கொலதெய்வம் நமீதாவிற்கு வீரவணக்கம்...

Tuesday, April 28, 2009


Namitha in Mini Dress in Vyabar - The top video clips of the week are here


சமீபத்தில் பாடலாசிரியர் தாமரைக்கு வீரவணக்கம் என சில பதிவுகளை பார்த்தேன். தமிழர்களின் உணர்வினை தூண்டியதால் அவருக்கு வீரவணக்கம் செலுத்துவதாக அந்த பதிவுகள் இருந்தன... அவர் தூண்டிய உணர்வினால் அங்கே குழுமியிருந்தவர்களும், இங்கே வலையுலகில் பலரும் சிலிர்த்துப் போனார்கள் என்பதை அறிந்து நெகிழ்ந்தேன் .

அப்படி என்னதான் பேசினாரென பார்த்தால் வழக்கமான பட்டிமன்ற பேச்சாளர்களின் தரத்திலான பேச்சாகவே எனக்கு பட்டது. இந்தியன் என்கிற இனமே இல்லையாம், இவரின் கடவுச்சீட்டில் நேஷனாலிட்டியில் தமிழன் என்று போட்டிருக்கிராறா அல்லது இந்தியன் என போட்டிருக்கிறாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.

நாலுவரி கவிதை...பலி...புலி என எதுகை மோனையாக பேசியதற்காவெல்லாம் உணர்ச்சி வசப்படமுடியாது. இவரை விட அண்ணன் டி.ஆர் அதிரடியாக எதுகை மோனையில் கவிதை சொல்லி கேட்டிருக்கோமாக்கும்.

துப்பாக்கி தூக்கிக் கொண்டு போவாராம்.....அவரை சுற்றியிருக்கும் சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் துயர்களை கண்டு ஒரு துடப்பத்தைக் கூட தூக்கியதாக அறியப்படாதவர் இலங்கைக்கு துப்பாக்கி தூக்கிக் கொண்டு போகப்போகிறாராம்.....ஹேய் யாருப்பா அது அதுக்குள்ள உணர்ச்சி வசப்படறது.....இன்னும் இருக்கு

ஜெயலலிதா அம்மாவாசை, கலைஞர் அம்மாவாசைக்கு அடுத்தநாளென்றால் இத்தனை வயதில் தமிழகத்திற்கு, தமிழினத்துக்கு வெளிச்சம் போட இவர் என்ன முயற்சித்தார் என்பதையாவது அந்த மேடையில் சொல்லியிருக்கலாமே!... யார் தடுத்தது அவரை?

மேடை கிடைத்த உற்சாகத்தில், கூட்டம் கும்மியடிக்கிற போதையில் இவர் பேசியதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு பதிவுபோட்டு வீரவணக்கம் செய்வதெல்லாம் ரொம்பவே ஓவர். இத்தகைய உணர்ச்சி வயப்பட்டு ஆராதனை செய்வது எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து தொடர்கிறது.இம்மாதிரியாய் காலங்காலமாய் மலிவான உணர்ச்சிகளின் பின்னால் ஓடிக்கொண்டிருப்பதுதான் தமிழனின் துரதிர்ஷ்டம்.

இந்த வகையில் இவரை விடவும் தமிழர்களின் உணர்வினை பல மடங்கு தூண்டிய கொலதெய்வம் நமீதாவும் வீரவணக்கம் செலுத்த உகந்தவர் என்கிற கருத்தினை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

வாங்கிய காசுக்கு வஞ்சமில்லாமல் உணர்வினை தூண்டிய ...தூண்டிக்கொண்டிருக்கும் நமீதாவுக்கு வீரவணக்கம்....

டிஸ்கி:- இந்த பதிவு இலங்கை தமிழரின் துயரத்தை நோக்கியதில்லை....அதை வைத்துக் கொண்டு இங்கே வலையுலகில் சீன் போடும் சில சிந்தனையாளர்களை நோக்கியதே....

