ஒரு கார் விபத்தும், சில கதைகளும்...

Tuesday, April 21, 2009

ஆஸ்தான சோதிடர் மாதிரி எனக்கு ஒரு ஆன்லைன் சோதிடர் இங்க இருக்கார். அவர் இங்கே பதிவெழுதும் ஒரு பிரபலர். அவரை நான் எழுத்தாளர் என்றுதான் அழைப்பேன்.இனிய நண்பர்....இம்புட்டு சொல்லீட்டு அவர் பேரை சொல்லாம இருக்க கூடாதுல்ல...சரி நம்ம வழக்கப்படி பதிவின் கடைசியில அவரை தெரிஞ்சிக்கலாம்.

இனி மேட்டருக்கு வருவோம்....அவருக்கு ஜோதிடத்தில் பரிச்சயம் இருந்ததால், என் ஜாதகத்தை குடுத்து கொஞ்சம் பார்த்து சொல்லுங்கன்னு சொன்னேன்...இந்த இடத்தில் மிக முக்கியமான வரலாற்று குறிப்பு ஒன்றை நினைவில் வையுங்கள். நான் பெரியாரின் ஒரே ஒரு போலி தொண்டன். பழுத்த நாத்திகவாதி,பொதுவுடமை(இதுக்கு என்னா அர்த்தம்?)கொள்கை பற்றாளன்.

அவரும் என் ஜாதகத்தை பார்த்துவிட்டு...ஏழரைச்சனிக்கே ஏழரைச்சனி பிடிச்சா எப்படியிருக்குமோ அப்படி மோசமா இருக்கு உங்கள் நேரம் அப்படீன்னு சொன்னார்...அடடா 'என்ன இது மதுரைக்கு வந்த சோதனை'ன்னு நினைச்சிட்டு இருந்தப்போ...சொல்லி வச்ச மாதிரி நம்ம பிஸினஸ் ஒன்னு புட்டுகிச்சி. அதிகமில்லை ஜெண்ட்டிமென் அண்ட் உமன்.....ச்ச்ச்சும்மா ஒரு 30 லட்சம்கிட்டே காணாம போச்சுன்னுட்டானுங்க.
ஆஹா ஜோசியம் ஒர்க் அவுட் ஆகுது போலன்னு அவர்கிட்டே திரும்ப கேட்டேன். மே மாசம் வரை ரொம்ப மோசமா இருக்கு ஜாக்கிரதை. விபத்து கூட ஆகும்னு ஒரு எக்ஸ்ட்ரா டோஸ் வேற குடுத்தார்.

ஒரு டாக்டர்கிட்ட பார்த்துட்டு இன்னொடு டாக்டர் கிட்டே செக்கண்ட் ஒப்பீனியன் வாங்குவோமே அது மாதிரி இன்னொரு இனைய நண்பர்...அவர் இவரைவிட எக்ஸ்பர்ட், அதாவது அவங்க அப்பா பெரிய்ய்ய்ய ஜோதிடர், இவர் பங்குசந்தையில கலக்கறவர். அவர்கிட்டே கேட்டேன். அவரும் எல்லாம் பார்த்துட்டு மொதல்ல சொன்னத விட மோசமா சொன்னார்.இவரோ ஒரு வருசம், ஒரு மாசம், பதினோரு நாளைக்கு நெம்பா கஸ்டமுனுட்டார்.சரி எவ்வளவோ பார்த்துட்டோம் இதையும் பார்த்துட மாட்டோமான்னு மனச தேத்திட்டு வேலைய பார்க்க ஆரம்பிச்சேன்.

