பரிசல்காரனுக்கு ஒரு மனம் திறந்த மடல்....

Wednesday, August 13, 2008

அன்பின் மொக்கைச்சாமி !

இந்த பெயர் எனக்கு பிடித்திருக்கிறது....உங்களுக்கு ஆட்சேபனையிருந்தால் மன்னித்து விடுங்கள்.....

நேற்றைய எனது பதிவு எந்த வகையிலும் உங்களையோ உங்களின் எழுத்துப் பணியினையோ களங்கப்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை.சக பதிவன் என்கிற முறையில் உங்களின் எழுத்து மற்றும் எண்ண சுதந்திரம் எந்தவொரு மூன்றாவது சகபதிவரால் அறிவுரை என்கிற பெயரில் கே(ள்வி)லிக்குள்ளாக்கப்பட கூடாது என்கிற ஆத்திரத்தின் எதிரொலியே....

இங்கே பதிவெழுதுகிற யாரும் பால்மணம் மாறா பச்சைக்குழந்தைகளில்லை, எல்லோரும் தங்கள் எல்லைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்தவர்களே....சுய சிந்தனையுடன் எவ்வித புற அழுத்தமுமில்லாத படைப்பாளிகள் என்று கூட பெருமையாகக் சொல்லிக்கொள்ளலாம்.

என்னுடைய அனுபவத்தில் நிறைய பதிவர்கள் பதிவெழுதத் துவங்கிய பொழுதில் இருந்த வேகமும் உற்சாகமும் போகிற போக்கில் மங்கிப் போய் ஒரு கட்டத்தில் காணாமலே போய்விட்டார்கள்.இதற்கு நிறைய உதாரணஙகளைச் சொல்லமுடியும். அப்படியான ஒருவராக நீங்கள் ஆகிவிடும் ஆபத்தினை நான் இன்னமும் எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் என்னுடைய நெருங்கிய நண்பராக இருக்கும் பட்சத்தில், நீங்களும் என்னை அவ்வாறாகவே கருதும் சூழலில் உங்கள் நிறைகளை நான் சபையில் பெருமையாக பேசவேண்டும், அது நான் உங்களின் நட்புக்குச் செய்கிற மரியாதையாக இருக்கும். பரஸ்பரம் இருவருமே நெகிழ்ந்து போகிற உன்னதமான தருணமாயிருக்கும்.

அதே நேரத்தில் உங்களின் குறைகளை தனிமையில் உங்களுக்கு மட்டுமே உறைக்கிற மாதிரி இதை விட காட்டமாய், ஏன் முகத்திலறைந்தார் போல சொல்லுவேன்...சொல்லவேண்டும்...அதுதான் நட்பு. மாறாக உங்கள் குறையகளாக நான் கருதுகிறவைகளை சபையில் பகீங்கரமாய் எல்லார் முன்னாலும் போட்டுடைத்து அதனால் இனிமேல் நீ இப்படி நடந்து கொள் என புத்தி சொல்வது எந்தவகை நட்பின் இலக்கணம் என்பதை உங்களின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்....ஆனால் பெருந்தன்மையாய் அந்த அறிவுரையினை ஏற்றுக்கொண்ட பாங்கில் என் மதிப்பில் நிறையவே உயர்ந்துவிட்டீர்கள் மொக்கச்சாமி!

நாமனைவரும் தவறு செய்வது தவிர்க்கமுடியாதது....நம்மில் யாரும் புனிதரில்லை, இடறிவிழும் வாய்ப்புகள் எல்லோருக்கும் உண்டு. ஆனால் நட்பின் பெயரால் தனிமனிதனின் சுதந்திரமும், அவனது நிதர்சனங்களும், எல்லைகளும் பகீங்கரமாக பொதுவில் கிழித்து தொங்கவிடப்படுவதை நியாயப்படுத்த முடியாத ஆதங்கமே முந்தைய பதிவு. திரு.லதானந் அவர்கள் என்னுடைய நண்பராக இருந்திருக்கும் பட்சத்தில் அத்தகைய ஒரு பதிவிற்கு தேவையே இருந்திருக்காது....பரஸ்பரம் அறிமுகமில்லை.அவர் மீது எனக்கு வருத்தம்தானேயொழிய வேறொன்றுமில்லை.

