ஏன் ஒரு பதிவர் கூட தீக்குளிக்கலை?

Thursday, April 9, 2009

இந்த தலைப்பு இங்கே பலருக்கு சுர்ர்ர்ர்ர்ர்ர்ரென கோபத்தை வரவைக்கும்தான். இந்த மேட்டரை வைத்துக் கொண்டு எத்தனை சீன் போட்டார்கள் இந்த பதிவர்கள்....நினைத்தாலே புல்லரிக்கிறது. எனக்கு தெரிந்து ஈழத்துயர் குறித்து சகோதரி தூயா மற்றும் தமிழ்நதியின் பதிவுகளை தவிர்த்து பெரும்பான்மையான பதிவுகளில் ஒரு வித போலித்தனமே மிஞ்சியிருந்தது. தங்களின் இந்த போலித்தனத்தையும், விளம்பரவெறியையும் இன உணர்வு போர்வைக்குள் இருத்திக்கொண்ட அவலத்தினை பொறுக்கவியலாமல் கேள்வி எழுப்பிய சிலரும் சோனியாவின் அடிவருடியாக, பார்ப்பன குஞ்சாக பட்டம் சூட்டப்பட்டது இந்த கேலிக்கூத்தின் உச்சம்.

தீக்குளித்து செத்துப்போனவர்களின் படங்களை தங்கள் பதிவில் போட்டுக்கொள்ள இவர்கள் காட்டிய ஆர்வத்தில் விளம்பரப்பிரியமே மேலோங்கியிருந்தது என்றால் மிகையில்லை. நான் கூட இந்த இன உணர்வாளர்கள் தங்களால் ஆன அளவு நிதியெதுவும் திரட்டி தற்கொலையாளர்கள் கைவிட்டுப் போன அவர்தம் குடும்பத்தார்க்கு வழங்குவார்கள் என்றெல்லாம் எதிர்பார்த்தேன். ஒரு பதிவர் இருபது லட்சம் திரட்டி தரப்போவதாக பதிவு போட்டதெல்லாம் இப்போது என் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

இதில் இன்னொரு வகை பதிவர்கள்....ஈழத்தின் உண்மையான கள நிலவரம் எதுவும் தெரியாமல் தமிழ்நெட் போன்ற தளங்களின் செய்திகளை வைத்துக் கொண்டு தங்கள் இஷ்டத்திற்கு உண்மைக்கு சற்றும் நெருக்கமில்லாத செய்திகளை ஊதிப்பெருக்கி பதிவாக்கியதை கேலிக்கூத்தென்பதா இல்லை வஞ்சப்புகழ்ச்சியென்பதா?

இடது சாரி பதிவர்களாய் காட்டிக்கொள்வதில் சிலருக்கு எப்போதுமே அலாதிபிரியம்.....இந்த கொள்கை குஞ்சுகள் ரிலையன்ஸ் நம்மூரில் கடை பரப்பியபோது காட்டிய ஆவேசத்தை பார்த்து நான் ரொம்பவே சந்தோசபட்டேன்....எகிறி குதித்து அம்பானியின் குமட்டில் குத்திவிடுவார்கள் என்றெல்லாம் கூட நம்பினேன்.....என்னவாயிற்று?..... இந்த வறட்டுக் கூச்சல் ஆசாமிகளுக்கு ஈழப்பிரச்சினை பார்த்தவுடன் தேன் குடித்த நரியாய் தங்கள் சாமர்த்தியங்களையெல்லாம் திரட்டி உருட்டி மத்திய மாநில அதிகார மய்யங்களை குறி வைத்தெறிந்து கூத்தாடினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த செம்மறியாட்டு மந்தையில் சில கட்சி அபிமானிகளும் தங்கள் கட்சியை விமர்சிக்கிறேன் பேர்வழியென மல்லாக்கப் படுத்து எச்சில் துப்பிக் கொண்டது தமாஷான தமாஷ். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்கள் வேதனைகளை பதிவில் வடிப்பதற்க்கும், இங்கே எல்லாவிதமான சவுகரியங்களையும் அனுபவித்துக் கொண்டு நாங்களும் வேதனைப்படுகிறோமாக்கும் என்பதை காட்டிட பதிவிடுவதற்க்கும் உணர்வு ரீதியாக நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.அவர்களின் வலி நிஜமானது...இழப்புகள் ஈடு செய்ய இயலாதது. அவர்களின் ஆத்திரத்தையும், இயலாமையின் கொதிப்பையும், எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தையும் நாம் ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும்