சின்ன வயசுல எல்லா பயபுள்ளயும் நான் டாக்டராவேன்...எஞ்ஜினியாராவேன்னு சொல்லிட்டு திரியற மாதிரி எனக்கும் எப்படியாச்சும் ப்ரைம் மினிஸ்டராய்டனும்னு கொள்ள ஆசை...ஆனா சுயேச்சையா நின்னுதான் அந்த பதவிக்கு போகனும்னு ஒரு பக்கா கண்டிசனோட வாழ்ந்துட்டு இருக்கேன்னு வச்சிக்கங்க.இதெல்லாம் நடக்குமான்னு கேக்க கூடாது . கலைஞர் தமிழன தலைவர்னா நம்பறீங்க, ஜெயலலிதா புரட்சி தலைவின்னா நம்பறீங்க....ஏன் நான் ஆவமுடியாதுன்னு நினைக்கறீங்க...நம்புங்கப்பா...ப்ளீஸ்....எனக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா...ஸோ...நம்புங்க..ஹி...ஹி...

இனி மேட்டருக்கு வருவம்...எலெக்‌ஷன்னு சொல்லீட்டாய்ங்க இப்ப விட்டா இன்னும் அஞ்சு வருசம் வெயிட் பண்ணனுமே...ன்னு மண்டைக்குள்ள மணியடிக்க எந்த தொகுதில நிக்கலாம்னு ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சேன். மதுரையில எப்படியும் அஞ்ஞாநெஞ்சன் நிப்பாரு, நம்மால அவர் வெற்றி வாய்ப்பு தவறிப் போய்டக்கூடாதுங்கற நல்லெண்ணத்துல ஸ்ரீபெரும்பதூர் தொகுதியில நிப்பம்னு முடிவு பண்ணீட்டேன். சரி எல்லா அரசியல் வாதியும் போற மாதிரி நம்ம ஆன்லைன் சோதிடர்கிட்டே ஒரு வார்த்தை கேப்போம்னு கேட்டேன்...அவர் நான் சொன்ன எல்லாத்தையும் கேட்டார்.....

ஒரே ஒரு வார்த்தைதான் சொனனார்.....அடுத்த எலெக்‌ஷனுக்கு பார்த்துகிடுவம்னு முடிவுபண்ணி...ஸ்ரீபெரும்பதூர் தொகுதிய இந்த வாட்டி யாரோ ஒரு எமகாதகபயலுக்கு விட்டுகுடுத்துட்டேன்.என்ன சொன்னார்னு சொல்லவே இல்லையே....அவர் சொன்னது...உங்களுக்கு எவ்ளோவ் கெட்ட நேரம்ங்கறதுக்கு இதை விட வேற என்ன சாட்சி வேணும்...ம்ம்ம்ம்ம்....என்னத்தச் சொல்ல! , இந்தியா ஒரு இளம் எம்.பி..யை இந்த முறை நழுவவிட்டது.

இந்த காலகட்டத்துல நம்ம மற்ற தொழில்களும்...ஈ, காக்காய், குருவி எல்லாம் ஒட்டத் துவங்கிவிட்டது, எல்லா பயலும் ஃபேஷனா சொல்லிக்கற மாதிரி ரிஷசன் நம்மளையும் போட்டு தாக்கீருச்சி. ஆளாளுக்கு ஆள்குறைப்பு, சம்பள குறைப்புன்னு படம் காட்டிகிட்டு இருக்கறதால நாமளும் ஜோதில கலந்துக்குவம்னு ரொம்ப சேட்டை பண்ணீட்டு இருந்த நாலு வாட்ச்மேனையும், ரெண்டு ட்ரைவரையும் இதான் சாக்குன்னு அனுப்பீட்டு நாங்களும் ஆட்குறைப்பு பண்ணீருக்கோம்லன்னு சொல்லீட்டிருக்கேன்.

