலாய் போனதை தவிர அந்த இளைஞனால் எதை சாதிக்கமுடிந்ததென தெரியவில்லை. இயலாமையின் உச்சத்தில் கவன ஈர்ப்பாய் செய்ததை தியாகமென சொல்வதை காட்டிலும் தற்கொலையென்றே வரையறுக்கலாம்.தற்கொலைகள் மன்னிக்க முடியாதது.....

சாகும்வரை உண்ணாநிலையெடுத்தவர்கள், கள்ளத்தோணியேறியவர்களுக்கில்லாத இன உணர்வினை இந்த இளைஞர் எங்கிருந்து பெற்றார்?...நிதர்சனங்களை மீறிய மூளைச்சலவை இத்தகைய முடிவுகளுக்கு இட்டுச்சென்றிருக்கலாம்தான்...ஆனால் இத்தகைய சலவையாளர்கள், கொழுக்கட்டை கொழுக்கட்டையாய் எந்த சேதாரமுமில்லாமல் நேற்றைக்கும், இன்றைக்கும் ஏன் என்றைக்குமிருப்பார்கள் என்பதை அந்த இளைஞர் உணராமல் போனதை என்னென்பேன்.

விடுதலைப்புலிகளின் செயல்களையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நியாயப்படுத்தும் போக்கினை யார் துவங்கினார்களென தெரியவில்லை, ஆனால் இன்றைக்கும் அதே வரையரையாய் போனதுதான் இத்தனை அனர்த்தங்களுக்கும் காரணாயிருக்குமென நினைக்கிறேன்.விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதென்று எதுவுமில்லாத நிலையில்...விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவமில்லாதவர்களின் எதிர்வினைக்கு பயந்து முப்பது வருடங்களுக்கு மேலாய் புனிதபதாகையினை புலிகளுக்கு தந்த என் தமிழினமும் குற்றவாளிதான்.

அடிப்படை நேர்மையில்லாத இரண்டு சுயநலவாதிகள் கணக்குத்தீர்ப்பதின் இன்னொரு அத்தியாயமே இன்றைய இலங்கை நிலவரம்.உண்மையில் இதன் பாதகங்கள் அனைத்துமே ஏதுமறியாத அப்பாவி பொதுமகனும் அவன் பிள்ளை குட்டிகளுக்கும்தான்...இந்த இழப்புகளுக்கும், வேதனைகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய குற்றவாளிகள் ராஜபக்‌ஷேவும், பிரபாகரனும்தான்.

’துன்பியல் நிகழ்வு’ என்பது அலங்கார பூசிமெழுகல் வார்த்தையில்லை, அதன் வலியும் வேதனையும் எத்தனை கொடூரமானது என்பதை தெரிந்து கொள்ள புலிகள் மிகப்பெரிய விலை கொடுத்திருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை....

இலங்கையின் அரசியல்வாதிகளுக்கு புத்தி வர முப்பதாண்டுகள் ஆகியிருக்கிறது, இந்தியா மாதிரியான பிராந்திய வல்லரசின் துனையில்லாமல் பயங்கரவாதத்தினை அழித்தொழிக்கமுடியாது என்பதை உணர்ந்ததன் விளைவே தற்போதை வெற்றிகள்.மிகவும் தீர்க்கமான திட்டமிடலும், நேர்த்தியான செயல்பாடுமே வலுவான ஒரு எதிரியினை முடக்க முடியும். இதை இலங்கை,இந்தியா மாதிரியான துனையுடன் சாதித்துக் காட்டியிருக்கிறது என்பதுதான் உண்மை.

எதிரியினை குறைவாக மதிப்பிட்டதும், தனது திறமை மீது அதீத தற்பெருமை கொண்டிருந்ததும்தான் இன்றைய புலிகளின் பின்னடைவுக்கு காரணமாயிருந்திருக்கும்.இந்தியா மாதிரியான ஒரு அண்டை சக்தியினை நட்புடன் கையாளத்தெரியாததும் இன்னொரு பின்னடைவு, வைக்கோ மாதிரியான அட்டைக்கத்தி வீரர்களை நம்பாமல் ஜார்ஜ் பெர்னாண்டஸ்,சுர்ஜீத் சிங்க் மாதிரியான செயல்வீரர்களை எளிதில் அனுகும் வாய்ப்பிருந்தும் அதை ஏன் கோட்டைவிட்டார்கள் என்பது எனக்கு இன்னமும் பிடிபடாதது.