அன்புடன்

-யட்சன்

இந்த கடிதத்திற்கு சம்பந்தமேயில்லாத குறிப்பு:

என்னில் அக்கறையுடன் ஆலோசனைகள் வழங்கிய கவி.முத்துலட்சுமி, இராம், சஞ்சய், லக்கிலுக், அய்யனார் போன்ற நண்பர்களுக்கு நன்றி. புபட்டியன் நிச்சயமாக நான் முற்பிறவியில் வவ்வால் இல்லை.

.

23 comments:

இராம்/Raam said...

அண்ணே... அவரும் நம்மாளுதான்... :)

Sanjai Gandhi said...

அட நம்மாளுக்கும் கொஞ்சூண்டு பருப்பு ச்ச.. பொறுப்பு இருக்குபா :))

//என்னில் அக்கறையுடன் ஆலோசனைகள் வழங்கிய கவி.முத்துலட்சுமி, இராம், சஞ்சய், லக்கிலுக், அய்யனார் போன்ற நண்பர்களுக்கு நன்றி//

என்னாதிது? சின்னப் புள்ளத்தனமா.. :))

PPattian said...

//புபட்டியன் நிச்சயமாக நான் முற்பிறவியில் வவ்வால் இல்லை.
//

என்ன வவ்வால் இல்லையா.. அப்படின்னா, நீங்க ரத்னேஷா? இல்ல அரைபிளேடா?

//என்னுடைய அனுபவத்தில் நிறைய பதிவர்கள் பதிவெழுதத் துவங்கிய பொழுதில் இருந்த வேகமும் உற்சாகமும் போகிற போக்கில் மங்கிப் போய் ஒரு கட்டத்தில் காணாமலே போய்விட்டார்கள்.இதற்கு நிறைய உதாரணஙகளைச் சொல்லமுடியும்.//

வவ்வால், ரத்னேஷ், அரைபிளேடு.. நான் விரும்பி படித்த 3 பதிவர்கள்.. மளமளன்னு எழுதினாங்க.. திடீர்னு காணாமலே போய்ட்டாங்க.. :(

நேற்று நான் போட்ட பின்னூட்டம் உங்களை வருத்தியிருந்தா.. அதற்காக மன்னிக்கவும். நீங்கள் குற்றம் சொல்பவரின் உத்தியையே நீங்களும் பயன்படுத்துவது போல தோன்றியதால் அந்த பின்னூட்டம்.. இப்போ எல்லாம் கிளியர் (போல இருக்கு)

வெண்பூ said...

//அதே நேரத்தில் உங்களின் குறைகளை தனிமையில் உங்களுக்கு மட்டுமே உறைக்கிற மாதிரி இதை விட காட்டமாய், ஏன் முகத்திலறைந்தார் போல சொல்லுவேன்...சொல்லவேண்டும்...அதுதான் நட்பு//

அற்புதம் யட்சன்.

அதே நேரம் ஒரு உண்மை.. இந்த பிரச்சினை வருவதற்கு சரியாக ஒரு வாரம் முன்னால் என் மனைவி என்னிடம் சண்டையிட்டார் (அழுகையுடன்) "நீங்க இந்த ப்ளாக் எழுத ஆரம்பிச்சதுல இருந்து எங்களை கவனிக்கவே மாட்டீன்றீங்க.. ராத்திரி 12 மணி வரைக்கும் அதையே கட்டிட்டு அழுவுறீங்க" என்று.

உடனடியாக நான் வீட்டிலிருந்து வலைப்பதிவு படிக்கவும், எழுதவும், பின்னூட்டமிடவும் செலவிடும் நேரத்தை குறைத்துக்கொண்டேன். இப்போது என் மனைவி சந்தோசமாக இருக்கிறார்.

எனக்கு உடனே பரிசல் நினைவுதான் வந்தது. நானெல்லாம் ஒரு நாளைக்கு 2 லிருந்து 3 மணி நேரம் மட்டுமே செலவு செய்கிறேன். என்னை விட அவர் ஆக்டிவ் ப்ளாக்கர்.

அதனால் லதானந்த்தின் கடிதம் எனக்காகவே எழுத‌ப்பட்டது போல தோன்றியது. அதைத்தான் அவரது பின்னூட்டத்திலும் சொல்லியிருப்பேன்.

