தமிழ்மணத்துக்கு விடைகொடுப்போம்....

Monday, June 1, 2009

உடன்பிறப்பே....

கடந்த சில நாட்களாய் உன் அருமை கண்மணியாம் யட்சனின் பதிவினை தமிழ்மணதிரட்டியில் இனைக்க இயலாததன் சதி இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

தமிழமண திரட்டியார் தங்களின் அளவுகோலுக்கு அருகே வராத பதிவுகளை தூக்கியெறிய போகிறோமென அறிவித்த போதுகூட நாம் அப்பாவியாய் அவர்களின் பதிவுக்குச் சென்று சென்று நம் பதிவினை இனைக்க முடியாத சோகத்தை அங்கே முறையிட்டிருந்ததை நீ அறிவாய்.

இதன் பொருட்டு நம் அடைப்பலகையையும் இரண்டொரு முறை மாற்றியதும், அதனால் நீ பட்ட சிரமமும் நாளைய வரலாறு கூறும் செய்திகளானதை நான் எப்படி மறப்பேன். என்னுடைய நுட்ப அறிவினை நீ சந்தேகிக்கிறாயோவென என்னி அதன் பொருட்டு சோதனை பதிவாய் ஃப்ரான்ஸ் தேசத்து அதிபரின் அழகிய மனையாளின் திருவுருவப் படத்தினை உனக்கு காட்டிட என்னி இனையமெங்கும் அலைந்து திரிந்து, உருண்டு புரண்டு உலகே வியக்குமந்த பெருமாட்டியின் அழகினை உனக்கு கொண்டு வந்து சேர்த்ததாய் அகமகிழ்ந்திருந்தேன்.

அதன் பின்னரும் இனைக்க இயலாமல் போகவே இது நம் மாற்றாரின் சதியாக இருக்குமோவென எண்ணி ஐயம் தெளிய தமிழ்மணத்தாருக்கு மின்னஞ்சலொன்று வரைந்தேன். அந்த மின்னஞ்சலை உன் பார்வைக்கு வைக்கிறேன்....படித்துப்பார் அதில் ஏதும் பிழையிருக்கிறதாவென.....

அன்புடையீர்,

எனது தமிழ் வலைபதிவான http://yatchan.blogspot.com கடந்த ஒரு வருடமாய் தமிழ்மண திரட்டியினால் திரட்டப்படுகிறது. கடந்த சில நாட்களாய் எனது பதிவில் இருக்கும் தமிழ்மணபட்டியினை காணக்கிடைக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக பதிவினை தமிழ்மணத்தில் இனைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. இதனையடுத்து வேறு பல அடைபலகைகளை மாற்றியும் அதில் தமிழ்மண பட்டி தொடர்பான குறியீடுகளை இனைத்த போதிலும் இந்த சிக்கல் நீடிக்கிறது.

தவறு என் பக்கதிலிருக்கிறதா அல்லது தமிழ்மண திரட்டி எனது பதிவினை திரட்டுவதில் இருந்து விலக்கி வைத்திருக்கிறதா என்பது குறித்தான தங்களின் விளக்கம் மற்றும் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்....

அன்பன்

சரவணக்குமார் (யட்சன்)

இதற்கான பதிலும் உடனடியாக வந்தது....

யட்சன்,

மன்னிக்கவும். அண்மைய மாற்றங்களின், முடிவுகளின் படி, உங்கள் பதிவும் தமிழ்மணத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.

-செல்வராஜ்.
தமிழ்மணத்திலிருந்து விலக்கியிருக்கிறார்களாம், இந்த ஒரு வரியினை முன்னமே எழுதியிருந்தால் உன் அருமை கண்மணியாம் யட்சன் அடைப் பலகைகளோடு போராடியிருக்க வேண்டாம். அழகிய பெருமாட்டியின் படம் தேடி அலைந்திருக்க வேண்டாம். நமது கடிதத்தில் நமது பதிவினை விலக்கியிருக்கும் பட்சத்தில் அதற்கான காரண்த்தை கேட்டிருந்தோம்....அது நமது பண்பு ஆனால் அவர்களின் பதில் நறுக்குத் தெறித்தார் போல விரோதம் கொண்டவனின் மடலாய் இருப்பதை பார்த்து நீ எத்தனை வேதனைப்படுவாய் என்பதை என்னால் உணரமுடிகிறது.