ரெண்டு கதை சொல்லியாச்சுல்ல....இன்னும் ஒரு கதையோட முடிச்சிர்றேன்...சில கதைகள்னு தலைப்பு வச்சா இப்படித்தான், எழுதற எனக்கும் கஷ்டம், படிக்கற உங்களுக்கும் கஷ்டம்...ஆனாலும் எனக்கு இப்படி எழுதற்துல ஒரு சுயநலம் இருக்கு...ஹி..ஹி...இந்த பதிவின் நீளத்தை பார்த்துட்டு என்னையும் ஒரு உண்மைதமிழன்னு ஒத்துக்குவீங்கள்ல...ஹி...ஹி...

ட்ராக் மாறுது...மேட்டருக்கு வருவோம்...இந்த ஜோதிட மேட்டர்ல இருந்து கார் ஓட்ட தடைன்னு சொல்லி ஒரு பெரிய இம்சையான வயசான தாத்தா ஒருத்தரை நமக்கு ட்ரைவரா போட்டுட்டாங்க. அவர மாதிரி ஒரு அதிபத்திரமான ட்ரைவரை இனி இந்த உலகம் தேடித்தான் கண்டு பிடிக்கனும்.ரோட்ட க்ராஸ் பண்ற ஈ, எறும்புக்கெல்லாம் வண்டிய நிறுத்தி ஓட்றவர்னா பார்த்துக்கங்க...என்னத்த சொல்ல நம்ம நேரம் அப்படி......

போன ஞாயித்துக்கிழமை நம்ம ஜூனியர்ஸ் எல்லாம் வெளில போகனும்னு சொன்னானுங்க, சரி வாங்கடான்னு நம்ம பாஸ் தலைமையில கெளம்பி போனோம். நாந்தான் ட்ரைவர் என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள்.அன்னா நகர்ல சுத்தீட்டு, ஷாப்பிங் எல்லாம் முடிச்சிட்டு திரும்பும் போது மணி பத்தரை ஆய்டுச்சி....நகரை விட்டு வெளியே வந்துட்டு இருந்தேன்...எனக்கு முன்னால ஒரு டவுன் பஸ் ஒரு பேருந்து நிறுத்தத்துல ஆளுங்களை இறக்கி விட்டுட்டு இருந்துச்சி...ஓவர் டேக் பண்ண இடம் இல்லாததால அந்த வண்டிக்கு பின்னால நின்னுட்டு இருந்தேன்.

முன்னால இருந்த பஸ் நகர ஆரம்பிக்கவும், நான் கெளம்பலாம்னு கியர் போட.....டமாஆஆஆஆஆல்...னு ஒரு சத்தம்...பின்னால ப்ரேக் பிடிககாம வந்த லாரி மோதினதுல வண்டி ஒரு நாலஞ்சு அடி உயரத்துக்கு பறந்து அப்படியே ஒரு லாங்க்ஜம்ப் ஒரு பத்தடி தள்ளி போய் விழுந்து...கியர் போடாததால ஒரு இருபது அடி ஓடி நின்னுச்சி...பின் சீட்டுல இருந்து ஜூனியர் பறந்து என்னை கடந்து போனதை பார்த்தேன்....தலை முடியை கொத்தாய் பிடித்து சுவற்றில் நங்கென்று அறைந்தார் போல ஸ்டீரிங் வீலில் போய் மோதினேன். நெற்றியிலும், அடிவயிற்றிலும் அடி....பொறி கலங்கி போவதன் அர்த்தம் புரிந்த கணமது....

அந்த நிலையில் மற்றவர்களின் கதி என்னவாயிற்று என்பதே பிரதானமாய் ஓடியது...யாருக்கும் எதுவும் ஆகியிருக்க கூடாது என்கிற பரிதவிப்புடன் மற்றவர்களை தேடினேன்....மகள் பின்னால் இரண்டு சீட்டுக்கிடையில் கிடந்ததை பார்க்க முடிந்தது.பாஸ் முன்னாலே பறந்து வந்தவனை கேட்ச் பிடித்திருக்க வேண்டும்....இறுக்கி அனைத்தமாதிரி என்னை பார்த்தவாறு முன்னால் சரிந்திருந்தார்.ஒவ்வொருவராய் எழுந்திருக்க...யாருக்கும் பெரிதான காயமோ, ரத்தமோ இல்லையென்பதன் நிம்மதிக்கு ஈடாக அப்போதைக்கு இந்த உலகத்தில் எதுவுமில்லை எனக்கு.