குற்றம் குறைகளை சுட்டிய நான் அதற்கான எனது தீர்வுகளை அடுக்காமல் போனால் நான் ஒருதலைபட்சமானவனாய் தீர்மானிக்கப்படுவேன், எனக்கு அதில் உடன்பாடில்லை.நடந்தது நடந்து விட்டது, இனி நடந்ததை பற்றி பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.உண்மையிலேயே ஈழத்தமிழர்களுக்கு நிம்மதியான அரசியல் தீர்வொன்று கிடைக்குமானால் அது தமிழகத்திலிருக்கும் அரசியல் வாதிகளால் ஆகாது, ஆனால் தமிழகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறானே அந்த சாமானிய தமிழனால் மட்டுமே முடியும்.

தற்போதைய சூழலில் புலிகள் என்பதுகளின் துவக்கத்தில் தமிழக ஆதரவினை திரட்ட எத்தகைய பிரச்சார உத்தியினை மேற்கொண்டார்களோ அத்தகைய செயல்பாடொன்றினை மிகத்தீவிரமாய் தமிழக்த்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவசெய்தல் அவசியம், என்ன அன்றைக்கு ஆளும் அரசின் ஆதரவிருந்தது, இன்றைக்கு அத்தனை வெளிப்படையான ஆதரவில்லைதான், ஆனாலும் கலைஞர் நிச்சயம் உதவுவார்.ஈழத்தமிழனின் அவலத்தினை உணர்ச்சிவயமில்லாமல், நிதானமாய் மூலைமுடுக்கெல்லாம் வேதனையான பக்குவத்தில் கொண்டு சேர்க்கும் வல்லமை திருமாவளவனிடம் இருக்கிறது.வடமாவட்டங்களில் இதை ராமதாஸை கொண்டு சாதிக்கலாம்.

தூங்கிவழியும் தமிழன் சிலிர்த்தெழுவார்களேயானால், காங்கிரஸ் அடிப்பொடிகள் வாயையும்,மற்றதையும் பொத்திக்கொண்டு காணாமல் போய்விடுவர், பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் வேளையில் ஓட்டுக்காகவாவது மத்திய அரசு இலங்கை அரசினை தற்காலிகமாய் முடக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் என்பது திண்ணம். இந்த அவகாசத்தில் அரசியல் ரீதியான தீர்வுகளுக்கு புலிகள் தங்களை தயார்செய்து கொள்வதும் பிரச்சினையின் தீர்வுக்கு அவசியமான அவசியம்.

விடுதலைபுலிகள் சில தியாகங்களுக்கு தயாராக வேண்டிய அவசியம் வந்திருக்கிறது, அவர்கள் போராடும் தமிழர்களுக்காக இதை செய்துதானாக வேண்டும்...செய்வார்களா?

22 comments:

அபூ அப்திர்ரஹ்மான் said...

அருமையான பதிவு. எழுத்துரு மிகவும் சிறிதாய் உள்ளது. படிப்பவர்களுக்கு அலுப்பு ஏற்படும். எனவே பெரிய எழுத்துக்களில் பதியுங்கள்.

Anonymous said...

புத்தனல்ல வெறும் பித்தனென்று உங்கள் எழுத்திலயே தெரியுது.

மங்கை said...

''the crime of suicide lies rather in its disregard for the feelings of those whom we leave behind.''

ஒரு மகனை இழந்த குடும்பம் தான் என் கண் முன்னே வருது...

தனது உயிரையே மாய்த்துக் கொள்வதால் ஆட்சியாளர்கள் திருந்துவார்கள் என்று இவர் நினைத்திருந்தால்...ஹ்ம்ம்ம் என்ன சொல்ல...

யட்சன்... said...

எழுத்துறுவை மாற்றுகிறேன் ரஹ்மான்...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

அனானி நண்பரே ...என்னை பித்தனென்று ஒப்புக்கொண்டமைக்கு நன்றி..

மங்கை, இரண்டொரு நாள் இவர்களின் கவனிப்பும் அனுசரனையும் அந்த குடும்பத்திற்கு இருக்கும், ஆனால் இனிவரும் நாட்களில் அந்த குடும்பம் நிர்கதியாய் நிற்கும் அதுதான் நிதர்சனம்...ம்ம்ம்ம்ம்

Unknown said...

//தமிழுணர்வாளர்களின் வெறும் வாய்க்கு அவலாய் போனதை தவிர அந்த இளைஞனால் எதை சாதிக்கமுடிந்ததென தெரியவில்லை. இயலாமையின் உச்சத்தில் கவன ஈர்ப்பாய் செய்ததை தியாகமென சொல்வதை காட்டிலும் தற்கொலையென்றே வரையறுக்கலாம்.தற்கொலைகள் மன்னிக்க முடியாதது.....