இத்தகைய ஒரு பதில் எனக்கு எத்தனை கோபத்தை வரவழைத்திருக்கும் என்பதை நீ உணர்ந்திருபபர்ய், ஆனால் நாம் பண்பாடு தவறாதவர்கள், அடிப்படை நாகரீகம் தெரிந்தவர்கள், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுன்டு என நம்புபவர்கள். அதனால் நான் அவர்களுக்கு இப்படியொரு பதில் மடல் அனுப்பியிருக்கிறேன்.

அன்புடையீர்,
தங்களின் உடனடி பதிலுக்கு நன்றி....
எனது பதிவு எதனடிப்படையில் தங்கள் திரட்டியினால் விலக்கிவைக்கபடுகிறது என்பதை விளக்கிடும் பெருந்தன்மை உங்களுக்கு இல்லாவிடினும், அதை தெரிந்து கொள்ளும் ஆவலுமெனக்கு இப்போது எழவில்லை.
நான் தங்களின் மேலான அளவுகோலுக்குள் உட்படாத நிலையில் தொடர்ந்து எனது மற்ற பதிவுகளை உங்கள் திரட்டியில் இனைத்திருப்பது உங்களின் மேன்மைமிகு செயல்பாட்டிற்கு இடைஞ்சலாயிருக்குமென கருதுகிறேன்.
எனவே பங்குச்சந்தை தொடர்பான எனது நுட்ப பதிவினை உடனடியாக தங்கள் திரட்டியிலிருந்து நீக்கி விடுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். எனது பங்கு வணிகம் தொடர்பான வலைப்பதிவின் முகவரி http://panguvaniham.wordpress.com
எனவே தயை கூர்ந்து எனது வேண்டுகோளினை ஏற்று எனது பங்கு வணிகம் பதிவினை தங்கள் திரட்டியிலிருந்து விலக்கி அதை எனக்கு உறுதிப்படுத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
கடந்த நான்காண்டுகளாய் எனது பதிவினை தங்கள் திரட்டியில் இனைத்திருந்தமைக்கு நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
மு.சரவணக்குமார் (யட்சன்)

இப்போது நீ எத்தகை உணர்ச்சிப் பிழம்பாயிருபபாய் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. நாம் கடந்து வந்த பாதையில் எவரையும் இழிவாய் பழித்து திட்டியதில்லை, தலையில் முக்காடு போட்டுக்கொண்டு எவர் வீட்டு சுவற்றிலும் கிறுக்கியதில்லை. ஆபாசமாய் அர்ச்சித்ததில்லை....நமக்கு சரியென பட்டதை சனநாயக முறையில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறோம். இதை உணராத தமிழ்மணத்தார்....நமது வளர்ச்சியினை முடக்கும் விதத்தில் இத்தகைய செயலினை செய்திருப்பர் என நம்புகிறேன்.

நமது மடலுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் நமது பதிவுகளை இனி அவர்கள் திரட்டுவதில்லை என்கிற உறுதிமொழியினை எதிர்பார்க்கிறேன். நமது பயனுள்ள பணி தொடருமென்பது உனக்கும் எனக்கும் தெரிந்தால் போதும்.

இறுதியாக ஒரு வேண்டுகோளினை உன் பாதம் பணிந்து கேட்கிறேன், தட்டமாட்டாயென்கிற உரிமையில் கேட்கிறேன்....இந்த பாதக செயலை என்னி மனம் வருந்தி, கொதித்தெழுந்து மாற்றாரை அவதூறு செய்திடும் வகையில் எந்த வொரு காரியத்தையும் செய்யமாட்டேன் என்கிற உறுதிமொழியினை நீ எனக்கு தந்திடல் வேண்டும்.