10 comments:

Anonymous said...

டிச்கி போட்டதன் மூலம் உங்கள் உண்மையான முகத்தைக் காட்டிவிட்டீர்கள். ஈழத்தமிழரின் அவலத்தில் பிணம் தின்னும் நாய்களில் நீங்களும் ஒருத்தராகிவிட்டீர்கள்.

யட்சன்... said...

அனானி நண்பரே...

உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன்.

வீரவணக்கம் போட்டவர்கள் பதிவில் இந்த மாதிரியான கமெண்ட் போட்டிருந்தீர்களேயானால் இந்த மாதிரியான பதிவுக்கு அவசியமே வந்திருக்காது.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

பதி said...

உங்களுடைய கருத்தாழமிக்க பதிவிற்கு நன்றி யட்சன்..

நான் உங்களுடைய கடவுச்சீட்டு முகவர் பதவிக்கு மட்டும் பதிலளிக்க விரும்புகின்றேன்.. ஏனெனில், யாரவது ஏதாவது சொன்னால், அவர்களின் கருத்துக்கு பதிலளிக்க முடியாவிட்டால், அவர்களின் கடவுச்சீட்டுக்கு தாவிவிடும் தட்டை மனப்பான்மை இது..

//இந்தியன் என்கிற இனமே இல்லையாம், இவரின் கடவுச்சீட்டில் நேஷனாலிட்டியில் தமிழன் என்று போட்டிருக்கிராறா அல்லது இந்தியன் என போட்டிருக்கிறாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.//

பின் வரும் பதில் உங்களுக்கு மட்டுமல்ல, இது போன்ற அபத்த கேள்விகளை வீசும் அனைவருக்கும்...

"இந்தி"யா பற்றிய பல விவாதங்களில் இது போன்ற கேள்வியினை கண்டிருக்கின்றேன்... குறிப்பாக..

http://blog.tamilsasi.com/2009/04/identity-crisis-tamilnadu-tamils-india.html

இது குறித்த மோகன் கந்தசாமியின் விளக்கத்தை தர விரும்புகிறேன்..

//பாஸ்போர்ட் என்பது ஒரு நாடு குடிமக்களுக்கு விதிக்கும் ஒரு கட்டுப்பாடு; சலுகை அல்ல. எல்லை தாண்டி பயணம் செய்ய எல்லாநாடுகளும் மக்களுக்கு இவ்வித கட்டுப்பாட்டை விதிக்கின்றன.

ஆங்காங்கே தேசிய கும்மியை அடித்துக்கொண்டிருக்கும் சிலதுகள் ஒருவரின் பாஸ்போர்ட்டை ரத்துசெய்யும் உரிமையை இந்திய அரசு தங்களிடம் கொடுத்திருப்பது போல் அலப்பறை செய்து கொண்டிருக்கின்றன. இந்தியா தேசிய இனங்களை பிரிந்து போக அனுமதித்து விட்டால் எல்லோரும் அவரவருக்குரிய தேசத்தில் தங்கள் கடவு பத்திரத்தை பெற்றுக்கொள்ளுவர்.

பிரிந்துபோக விரும்பிய தேசிய இனங்களை மோசடிகளாலும், பொய் வாக்குறுதிகளாலும், ராணுவத்தாலும், நயவஞ்சகத்தாலும் கட்டிவைத்து அவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து அவர்களை மொத்தமாகவும் சிறுகச்சிறுகவும் சிதைக்கும் இந்தியா ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். இந்திய கூட்டமைப்பின் விசாலமான விதிகளுக்கு உடன்பட்டே இனங்கள் இணைந்திருக்கின்றன. இந்தியர் அனைவரும் சட்டப்படி மட்டுமே இந்தியர்கள். உணர்வால் இணைவது என்பது இசைபட வாழும்போது மட்டுமே சாத்தியம். தேசியம் பேசும் முகவர்களைக்கொண்டு மக்களுக்கு தேசியத்தை ஊட்டமுடியாது. இதை தேசியவாதிகள் புரிந்தே உள்ளனர். ஆனால் இந்த அனானி தேசிய முகவர்கள் மற்றும் அவர்களின் அல்லக்கைகள் தொல்லைதான் தாங்க முடிவதில்லை.//

நிற்க..