இவர்களுக்குள் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை இருக்கிறது....இன உணர்வு என்பீர்கள்....அதெல்லாம் இல்லை....இல்லவே இல்லை...இவர்கள் அனைவரும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்...அதுதான் இவர்களிடத்தே உள்ள ஒற்றுமை. திரு,பிரபாகரனாகட்டும், ராஜபக்சேயாகட்டும், சோனியாவாகட்டும் ஒவ்வொரு திட்டத்தையும் இவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு எடுத்தது போல சகட்டும் மேனிக்கு எழுதும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தனம்தான் இவர்களின் ஒற்றுமை.

அநேகமாய் எல்லா சாவு வீடுகளிளும் காணக்கிடைக்கும் ஒரு காட்சி....வீட்டின் வாசல்படி வரை சிரித்துப் பேசிக்கொண்டு வருவார்கள். வீட்டுக்குள் நுழைந்த உடனே...கண்ணீர் தேக்கி பெருங்குரலெடுத்து ஒப்பாரி வைப்பதும், வீட்டை விட்டு வெளியே வரும்போது எதுவும் நடக்காதது போல கெக்கே பிக்கேவென சிரித்துக் கொண்டு செல்வதை பார்க்க இயலும். அது கூட இன உணர்வுதான்....அத்தகைய இன உணர்வுதான் பதிவுலகில் பெரும்பான்மையாக காண முடிகிறது. இதுவா இத்தருணத்தின் தேவை. இதையா ஈழச்சகோதரன் நம்மிடம் எதிர்பார்க்கிறான்.

இன்றைக்கு ஈழத்தமிழனின் உடனடித் எதிர்பார்ப்பு தனி தமிழ் ஈழமோ, பேச்சுவார்த்தையோ அல்ல.....உயிருக்கு உத்திரவாதம், உடமைகளுக்கு பாதுகாப்பு...அடுத்த வேளை உணவு. இதுதான் இன்றைய நிதர்சனம், இந்த உத்திரவாதத்தை பெறுவதுதான் இந்த போராட்டங்களின் இலக்காய் இருக்கவேண்டும். ஏனெனில் விடுதலை புலிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள போராடவேண்டிய சூழலில், தங்களை நம்பியிருந்த அப்பாவிகளை எங்கேயிருந்து அவர்களால் காப்பாற்ற முடியும். எனக்குத் தெரிந்து எவரும் இதை முன்வைத்து பதிவிடவோ, போராடவோ முனையவில்லை.

ஈழப்பிரச்சினை குறித்து விவாதிப்பதல்ல இந்த பதிவின் நோக்கம்...எரிகிறவீட்டில் பிடுங்கியது வரையில் ஆதாயமென்கிற மாதிரி, ஒரு சமூகம் சாவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் போது உணர்வாளன் என்கிற போர்வையில் விளம்பரம் தேடிய...தேடிக்கொண்டிருக்கின்ற பதிவர்களை பற்றியதே.....இந்த பதிவின் தலைப்பும் அத்தகைய மகா நடிகர்களை நோக்கியதே !

22 comments:

சிம்பா said...

மீ த முதல்....

சிம்பா said...

பிரபாகரனுக்கு கட்சி ஒன்று ஆரம்பித்து அவர் தான் அடுத்த பிரதமர் என்ற வகையில் கூட விவாதங்கள் சென்றது...


ஈழத்துக்கு குரல் குடுத்தால் மட்டுமே(நன்றாக கேளுங்கள், குரல் மட்டுமே) உண்மை தமிழன்.


வைகோ, நெடுஞ்செழியன் தலைமையில் உணவுக்கப்பல் அனுப்பும் போராட்டத்தில் நேரில் சென்று கலந்துகொண்டபோதுதான் தெரிந்தது இவர்களின் லட்சணம்.

சிம்பா said...