இனி அவர்கள் நம் வழியில் இல்லை, நாம் நமது வழியில் தொடர்கிறோம்.....அவர்களுக்கு வாழ்த்தி விடைகொடுப்போம்.

வாழ்க தமிழ்....வளர்க இங்கிலீஷ்.....

-யட்சன்

22 comments:

மங்கை said...

இந்தப் பதிவையும் உங்க ஸ்டைல்ல போடனுமா...

இத்தன மெனக்கெட்டு இதுக்கு முன்னாடி ஒரு பதிவாவது எழுதி இருக்கீங்க??

சிம்பா said...

அக்கா சொல்றது சரி தான். நம்ம அண்ணாத்த இவளோ சிரமப்பட்டு நான் பார்த்ததில்லை.

ஓட்டு வாங்கிய அரசியல் வியாதி மாதிரி ஆகிட்டாங்களா தமிழ் மனம் குழு...

வாழ்க...

ஆமாம் அய்யா அது என்ன சோத்தாங்கை பக்கம் வேற பல இணைப்புகள் மின்னுது...

இதுக்கு பேரு தான் இமீடியட் ஆக்சன் என்பார்களா?

யட்சன்... said...

அதானே....இதுக்கு முன்னாடி இம்புட்டு மெனக்கெட்டு பதிவெழுததே இல்லை...

இனி எழுதனும்....

எழுதீருவோம்....

யட்சன்... said...

அருண்...

தமிழ்மணம் தன் தவறை உணரலாம்...

அதற்காக கறந்தபால் மடி புகமுடியாது...

கருவாடு மீனாக முடியாது...

இனி நம் வழி தனிவழி...

அவர்களை வாழ்த்துவோம்...

புதியவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் முயற்சியாகவே இந்த இம்மீடியட் ஆக்‌ஷன் என்பதை புரிந்து கொண்டிருப்பீர்களென நம்புகிறேன்....

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....கலைஞர் மாதிரி எழுதறதுக்குள்ள தாவு தீருது...ஹி..ஹி...

கும்மாச்சி said...

ஆஹா நண்பா இப்பொழுது புரிகிறது, ஏன் என்னால் தமிழ்மணம் பட்டையை இணைக்க முடியவில்லை என்று.

தமிழ் மனம் நமக்கு தேவையில்லை. என்னுடைய பத்துப் பதிவுகள் வெளிவந்தன, அதனையும் விளக்கியிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

சீ சீ இந்தப் பழம் புள்ளிக்கும், உவ்வே.

ஜீவன் said...

முதல்ல நீங்க சீரியஸா எழுதி இருக்கீங்களா ? இல்ல காமடியா எழுதி இருகீங்களான்னு
குழப்பம்!;;)) சீரியஸா இருக்கும் பட்சத்தில் தமிழ் மணத்தில் என்ன அளவுகோல் வைச்சு இருக்காங்க புரியலையே ?

எதுவானாலும்! இந்த பதிவில் உங்க ஸ்டைலு சூப்பரு!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:( எத்தனை ‘ன’ “ண” பிழைகளப்பா..இதுல தமிழ்வாழ்க வா..

இது தான் பதிவின் பேக்ரவுண்ட் பல கலரில் மாறிக்கிட்டே இருந்த காரணமா? :(

ஜீவன் said...

///அதற்காக கறந்தபால் மடி புகமுடியாது...

கருவாடு மீனாக முடியாது...

இனி நம் வழி தனிவழி...///

//நம் வழி தனி வழி//

இத நீங்க சொல்லித்தான் தெரியனுமா ??? ;;))

யட்சன்... said...

கும்மாச்சி....

பதிவுகளை திரட்டவும் நீக்கவும் அவர்களுக்கு உரிமையுள்ளது..

பதிவர்கள் தங்கள் ப்திவினை திரட்டியிலிருந்து நீக்கக் கோரும்போது அதை நீக்கிவிடும் பண்பும் அவர்களிடம் இருக்கும் என நம்புகிறேன்.