உள்ளே உக்காந்துட்டு எவன் குடிய சாதி பேரை சொல்லி கெடுக்கலாம், பெரும்பான்மையான மக்கள் கூட்டத்த சாதியின் பெயரால் படிக்க விடாம பொழைப்புல மண்ண போடலாம்னு கால காலமா உக்காந்துட்டு இருக்குற 'கும்பலை' ஒப்பிடும் போது வெளியே சுத்துவது எவ்வளவோ மேல்..

அந்த பொணந்திண்ணி நாட்டின், அரசியலமைப்பு சட்டத்த உருவாகுனவங்க (B. R. Ambedkar), இல்லாத இந்தியாவ கனவு கண்டு அமைச்ச காந்தி, நேரு எல்லாரும் வெளிய படிச்சு/வேலை பார்த்து உள்ள வந்து அந்த கட்டுணது தான் அந்த இந்தியா...

இதுல என்ன கொடுமைனா, இருக்குறதே 60 வருச வரலாறு தான்.. அதைக் கூட ஒழுங்க படிக்காதவங்க எல்லாம் தேசிய முகவர் ஆகிடுறாங்க...

Anonymous said...

டிச்கி போட்டதன் மூலம் உங்கள் உண்மையான முகத்தைக் காட்டிவிட்டீர்கள். ஈழத்தமிழரின் அவலத்தில் பிணம் தின்னும் நாய்களில் நீங்களும் ஒருத்தராகிவிட்டீர்கள்.

மிளகாய் said...
This comment has been removed by the author.
யட்சன்... said...

அணானி நண்பரே...

உங்களின் கருத்தினை நான் மதிக்கிறேன்.

எனது முந்தைய ஐந்து பதிவுகளை படித்த பின்னர் உங்களுக்கு தோன்றியதை இங்கே மீண்டும் கருத்திட்டால் மகிழ்ச்சியடைவேன்.

சிம்பா said...

ஒரு முடிவோடதான் பதிவுகள் எழுதறீங்கனு நினைக்கிறன்... சொந்த செலவுல சூனியம்... நடக்கட்டும் நடக்கட்டும் இந்த நாரதர் வேலை...

அனானி நண்பருக்கு என் இவ்வளவு கோபம்... இப்படி சூட இருக்க ஆளுகளுக்கு இலவச பாஸ்போர்ட் திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிவித்தால் இவர்களை எல்லாம் இலங்கைக்கு அனுப்பி சென்று வா மகனே சென்றுவா என்று பாட்டு கூட பாடலாம் என்று தோனுது சார்...

ஆமாம் இங்கு தூண்டுதல் என்றால் என்ன??

கல்வெட்டு said...

//இந்தியன் என்கிற இனமே இல்லையாம், இவரின் கடவுச்சீட்டில் நேஷனாலிட்டியில் தமிழன் என்று போட்டிருக்கிராறா அல்லது இந்தியன் என போட்டிருக்கிறாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.//

நேசனாலிட்டி அல்லது குடிமகன் என்பது இனம் அல்ல. எந்த நாட்டைச் சார்ந்தவர் என்ற அளவில் ஒரு நாட்டு அடையாள‌ம் மட்டுமே. வீட்டு முகவரி போல.

அண்ணா சாலையில் இருக்கும் கடைகள் எல்லாம் அண்ணாத்துரையின் தம்பிகள் கடை அல்ல.