சாகும்வரை உண்ணாநிலையெடுத்தவர்கள், கள்ளத்தோணியேறியவர்களுக்கில்லாத இன உணர்வினை இந்த இளைஞர் எங்கிருந்து பெற்றார்?...நிதர்சனங்களை மீறிய மூளைச்சலவை இத்தகைய முடிவுகளுக்கு இட்டுச்சென்றிருக்கலாம்தான்...ஆனால் இத்தகைய சலவையாளர்கள், கொழுக்கட்டை கொழுக்கட்டையாய் எந்த சேதாரமுமில்லாமல் நேற்றைக்கும், இன்றைக்கும் ஏன் என்றைக்குமிருப்பார்கள் என்பதை அந்த இளைஞர் உணராமல் போனதை என்னென்பேன்//
நிதர்சனத்தை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளீர்கள்.

//ஓட்டுக்காகவாவது மத்திய அரசு இலங்கை அரசினை தற்காலிகமாய் முடக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் என்பது திண்ணம்//
இந்தியா நிறுத்தி விட்டாலும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் தன் வலிமையைக் கூட்டிக் கொள்ளவாவது வேறொரு நாடு இவ்வுதவியை இலங்கைக்குச் செய்யாது என்று உறுதியாகக் கூற இயலுமா? இலங்கை மற்றொரு நாட்டின உதவியை நாட வாய்ப்புகள் ஏதுமில்லையா?

Anonymous said...

*தமிழுணர்வாளர்களின் வெறும் வாய்க்கு அவலாய் போனதை தவிர அந்த இளைஞனால் எதை சாதிக்கமுடிந்ததென தெரியவில்லை. இயலாமையின் உச்சத்தில் கவன ஈர்ப்பாய் செய்ததை தியாகமென சொல்வதை காட்டிலும் தற்கொலையென்றே வரையறுக்கலாம்.தற்கொலைகள் மன்னிக்க முடியாதது.....*
*விடுதலைப்புலிகளின் செயல்களையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நியாயப்படுத்தும் போக்கினை யார் துவங்கினார்களென தெரியவில்லை, ஆனால் இன்றைக்கும் அதே வரையரையாய் போனதுதான் இத்தனை அனர்த்தங்களுக்கும் காரணாயிருக்குமென நினைக்கிறேன்.விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதென்று எதுவுமில்லாத நிலையில்...விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவமில்லாதவர்களின் எதிர்வினைக்கு பயந்து முப்பது வருடங்களுக்கு மேலாய் புனிதபதாகையினை புலிகளுக்கு தந்த என் தமிழினமும் குற்றவாளிதான்.*

மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
விடுதலைபுலிகள் மக்களுக்காக எந்த தியாகமும் செய்ய மாட்டர்கள். மக்கள் தான் புலிகளின் யுத்தத்திற்காக தங்கள் வாழ்வையும் பிள்ளைகளையும் பறி கொடுத்தார்கள்.
புலிகள் தங்களால் யுத்தம் செய்ய முடியாத போது யுத்த நிறுத்தம் கேட்பார்கள். அல்லது மக்களை பாதுகாப்பு கவசமாக பயன்படுத்துவார்கள்.

முச்சந்திமுரளி said...

//இலங்கையின் அரசியல்வாதிகளுக்கு புத்தி வர முப்பதாண்டுகள் ஆகியிருக்கிறது, இந்தியா மாதிரியான பிராந்திய வல்லரசின் துனையில்லாமல் பயங்கரவாதத்தினை அழித்தொழிக்கமுடியாது என்பதை உணர்ந்ததன் விளைவே தற்போதை வெற்றிகள்.மிகவும் தீர்க்கமான திட்டமிடலும், நேர்த்தியான செயல்பாடுமே வலுவான ஒரு எதிரியினை முடக்க முடியும். இதை இலங்கை,இந்தியா மாதிரியான துனையுடன் சாதித்துக் காட்டியிருக்கிறது என்பதுதான் உண்மை.
//
இது சரியான வாதம்தான் ஆனாலும் வார்தைக்கு வார்தை இந்தியாமாத்திரியான... இந்தியாமாத்திரியான...
வல்லரசின் உதவியில்லாமல் என்று கூறிக்கொள்வதுதான் வேடிக்கையான விடையம்.... அது சரிங்க இந்த்தியா எப்பவுங்க வல்லரசு ஆனது... ஈழத்தமிழர் கொலைகளுக்கு வேண்டுமானால் உங்கள் வல்லரசு கண்டிக்காமல் இருக்கலாம்... தன் நாட்டு மக்கள் (மீனவர்) கொல்லப்படுவதுகெல்லாம்....கண்டனம் தெரிவிக முடியாத... கையாலாகத.. பெடித்தனமான நாடுகள் எல்லாம் வல்லரசுங்களாண்னா.. என்ன விசியகாந்படமாண்ணா...
...................................