யட்சன்... said...

ஜீவன்..

இது சீரியஸான காமெடி பதிவு...

நான் நெசமாவெ நல்லா எழுதறேனா...

நம்பவே முடியலை....

harveena said...

sir,, enaku therinja tamizh la solaren sir,,

yenda post nethi adi....

யட்சன்... said...

கயல்விழி முத்துலட்சுமி....

அரசியலில் நேர்மை...பொதுவாழ்வில் தூய்மை என்பதை ஏட்டளவில் படித்திருக்கிறோமென்பதை நிரூபிக்கும் வகையில் தங்களின் குற்றசாட்டுகளை நாங்கள் மனமாற ஒப்புக்கொள்கிறோம்.

எதிர்வரும் பொதுக்குழுவில் இந்த எழுத்துப்பிழைகளை சீரமைக்க ஒரு ஆய்வுக்குழுவினை அமைத்து இந்த களங்கத்தை துடைத்தெறிய தயங்கமாட்டோம் என்பதை இந்த அளவில் சொல்லி விடைபெறுகிறேன்.

ஹி...ஹி...

கோபிநாத் said...

இப்போ நான் என்ன செய்யட்டும்!!!??? ;)))))) (தம்பி மாதவன் மாதிரி படிங்க)

யட்சன்... said...

கோபிநாத்...

பொறுமை...காத்திடுங்கள்

விரைவில், பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடி இது குறித்து விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்....

ஹி...ஹி...வேறென்ன சொல்றதாம்!

லக்கிலுக் said...

யட்சனை தூக்கிட்டாங்களா?

இன்னா அநியாயம்பா இது?

ஆல்டர் ஈகோவுக்கு அடுத்த இடத்தை உங்களுக்கு அளிக்கிறேன். என் வலைப்பூவில் உங்களுக்கு நிரந்தர லிங்க் இருக்கும்.

அன்புடன்
லக்கி

தீப்பெட்டி said...

நல்லா எழுதியிருக்கீங்க..

காட்டாறு said...

இன்னாப்பா ஈது... ஒன்னுமே வெளங்கல. இன்னா லாங்குவேசு இது... சரவணா சரவணா... இதுக்கே வெலக்கிட்டாங்களோ.... நெம்ப ரோசிச்சி பார்த்தேனு நானு... இது தானோ....நெம்ப நல்லா எழுதுறவங்க வெலகிக்கோங்கன்னு... இருக்குமண்ணே... நீங்க அதுக்காச்சும்... இப்பிடி பிரியாத மாதிரி எழுதாதண்ணே... இப்பிடிகின்னா எளிதுனா உன் பொலம என்னாகுறது..ரோசிண்ணே

சென்ஷி said...

// மங்கை said...

இந்தப் பதிவையும் உங்க ஸ்டைல்ல போடனுமா...

இத்தன மெனக்கெட்டு இதுக்கு முன்னாடி ஒரு பதிவாவது எழுதி இருக்கீங்க??//

ரிப்பீட்டே :))

ஆனாலும் கை கொடுக்கும் தெய்வம் கூகிள் ரீடரிருக்க பயமேன் :)

சென்ஷி said...

//லக்கிலுக் said...

யட்சனை தூக்கிட்டாங்களா?

இன்னா அநியாயம்பா இது?

ஆல்டர் ஈகோவுக்கு அடுத்த இடத்தை உங்களுக்கு அளிக்கிறேன். என் வலைப்பூவில் உங்களுக்கு நிரந்தர லிங்க் இருக்கும்.

அன்புடன்
லக்கி//

அண்ணன் லக்கி வாழ்க வாழ்க

மங்களூர் சிவா said...

/
அதற்காக கறந்தபால் மடி புகமுடியாது...

கருவாடு மீனாக முடியாது...
/

கலக்கறீங்க போங்க!

Kaattaaru said...

Where is the next post? Appadiye escape aayiralaaminnu plan-ah?

சென்ஷி said...

Where is the next post? Appadiye escape aayiralaaminnu plan-ah?