ஆனால் நேற்று பரிசலிடம் பேசியபோது அவர் எப்படி அவரது நேரத்தை ப்ளான் செய்கிறார் என்று விளக்கினார். ஆச்சரியமாக இருந்தது, பொறாமையாகவும்.. என்னால் அதுபோல நேர மேலாண்மை செய்ய முடியவில்லையே என்று... :(

அதேநேரம் லதானந்த் எழுதியது சரியா தவறா என்று விவாதிக்க விரும்பவில்லை, அவர் என்னை விட வயதில், அனுபவத்தில் மூத்தவர் என்பதால். அதிலிருக்கும் கருத்தை மட்டுமே உபயோகித்துக் கொள்கிறேன்... அவருக்கோ, பரிசலுக்கோ ராயல்டி எதுவும் தராமல் :)

இலவசக்கொத்தனார் said...

'பகீங்கிர' - அப்படின்னா என்னங்க?

பரிசல்காரன் said...

மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது...

நன்றி சொல்லிக்கொள்கிறேன் சீனியர்!

//அன்பின் மொக்கைச்சாமி !

இந்த பெயர் எனக்கு பிடித்திருக்கிறது....உங்களுக்கு ஆட்சேபனையிருந்தால் மன்னித்து விடுங்கள்...//

மன்னிப்பெல்லாம் எதற்கு சாரே? நேற்று என் நண்பர்கள் ராஸ்கல் என்றும், கொலைவிழும்டா என்றும் என்னைத் திட்டியபோது எவ்வளவு சந்தோஷ்ப பட்டேன் தெரியுமா நான்? பதிவரில் ஏற்கனவே மொக்கைச்சாமி என்றொருத்தர் இருக்கிறார். அவருக்குத்தான் ஆட்சேபணையிருக்கும்!

பரிசல்காரன் said...

//நேற்றைய எனது பதிவு எந்த வகையிலும் உங்களையோ உங்களின் எழுத்துப் பணியினையோ களங்கப்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை//

எழுத்துப் பணியா? நான் செய்யறதா? சரியாப்போச்சு! எதுக்கு இவ்ளோ சீரியஸாகுறீங்க சீனியர்?

நான் ஒரு நண்பனா எல்லார்கிட்டயும் பேசீட்டிருக்கற மாதிரிதான், பதிவையும் எழுதறேன்! அது பலரைக் கவர்ந்திருக்க நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்!

பரிசல்காரன் said...

//இங்கே பதிவெழுதுகிற யாரும் பால்மணம் மாறா பச்சைக்குழந்தைகளில்லை, எல்லோரும் தங்கள் எல்லைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்தவர்களே....சுய சிந்தனையுடன் எவ்வித புற அழுத்தமுமில்லாத படைப்பாளிகள் என்று கூட பெருமையாகக் சொல்லிக்கொள்ளலாம்//

கண்ணை மூடிகிட்டு கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்!

பரிசல்காரன் said...

//அப்படியான ஒருவராக நீங்கள் ஆகிவிடும் ஆபத்தினை நான் இன்னமும் எதிர்பார்க்கிறேன்.//

உங்கள் அன்பும், ஆசியும் அவ்வாறாக விடாதென நினைக்கிறேன்!

பரிசல்காரன் said...

//பெருந்தன்மையாய் அந்த அறிவுரையினை ஏற்றுக்கொண்ட பாங்கில் என் மதிப்பில் நிறையவே உயர்ந்துவிட்டீர்கள் மொக்கச்சாமி!//

நானெங்கே ஏற்றுக்கொண்டேன்? இன்னைக்கே மரணமொக்கையொன்றைப் போடவில்லையா?

ஆனால், தினமும் எழுதணுமே என்று இப்போதெல்லாம் மன அழுத்தமில்லை! கேட்டா லதானந்த் அங்கிள் திட்டுவாரு' என்று சொல்லிக்கொள்ளலாம் பாருங்கள்!

பரிசல்காரன் said...

//அவர் மீது எனக்கு வருத்தம்தானேயொழிய வேறொன்றுமில்லை.//

அவர் என்னை சந்தித்திருக்கிறார். பலமுறை பேசியிருக்கிறார். என் திறமை(???)க்கு சம்பந்தமே இல்லாத வேலையில் இருக்கிறேன் என்று திட்டுவார்! ஆகவே அதிக அக்கறை கொண்டு அப்படி எழுதிவிட்டார்.

யார்மீதும் வெறுப்பு காட்டவோ, கோவப்படவோ லாயக்கற்றவன் நான். அப்படி செய்துவிட்டேனென்றால் அது என்னையேதான் அதிகமாகப் பாதித்துத் தொலைக்கிறது!