இந்தியாக்கு செல்லப்பிள்ளை மாத்தி ஆட்டங்காட்டும்.. ரஜப்க்சே... பாகிஸ்தானையும்.... ஆசியவல்லரசு சீனவினையும் தானுங்க ரொம்பவே நம்பிருக்குதுங்கண்ணா.... நம்ம இந்த்தியாஇருக்கே.. வடிவேலு தான் ரவுடி எண்டு வானிலை போய் ஏறிக்கிறமாத்தி தன்னை பெரிய ஆளாக்காட்டிக்க நினைக்குது.. அவ்வளவுதானுங்கண்ணா....

முச்சந்திமுரளி said...

(

யட்சன்... said...

முரளி...

நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்தியா பிராந்திய வல்லரசுதான்.

மற்றபடி உங்களின் கருத்துக்களை மதிக்கிறேன்.

Anonymous said...

அய்யா யட்சன் நல்லா விமர்சனம் செய்கிறீங்க. உங்க பொண்டாட்டிய யாராவது உங்க கண்முன்னாடி கற்பழித்தாலும் இப்படியே விமர்சனம் செய்.இப்படியெல்லாம் விமர்சனம் செய்தால் தான் முற்போக்குவாதி என்று பெயர் எடுக்கலாம்,.
சிந்திக்க சொன்ன சாக்ரடீஸ் கூட முட்டாள் தான். பொழைக்கதெரியாத மனிதன்.யார் எப்படி வேண்டுமானாலும் வாழட்டுமே நாம் ஏன் சிந்திக்க சொல்லவேண்டும் என்று நினைத்திருந்தால்,மற்றநாடுகளும் இந்தியா,இலங்கை போல இருந்து இருக்கும்.ஏன்னென்றால் அவர்கள் 21ஆம் நூற்றாண்டில் வாழ்கிறார்கள்.நாம் இன்னும் 15ஆம் நூற்றாண்டில் தானே வாழ்கிறோம்.முட்டாள்தனமும் ,மூடதனமும்தானே உள்ளது.

யட்சன்... said...

ரூபகாந்தன்...

உங்கள் கோபம் நியாயமானதுதான், நானும் சிந்திக்கத்தான் சொல்கிறேன், அடுத்தவனையே குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறோமே, முப்பத்தி ஐந்து வருடங்கள் கழித்தும் இன்னமும் அதே நிதர்சனம் நீடிக்கிறதே, ஏன் இந்த நிலமை என சிந்திக்கத்தான் சொல்கிறேன்.

வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள தெரிந்தவன் அதை பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்....முப்பத்தி ஐந்து வருடங்களில் எத்தனை வாய்ப்புகள் வந்தது, என்ன செய்து கிழித்தனர் வாய்ப்புகளை உருவாக்கியோர்...யோசியுங்கள்.

சுய விமர்சனங்களை கூட தகிக்கமுடியாது, பாலியல் வல்லுறவு மாதிரியான கொந்தளிக்கும் உணர்வுகளின் போர்வையை போட்டு பிரச்சினையை மூடிவிட்டால் நாற்றம் வெளியே வராது போய்விடுமா என்ன?...யோசியுங்கள் தோழர்களே

Anonymous said...