அப்புறம்....கொலைவெறியுடன் லாரிக்காரனோடு சண்டைபிடித்தது....ஆட்களை வரவழைத்து லாரியை எங்கள் இடத்தில் சிறைபிடித்து வைத்துக் கொண்டு பஞ்சாயித்து பைசா வாங்கியதெல்லாம் தனி கதை.... அதையும் இப்பவே சொல்லீடவா? ஹலோ எங்க ஓடறீங்க...பதிவை முடிச்சிட்டேன்...கடைசி வரிய படிச்சிட்டு போங்க....ஹி..ஹி...

இந்த பதிவருக்கும்...மேலே சொன்ன ஆஸ்தான ஆன்லைன் சோதிடருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நம்பிடுமாறு வேண்டுகிறேன்.

7 comments:

Anonymous said...

ippa yenna sollavaringa sir
Namburingala illaya?

harveena said...

erundalum romba poruma sir ungaluku,,

சரி எவ்வளவோ பார்த்துட்டோம் இதையும் பார்த்துட மாட்டோமான்னு மனச தேத்திட்டு வேலைய பார்க்க ஆரம்பிச்சேன்.

thats what the confidence is all about ;-))

நிகழ்காலத்தில்... said...
This comment has been removed by the author.
நிகழ்காலத்தில்... said...

//Anonymous said...

ippa yenna sollavaringa sir
Namburingala illaya?//

இல்லை. நடக்கும் அப்படிங்கிறத மனதில் போட்டதாலேயே நடந்தது.

வாழ்த்துக்கள்..,

மங்கை said...

//யாருக்கும் பெரிதான காயமோ, ரத்தமோ இல்லையென்பதன் நிம்மதிக்கு ஈடாக அப்போதைக்கு இந்த உலகத்தில் எதுவுமில்லை எனக்கு//

உண்மை..உண்மை..

நினைத்து பார்க்கவே பிடிக்காத ஒரு நிகழ்வு...வேற ஒன்னும் தோனலை..

ம்ம்ம்...வலையுல நண்பர்களின் பிரார்த்தனைகள்...இத்தோடு எல்லாம் போச்சுன்னு நினச்சுக்குவோம்...
ம்ம்ம்

தமிழ் அமுதன் said...

ம்ம்ம்...... என்ன சொல்லுறது என்னதான் கிரக நிலைகளும்,மற்ற சூழ்நிலைகளும்
சாதக நிலையில் இல்லாமல் இருந்தாலும்..நம் நண்பர்கள் பலரின் இதயத்தில் மிக
உயர்ந்த இடத்தில் இருக்கும் உங்களை எந்த வித ஆபத்தும் எளிதில் நெருங்கிவிடாது
என்றுதான் சொல்லுவேன்!!

///ஆஸ்தான சோதிடர் மாதிரி எனக்கு ஒரு ஆன்லைன் சோதிடர் இங்க இருக்கார். அவர் இங்கே பதிவெழுதும் ஒரு பிரபலர். அவரை நான் எழுத்தாளர் என்றுதான் அழைப்பேன்.///

இதுக்கு என்ன ரியாக்ட் பண்ணுறதுன்னு தெரியல!! துப்பறியும் சாம்பு போல ஒரு பீல் வருது ;;)))

///இனிய நண்பர்..../// ரொம்ப மகிழ்ச்சி !!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம்.. எல்லாம் சரியாகட்டும்னு வேண்டிக்கிறோம்..

சரி சரி அப்படியே பஞ்சாயத்து பணம் வாங்கியதையும் பதிவிடுங்க.. :)