இன்று லதானந்த் என்னை நேரடியாக (கோவையிலிருந்து திருப்பூருக்கு வந்து) ‘தப்பா நெனைச்சிட்டன்னா சாரிப்பா' என்றார். ஆகவே, நானும் என் மனதில் பட்ட சிலவற்றை அவரிடம் சொன்னேன்!

அவர் மனமும் லேசானது. போகும்போது “ஏன் ஷேவ் பண்ணாம இருக்கீங்க?” என்றார்.

“குடும்பத்தை கவனிக்கணும்ல. அதான் ஷேவ் பண்ண நேரமில்லை” என்றேன்!

கண்ணில் நீர்வர- சிரித்துவிட்டுப் போனார்!

வேறெந்தவிதமாய் நான் ரியாக்ட் பண்ணினாலும் இந்தப் பிரச்சினை இவ்வளவு எளிதில் இருவருக்குமே மனநிறைவை தந்திருக்காது!

உங்களது அன்பிற்கு என்ன கைமாறு செய்யப் போகிறேனென்றுதான் தெரியவில்லை சீனியர்!

-உங்கள் நண்பன்
மொக்கைச்சாமி!

ஆயில்யன் said...

////இங்கே பதிவெழுதுகிற யாரும் பால்மணம் மாறா பச்சைக்குழந்தைகளில்லை, எல்லோரும் தங்கள் எல்லைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்தவர்களே....சுய சிந்தனையுடன் எவ்வித புற அழுத்தமுமில்லாத படைப்பாளிகள் என்று கூட பெருமையாகக் சொல்லிக்கொள்ளலாம்//

கண்ணை மூடிகிட்டு கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்!

//


இதுக்கு நான் ரிப்பிட்ட்டேய்ய்ய்ய்ய்ய் போட்டுக்கிறேன் :))

இராம்/Raam said...

//என்ன வவ்வால் இல்லையா.. அப்படின்னா, நீங்க ரத்னேஷா? இல்ல அரைபிளேடா?/

இதுக்கு முன்னாடி இவரு யாருன்னே சத்யமா சொக்கன் சாட்சியா எனக்கு தெரியாது.... :))

PPattian said...

//இதுக்கு முன்னாடி இவரு யாருன்னே சத்யமா சொக்கன் சாட்சியா எனக்கு தெரியாது.... :))//

இரண்டாம் ???

அதுக்கு முந்தைய அவதாரம் எதுவோ?

யட்சன்... said...

பரிசல்...

இந்த பதிவின் நோக்கம் நிறைவேறியதில் எனக்கு திருப்தியும் மகிச்சியும்....வாழ்த்துகள் நண்பரே!

யட்சன்... said...

சஞ்சய், வென்பூ,ஆயில்யன், கொத்தனார்...

:-))

யட்சன்... said...

டாக்டரம்மா...

உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்...திரும்ப எழுதுங்க தாயீ...

இராம்/Raam said...

அண்ணே,

இங்க நானு ஏதாவது ஒளறி தொலைச்சிடேனா??? :(((

நம்மூரு பாசையிலே திட்டிப்பிடாதண்ணே... :(

யட்சன்... said...

இராம்...

ஆயிரமிருந்தாலும் நாமல்லாம் ஒரு தாய் புள்ளைக...இதுக்கெல்லாமா கோவிச்சுக்குவேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...
This comment has been removed by the author.
முத்துலெட்சுமி/muthuletchumi said...

யட்சன் இதெல்லாம் என்னது... எதுக்கு பேரு மாத்தனும் அப்பறம் எதுக்கு ஜாதகம் சொல்லனும்.. நல்ல விளையாட்டு இது.. பெயரை அப்படியே வைத்திருந்தால் எத்தனை சாதகம் பாதகம் இருக்கோ அதே அளவு பெயரை மாற்றினாலும் வருதே.. :))
பாவம் டெல்பின் .. திடீர்ன்னு உள்ள நுழைஞ்சு குழம்பி போயிருப்பாங்க ..

பரிசல்காரன் இன்னொரு அபி அப்பா போல .. :) தாடி கமெண்ட் சூப்பர்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த பெயர் மாற்றத்திலே நானெல்லாம் அறிவுரை சொல்ல தகுதியே இல்ல.. நான் ஏறக்குறைய இதேதான் ஆனா வேற மாதிரி செய்துட்டிருக்கேன் :)

Anonymous said...

ஒன்னுமே புரியலே இந்த வலையுலகத்திலே...