அய்யா யட்சன் நல்லா விமர்சனம் செய்கிறீங்க. உங்க பொண்டாட்டிய யாராவது உங்க கண்முன்னாடி கற்பழித்தாலும் இப்படியே விமர்சனம் செய்.இப்படியெல்லாம் விமர்சனம் செய்தால் தான் முற்போக்குவாதி என்று பெயர் எடுக்கலாம்,.
சிந்திக்க சொன்ன சாக்ரடீஸ் கூட முட்டாள் தான். பொழைக்கதெரியாத மனிதன்.யார் எப்படி வேண்டுமானாலும் வாழட்டுமே நாம் ஏன் சிந்திக்க சொல்லவேண்டும் என்று நினைத்திருந்தால்,மற்றநாடுகளும் இந்தியா,இலங்கை போல இருந்து இருக்கும்.ஏன்னென்றால் அவர்கள் 21ஆம் நூற்றாண்டில் வாழ்கிறார்கள்.நாம் இன்னும் 15ஆம் நூற்றாண்டில் தானே வாழ்கிறோம்.முட்டாள்தனமும் ,மூடதனமும்தானே உள்ளது.
January 31, 2009 2:33 AM

vazhimozigiren

raaavin thayavaal adutha poraatam viraivil aarambam aguum.
athu muslimkalukkum powthargalukumaga irukkum.

unarthukol muttaale

யட்சன்... said...

vazhimozigiren...

"He Who Sits in a Well to Look at the Sky Can See But Little"

:)

முட்டாளென விளித்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகள் :)

Unknown said...

அருமை.. ஆனா கடைசில ரொம்ப குழப்பிட்டீங்க.. இலங்கை இந்தியாவின் துனைக்கொண்டு புலிகளை ஒடுக்கி வருவது சரி என்பதை தெளிவாக சொல்லவந்த நீங்கள் என்னமோ கடைசியில் தடுமாறி புலிகள் , தமிழர்கள் ஆதரவு தரனும் நு சொதப்பிட்டீங்க...
ஒரு வேளை காங்கிரஸ் மீதிருக்கும் அரசியல் வெறுப்பை வெளிக்காட்டவா?

உங்கள் கட்டுரையின் ஆரம்பப்பகுதியின் அப்படியே எடுத்துப்போய், தீவிரவாதிகளாம் புலிகளை நசுக்கிடவேண்டும்னு முடிதிருக்கனும்..

தமிழ் அமுதன் said...

///தற்போதைய சூழலில் புலிகள் என்பதுகளின் துவக்கத்தில் தமிழக ஆதரவினை திரட்ட எத்தகைய பிரச்சார உத்தியினை மேற்கொண்டார்களோ அத்தகைய செயல்பாடொன்றினை மிகத்தீவிரமாய் தமிழக்த்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவசெய்தல் அவசியம்///


இதைதான் நானும் சொல்கிறேன்!

விடுதலை புலிகளைப்பற்றி என்னதான் விமர்சனம் செய்தாலும்

சரி! விடுதலை புலிகள் தோன்றாமல் இருந்திருந்தால் தமிழ் இனத்தை சிங்களவர்கள் முற்றிலும் அழித்திருப்பார்கள்!

விடுதலை புலிகள் தோன்றிய வரலாற்றை சற்று நினைவு கூறுங்கள்!

Anonymous said...

புலிகள் மற்ற போராளி குழுக்களை ஏன் கொன்றார்கள் என்று யாராவது சொல்லுங்களேன்.

Anonymous said...

தனி ஈழத்தை தவிர வேறு எதுவுமே சாத்தியம் இல்லை என்பது அவர்கள் நிலை என்றால் மற்றவர்கள் உதவி அவர்களுக்கு எதுக்கு?

யட்சன்... said...

அம்மு...

இன்றைக்கு எஞ்சியிருக்கும் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு பிரதிநிதிகளென்றால் தற்போதைக்கு அது விடுதலைப்புலிகளாய்த்தான் இருக்க முடியும்.அதில் மாற்றுக் கருத்தில்லை.அதே நேரத்தில் நம்மூர் அரசியல் வாதிகளுக்கும் புலிகளுக்கும் பெரிதாய் வித்தியாசமில்லை, பிரச்சினையென வரும்போதெல்லாம் போர் நிறுத்தம், அரசியல் தீர்வு, தமிழக தலையீடு,சர்வதேச தலையீடு எனகேட்டு தங்களை பாதுகாத்துக் கொள்வதும்....பேச்சு வார்த்தையென போக்குக் காட்டி தங்களை வலுவாக்கிக்கொண்டு மீண்டும் சண்டைபிடிப்பதும் முப்பத்தி ஐந்து ஆண்டுகளாய் தொடர்வதைத்தான் நான் ஆட்சேபிக்கிறேன்.

இவர்களின் இத்தகைய சந்தர்ப்பவாத போக்கினால், காலப்போக்கில் இந்தியா, ஐரோப்பிய, கன்னடிய சமூகங்களின் ஆதரவையும், அனுசரனையையும் இழந்து வந்திருக்கின்றனர் என்ப்தை இந்த கடைசி வாய்ப்பிலாவது உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு....