****

இனம் எனபது ஒரு குழு அடையாளம். மலையாளி, தெலுங்கர், சீக்கியர், குஜராத்தி வரிசையில் தமிழை அடையாளமாகக்கொண்ட ஒரு இனக்குழு அவ்வளவுதான். யூதர்கள் எனப்து இனக்குழு அவர்கள் அமெரிக்காவிலும் உள்ளார்கள் (அமெரிக்க நேசனாலிட்டி) இஸ்ரேலிலும் உள்ளார்கள் (இஸ்ரேல் நேசனாலிட்டி)

****

இந்தியா நேசனாலிட்டி என்பது அரசியல் அமைப்பு வழி வரும் அடையாளம். நாளையே அரசியல் இயக்கங்கள் நாட்டின் பேரை மாத்த ஒரு சட்டம் போட்டால் பாஸ்போர்ட்டில் இருக்கும் நேசனாலிட்டி புதிய பெயருக்கும் மாறும். இன அடையாளம் அப்படியல்ல.

***

பேசாமல் சாய்பாபா பதிவுகள் எழுதலாம். அது உங்கள் நம்பிக்கை என்று விலகிச் செல்லலாம். இப்படி ஏன் கும்ஸாக எதையாவது சொல்கிறீர்கள்?

யட்சன்... said...

கல்வெட்டு...

இம்மாதிரியான பின்னூட்டஙக்ளையே எதிர்பார்க்கிறேன்...

நீங்கள் சொன்ன மாதிரியே நான் குமஸாக எழுதியதாக வைத்துக் கொள்வோம்...பதிவின் நோக்கம் அதுவல்லவே...

மேலும் எனது சாய்பாபா நம்பிக்கையை வைத்துக் கொண்டு பதிவுலகில் சாமியடியதாக எனக்கு நினைவில்லை. ஒரேயொரு தொடர் மட்டுமே எழுதியதாக நியாபகம். அதிலும் கூட அவர் அவதாரபுருஷனென்றோ, இத்தனை நாள் விரதமிருந்து உருண்டு புரண்டால் கேட்டதெல்லாம் தருகிறார் என்கிற மாதிரியான பசப்பான பரப்புரைகளை சொல்லியதாக நினைவில்லை...

ஒரு மேனெஜ்மென்ட் குருவாகவே அவரை சொல்லி முடித்ததாய் நியாபகம்.

கல்வெட்டு said...

யட்சன்,
//நீங்கள் சொன்ன மாதிரியே நான் குமஸாக எழுதியதாக வைத்துக் கொள்வோம்...பதிவின் நோக்கம் அதுவல்லவே...//

பதிவின் நோக்கம் எதுவாக இருந்தாலும் பாஸ்போர்டில் இருக்கும் ஒரு நாட்டு அடையாளத்தை இனக்குழு அடையாளத்தோடு சேர்த்து குழம்பிக்கொண்டு மற்றவர்களையும் குழப்பக்கூடாது.

பாஸ்போர்ட்/தேசியம்/இறையாண்மை எந்த புரிதலும் இல்லாமலேயே பயன்படுத்தப்படுகிறது. குழு/இன/ சாதி/மத/உறவு சார்ந்த/அரசியல்/கொள்கை/சித்தாந்தங்கள் சார்ந்த /கலை/நாடு...என்று எண்ணற்ற பல அடையாளங்கள் உள்ளது. பல நேரங்களில் ஒன்று மற்றொன்றின் உபஅடையாளமாகவும்/கிளையாகவும் உள்ளது.

தமிழ் என்ற மொழி சார்ந்த இனத்தை அடையாளப்படுத்தும் போது , பாஸ்போர்டில் உள்ள அரசுசார் அடையாளத்தை சேர்த்து குழப்புவதை என்ன சொல்ல? நாளையே United States of Bharath என்று பேரை மாற்றினால் நிகழ்கால இந்தியன் USB சிடிசனாக மாறவாய்ப்பு உள்ளது.
இன அடையாளம் அப்படியல்லவே?

****

சாய்பாபா...

சொல்ல ஒன்றும் இல்லை. அது உங்களின் தனிப்பட்ட நம்பிக்கைகள்.

***