ஆனால் இரண்டு நாட்க்களாக விஷ குண்டுகளை போட்டு தாக்குதல் நடப்பதாக வரும் செய்திகளை கேட்டால் நெஞ்சம் பதபதைக்கிறது...


ஒரு தமிழ் பேசும் மக்களாவது உயிருடன் பிழைப்பார்களா? இதற்க்கு மேலும் இந்திய அரசு மௌனம் காத்தால் இவர்கள் அனைவரும் இரும்பாலான இதயத்தை கொண்ட நடமாடும் மிருகங்கள்.

சென்ஷி said...

ஒண்ணுமே பேசலை. வெறுமனே இந்த பதிவை படிச்சேங்கறதுக்காக ஒரு கமெண்ட்ட போட்டுட்டு போயிக்கறேன்.. ஓக்கேவா..!!

ILA (a) இளா said...

ஒண்ணுமே பேசலை. வெறுமனே இந்த பதிவை படிச்சேங்கறதுக்காக ஒரு கமெண்ட்ட போட்டுட்டு போயிக்கறேன்.. ஓக்கேவா..!!//

ரிப்பீட்டுன்னு சொல்லிக்கலாம், ஆனாலும்..
என்னைப் பொறுத்தவரையில் பதிவுல எழுதறது எல்லாமே கக்கூஸ்ல தொடைக்க காயிதம் மாதிரிதான். என்ன அந்தக் காயிதமாவது தொடக்க உபயோகமாயிருக்கும்.

துவாரபாலகன் said...

வேண்டாம் யட்சன் நீங்க தீக்குளிச்சிடாதீங்க. டீ வேணா குடிங்க!

பீன்னூட்டம் பீட்டர் said...

ரிப்பீட்டுன்னு சொல்லிக்கலாம், ஆனாலும்..
என்னைப் பொறுத்தவரையில் பதிவுல எழுதறது எல்லாமே கக்கூஸ்ல தொடைக்க காயிதம் மாதிரிதான். என்ன அந்தக் காயிதமாவது தொடக்க உபயோகமாயிருக்கும்.

சாரி ஐ பெக் டு டிப்பர் வித் யூ. ஐ வுட் சே பீபிள் ஹூ லுக் ஃபார் க்ராப் ஃபைன்ட் இட். ஹூ லுக் ஃபார் சப்ஸ்டேன்ஸ் டேக் இட். இட்ஸ் ஆல் இன் வாட் யூ லுக் ஃபார்!!!

nagai said...

உலகம் எப்படின்கிறதுங்கிற்து உங்களுக்கு தெரியும்...அடுத்தவனுக்கு பிரச்சனைன்னா ஓடிபோறது முதல்ல நம்மளாத்தான் இருக்கும்......உன்மைய சொன்னா இல்ல பதிஞ்சா களி இல்லன்னா ஆட்டோதான்.....நாங்கள் எல்லாம் பாக்க வீரமாத்தான் இருப்போம்,பேசுவோம்....கண்டுக்கிட கூடாது...

அப்பாவி முரு said...

//ஒரு பதிவர் இருபது லட்சம் திரட்டி தரப்போவதாக பதிவு போட்டதெல்லாம் இப்போது என் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.//

அனேகமாய் அந்த பதிவுக்கு வரும் ஹிட்ஸை சொல்லியிருப்பார்.

மற்றபடி முற்றிலும் எதார்த்தம்., இது தான் உண்மை.

ILA (a) இளா said...

உசுர வுட்டவங்களுக்ககே பதில் இல்லே இதுலே எழுதி கிழிச்சா மட்டும் வந்துரப் போவுதா?

கரு said...

இதே கேள்வியை இதை எழுதும் உங்களுக்கும் பொருத்தலாம் தானே? பதில் சொல்லுங்கள் நீங்கள் ஏன் தீக்குளிக்கவில்லை?

கரு said...

//உசுர வுட்டவங்களுக்ககே பதில் இல்லே இதுலே எழுதி கிழிச்சா மட்டும் வந்துரப் போவுதா?//

அப்ப ஊர்ல இருக்குர பேப்பர், டீவி சேனல், ரேடியோ, இன்டெர்நெட் எல்லாத்தையும் ஊத்தி மூடிடுவோம். ஆர்எஸ்எஸ் தலைமையில் இந்தியாவில் ஒரு தாலிபான் அமைப்போம்.