குறைந்த பட்சம் இந்த நிலையிலாவது,விடுதலை புலிகள் நிதர்சனங்களை உணர்ந்து அரசியல் ரீதியான சமரசங்களுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதே இலங்கை தமிழனத்தின் எதிர்காலத்திற்கு அவர்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்.

Anonymous said...

ராஜபக்‌ஷேவும், பிரபாகரனும்தான்.
//

இந்தியாவிற்கு பொறுப்பேயில்லையா.. ?

Anonymous said...

தோழரே அங்கு அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்,பெண்களை மானபங்கப்படுத்துகிறார்கள்.இப்போது தத்துவத்திற்கு இடமில்லை.தவறுகள் நடந்து இருக்கிறது நான் ஒத்துக்கொள்கிறேன்.ஆனால் அதை சுட்டிக்காட்டுகிற நேரம் இதுவல்ல.அப்படி காட்டினால் நமக்கும் சிங்காளர்களுக்கும் வித்தியாசமே இல்லாமல் போகும்.இந்த சூழலில் உலகத்தமிழர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளுக்குதான் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.நாம் ஆதரவு தெரிவிக்கதேவையில்லை.எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் போதும்.இங்கு உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறவர்கள் பெரும்பாலும் பார்ப்பன வாசமே விசுகிறது.முத்துகுமாரன் தற்கொலை செய்துக்கொண்டது மிகவும் சரிதான். தமிழ் மக்கள் பெரும்பாலும் மது,மாது,சாதி,மதம் என்று பிரிவினையில் மூழ்கி இருக்கிறார்கள். நாய்களுக்கும்,காக்கைக்கும் இருக்கிற உணர்வுக்கூட தமிழனுக்கு இருப்பதில்லை.தமிழனை தவிர அனைவரும் அவன் இன உணர்வுடன் இருக்கிறான்.மூத்த தமிழ்க்குடி இன்று மூழ்கிகொண்டுயிருக்கிறது.எல்லோருக்கும் ஆனந்தம் தான்.

Anonymous said...

யட்சன் தாங்கள் காங்கிரஸ் அனுதாபி என்று நினைக்கிறேன். பெரும்பாலும் பார்ப்பனர்களின் கூடாரம் தான் இந்த காங்ரஸ் கட்சி மற்றும் பி.ஜே.பி.ஒரு வலைப்பதிவில் தங்கள் ராஜிவ்காந்திக்கு ஆதரவாக கருத்துவைத்துயிருந்திர்கள்.ராஜிவ்காந்தியை விடுதைபுலிகள் கொலைசெய்தார்கள் என்றுதான் இந்தியா சொல்கிறது.ஆனால் எதற்கு கொலைசெய்தார்கள் என்று யாரும் கேட்கவில்லை,விசாரிக்கவும் இல்லை.இதுதான் இந்தியாவின் பார்ப்பனர்களின் ஆட்சி.பெரும்பான்மை சமுகத்தினை,சிறுபான்மையான பார்ப்பனர்கள் ஆட்டிவிப்பது. மக்களுக்காக தான் ஆட்சி,ஆட்சிக்காக மக்கள் இல்லை.
ராஜிவ்காந்தி ஒருசாதாரண இந்திய குடிமகன் அவ்வளவுதான்.அவர் வரம்புமீரும்போது மற்றவர்கள் மீறக்கூடாதா?
மேலும் முத்துக்குமாரன் வேறு என்ன முடிவு எடுத்து இருக்கவேண்டும்.அவர் தமிழை நேசிப்பவர் ஈழமக்களுக்கு எதாவதுசெய்யவேண்டும் என்று நினைக்கிறார்.இங்கு மக்கள் பக்கத்துவிட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாத முட்டாளாக இருக்கிறார்கள்.அவர் என்ன செய்து இருக்கவேண்டும்? நீங்களே சொல்லுங்கள்.

Anonymous said...

Perfect Article.

Why don't you guys ask the LTTE to release the civilians from their controled area cos they are the ones using the innocent civilians as human shields. If you really want to save the Tamil people you should organize your processions in this context.
Tell the Tamilians from Tamilnadu to stop praising LTTE, rather blaming the SL government ask LTTE to release people. Don't trust Nadesan's (LTTE Political Head) speaches. Pirabaharan thought that he could be the one & only representative of Tamils, he killed the people who had alternate/different thoughts. He is a Hitler.

I am a frostrated/affected Sri Lankan Tamil who lost 13 members in my close family for this bloody war.