சமீபத்தைய எனது பதிவொன்றின் தலைப்பு....”ஏன் ஒரு பதிவர் கூட தீக்குளிக்கலை”. இந்த பதிவு அநேகர்களுக்கு கோவத்தை வரவழைத்த பதிவு. ஈழத்துயரத்தை பதிந்து வைக்கிறேன் பேர்வழியென சுயவெளிச்சம் போடத்துடிக்கும் அற்பர்களை பற்றியதே அந்த பதிவு...
இன உணர்வை வெளிப்படுத்துவது குற்றமா என்கிற தொணியில் நண்பரொருவர் கூட பதிவிட்டிருந்தார். அதில் விளக்கமும் கூறியிருந்தேன். இன்றைக்கு சூடான இடுகையில் முதலில் இருக்கும்பதிவின் தலைப்பு “பிரபாகரன் கைது”...இதுவா இன உணர்வு?, இதுவா இனப்பற்று?
லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் தங்களின் தேசியத்தலைவராய் வரித்துக் கொண்ட ஒரு மனிதனை...எது நடக்கக் கூடாது என இத்தனை பேர் வரிந்து கட்டிக்கொண்டு போராடுகிறார்களோ அந்த தகவலை எதன் அடிப்படையில் அந்த பதிவர் பதிவிட்டார்?
இவர் ஒரு உதாரணமே...இவர் மாதிரி எண்ணற்ற காக்காய்கள் இங்கே பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். பதிவுலகம் அர்த்தமுள்ளதாய் தொடர வேண்டுமெனில் இவர்களை புறந்தள்ளுதல் அவசியம்.
"சற்றுமுன்" என்கிற ஒரு செய்தி தளம் ஒன்று பல பதிவர்களால் இனைந்து நடத்தப்பட்டது. செய்திகளை அதன் சூடு குறையாமல் உண்மைக்கு சற்றும் விலகாமல் தொகுத்தளித்தனர். அதே போல ஒரு முயற்சி தற்போதைக்கு தேவைப்படுகிறது. அக்கறையுள்ள பதிவர்கள் ஒன்றினைந்து ஈழத்துயர் குறித்த விழிப்புணர்வு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கான ஒரு வலைப்பதிவினை தொடங்கலாம்.
அம்மாதியான ஆக்கப்பூர்வமான ஒரு முன்னெடுப்பு நடவடிக்கையே இப்போதைய அவசியமான அவசியம்....வெறுமனே ஒப்பாரி வைக்கிறேன் பேர்வழியென சவ ஊர்வலத்தில் சம்பந்தமே இல்லாமல் குடிவெறியுடன் கூத்தடிக்கும் விளம்பர பிரியர்கள் தமிழ் வலையுலகத்திற்கு தேவையில்லை.....
4 comments:
நியாயமான கோபம்.
சரியான வலியுறுத்தல்.
///அக்கறையுள்ள பதிவர்கள் ஒன்றினைந்து ஈழத்துயர் குறித்த விழிப்புணர்வு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கான ஒரு வலைப்பதிவினை தொடங்கலாம்.////
உணர்வை வெளிப்படுத்துகிறேன் என சொல்லிக்கொண்டு, வெறுமனே எழுதி கொண்டு
இருப்பதை விட ஆக்கபூர்வமான நிவாரண நடவடிக்கையில் இறங்கலாம்.
அதற்க்கு என்னைபோன்றோர் எப்போதும் தயார்!!
உண்மைதான் க்ளோபன்...
திரு.பிரபாகரன் மீது எனக்கு நிறைய விமர்சனங்கள் இருந்த போதும் அவர் கைதானதாக வந்த பதிவினைப் பார்த்து கொதித்துப் போய்விட்டேன்....
அதுவும் பொய்யான விளம்பர பதிவெனெ தெரியவந்தபோது இவர்களை என்ன செய்யலாமென்கிற ஆத்திரமே இந்த பதிவு....
ஜீவன்...
விழிப்புணர்வு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வு இதை மையமாய் கொண்டு கூட்டு வலைப்பதிவொன்று தொடங்கப்படும் பட்சத்தில் எனது பங்களிப்பினையும் தர தயாராக இருக்கிறேன்.
Post a Comment