Anonymous said...

////என்னைப் பொறுத்தவரையில் பதிவுல எழுதறது எல்லாமே கக்கூஸ்ல தொடைக்க காயிதம் மாதிரிதான். என்ன அந்தக் காயிதமாவது தொடக்க உபயோகமாயிருக்கும்.///////

பொறவு என்னா இதுக்கு நீங்க எல்லாம் ப்ளாக் வைச்சிகினு, எழுதீட்டு திரியுறீக, இதில தொரட்டி வேற வைச்சு நடத்துறீங்களாம்........ யப்பாஆஆஆஆ தாங்கலாடா சாமீ

Thekkikattan|தெகா said...

is this post written in a positive antagonistic tone? or you too aimed at getting mere "hits"?

Thekkikattan|தெகா said...

//என்னைப் பொறுத்தவரையில் பதிவுல எழுதறது எல்லாமே கக்கூஸ்ல தொடைக்க காயிதம் மாதிரிதான்.//

appadiya? then why we even bother to come and open the blogs to read??

appo ennathaan pannalam???

யட்சன்... said...

தனிப்பட்ட எவரையும் குறிவைத்து இந்த பதிவு எழுதப்படவில்லை....கடந்த சில வாரங்களாய் முக்கியமான ஒரு பிரச்சினையில் பங்களிக்கிறோம் பேர்வழியென வீரவசனம் பேசி விளம்பரம் தேடிக்கொண்ட பதிவுலக போக்கினை குறித்த பொதுவான பார்வையே...

பரபரப்பிற்காகவோ அல்லது நிறைய ஹிட்ஸ் வேண்டுமென்பதற்காகவோ பதிவெழுதும் பதிவர் நானில்லை.

சிம்பா said...

//இதே கேள்வியை இதை எழுதும் உங்களுக்கும் பொருத்தலாம் தானே? பதில் சொல்லுங்கள் நீங்கள் ஏன் தீக்குளிக்கவில்லை?//

ஆமாம் தீக்குளிப்பது என்ன டீ குடிப்பது போல் அவளவு சுளுவான மேட்டர் அ?

பாலா said...

என்னோட பார்வையில இப்படி பேசறதுக்கு பதிலா வர்ற தேர்தல்ல இந்த கேப்மாரிகள ஓட..ஓட ........தொரத்தனும்.......அதவுட்டுட்டு இப்படி பேசறது மறுபடி அரசியல்வாதிய போல இருக்க கூடாது.........தேர்தல் வந்ததும் பேரணி நடத்துராங்கலம் இவுங்களை என்ன பண்ணலாம்..............

காட்டாறு said...

சூடு ஜாஸ்தி தான்! யட்சகன், இப்படி பலர் மனதை தீக்குளிக்க வைக்கலாமா? உங்க பெயருக்கு பொருத்தமா இல்லையே. நீங்க என்ன செய்தீங்கன்னு கேட்பதற்கு பதிலா, நான் இதை செய்தேன்னு சொல்லியிருக்கலாமோ? Same effect இருந்திருக்குமே.

Athisha said...

அண்ணே எதையோ சொல்ல வர்றீங்கனு தெரியுது ஆனா என்னனு தெரியலயே!

மண்டைல அடிச்சா மாதிரி நங்னு சொல்லுங்க

Suresh said...

தீக்குளித்த முத்துக்குமாரோட நான் எடுத்த ஒரு சமீப பேட்டி
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_08.html

அன்பரசு said...

நீங்கள் கூறியுள்ள கருத்துகள் உண்மையே, அதே நேரத்தில் பொத்தாம் பொதுவாக அனைவருமே இப்படித்தான் என்று வரையறை செய்வது ஏற்புடையதல்ல. தீக்குளிப்பது எப்படி ஒரு தீர்வாகும்? தமிழ் ஈழத்திற்காக இதுவரை பலிகொடுக்கப்பட்ட உயிர்கள் எத்தனை? ஆனால் தீர்வை நோக்கி ஒரு இன்ச் ஆவது நகர்ந்து இருக்கிறோமா?