இவள் எனக்கு
தாயாய்... தமிழாய்...
தகையாய்...தருவாய்...உருவாய்
காட்டப்பட்டவள்...
பெரிதான எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாததால்
இதுவரையில் எனக்கு ஏமாற்றங்களில்லை
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவளென
இன்றைக்கும் நம்புகிறேன்.
இஸ்லாமிய நண்பனின் திருமணத்தின் போது
அவன் தாய் இரண்டு பத்திரிக்கைகளை கொடுத்து
இதை மீனாட்சிக்கு வச்சிட்டு ஒன்னை எடுத்துட்டு வர்றியா?
என கேட்டபோதுதான் இவளின் எல்லைகள் எனக்கு புரிந்தது.
மதுரைக்கு இவள்தான் எல்லாமே!
இவளின்றி எதுவும் அசையாது என சொல்லிக் கொண்டே
எல்லாவற்றையும் இஷ்டத்திற்கு அசைத்துக் கொண்டிருக்கும்
புண்ணியவான்கள் நாங்கள்....
இன்றைக்கு அன்னைக்கு குடமுழுக்கு
நிஜமாகவே இதயம் இனிக்கிறது
கண்கள் பனிக்கிறது...
இத்தனை வருடத்தில் உன்னிடத்தில் அன்பைத் தவிர
வேறெதையும் கேட்காதவன்
இந்த நாளில் கேட்கிறேன்....
ஈழத்தில் அமைதி தா....
தருவாயென்கிற நம்பிக்கையுடன்
பணிகிறேன் உன் பாதம்....
தாயே போற்றி
தமிழே போற்றி
தகையே போற்றி
-யட்சன்
3 comments:
"" இஸ்லாமிய நண்பனின் திருமணத்தின் போது
அவன் தாய் இரண்டு பத்திரிக்கைகளை கொடுத்து
இதை மீனாட்சிக்கு வச்சிட்டு ஒன்னை எடுத்துட்டு வர்றியா?
என கேட்டபோதுதான் இவளின் எல்லைகள் எனக்கு புரிந்தது. ""
சாதி மத பேதமில்லாமல் அனைவரையும் காக்கும்
மதுரை தாயே! நண்பர் யட்சனோடு சேர்ந்து
நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம்...ஈழத்தமிழர்களை
காத்திடு தாயே..
By,
Raji
//இன்றைக்கு அன்னைக்கு குடமுழுக்கு
நிஜமாகவே இதயம் இனிக்கிறது
கண்கள் பனிக்கிறது..///
அமைதியும், உண்மையும் நிலைக்க அருள் புரிவாய் தாயே...
கோவில் என்பதனை தாண்டி நாம் ஓடி விளையாடி பழகிய வீட்டுக்கு செல்வது போல் ஒரு உணர்வு ஒவ்வொரு முறை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் நுழையும் பொழுது ஏற்படும்.
இன்றைய விழாவினை நேரில் காணமுடியாமல் போனது மனதுக்கு சிறிது வருத்தமே...
Post a Comment