தமிழச்சியின் பதிவில் பின்னூட்டம் போடமுடியாத கொடுமை!

Thursday, July 17, 2008

தமிழச்சியின் பதிவுகளில், தமிழச்சியின் கிறுக்கல்(!) என்கிற பதிவும் ஒன்று. கொஞ்ச நாளா அங்கிட்டு இங்கிட்டு சுத்திட்டு இருந்ததால அவரோட அந்த பதிவு பக்கம் போகலை. இன்னிக்கு திடீர்னு தோணிச்சு, சரி போய்ட்டு வருவமேன்னு போனேன். ஒரு கவிதை(?), சாரி...கிறுக்கல், அதை படியுங்கோ முதலில்....

பிடித்ததும்,பிடிக்காததும்...

உனக்கு பிடிக்காதது...
எனக்கு பிடித்திருந்தது...!
எனக்கு பிடித்தது...
உனக்கு பிடிக்காதிருந்தது...!
ஆனாலும் உனக்கு...
என்னை பிடித்திருந்தது...!
எனக்கு உன்னை பிடித்திருந்தது...
இன்றோ உனக்கும் எனக்கும்...
நம்மை பிடித்திருக்கிறதா...?


மொதத்தடவை படிக்கறப்ப ஒன்னும் வெள்ங்காது...இரண்டு மூனு தடவை படிச்சவுடனே இம்புட்டுதானான்னு தோணும்....எனக்கும் தோணிச்சி...சரி நாமளும் நம்ம பங்குக்கு நாலு வரி கிறுக்கீட்டு போவமேன்னு பின்னூட்டமா இப்படி கிறுக்கினேன்.

உனக்கு
பிடித்ததெல்லாம்
எனக்கு
பிடித்திருக்கவேண்டியதில்லை
ஆனாலும்
எனக்கு பிடிக்காததையும் ரசிக்கிறேன்...
உன்னை எனக்கு பிடித்திருப்பதால்....

(என்ன கொடுமையிது! ஏன் நான் இப்படியல்லாம் எழுதறேன்...ஹி..ஹி..ம்ம்ம்)


இப்படி டைப்பீட்டு பதிவு செய்யப்போனா...உன்னோட பின்னூட்டமெல்லாம் இங்க எடுபடாது மவனேன்னு ப்ளாக்கர் சொல்லீருச்சு, ஆஹா!, நாமளே ஆடிக்கொரு தடவை அம்மாவாசைக்கொரு தடவைன்னு இங்கன வர்றோம், நம்ம பின்னூட்டத்துக்க் அனுமதியில்லையான்னு ஆத்திரப்பட்டு திரும்ப பார்த்தா...அவங்க பங்காளிக மட்டுந்தான் அங்கன பின்னூட்டம் போடனுமாம். நானும் ஒரு பழய பங்காளிதான்னு அவுகளுக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல...அதான் பதிவா போட்டுட்டேன்.யாராச்சும் எங்கனயாச்சும் தமிழச்சிய பார்த்தா இந்த பதிவு மேட்டர அவுக காதுல போடுங்கப்பேய்....

3 comments:

Anonymous said...

ஹி..ஹி...
தமிழச்சி ரொம்ப அழகா இருக்காங்கப்பா! சரி சரி இனி அந்த பக்கம் போறத நிறுத்திக்கோ

யட்சன்... said...

அனானி நண்பா...

எனக்கென்னவோ தமிழச்சிகளை விட குஜராத்திகள்தான் அழகாய் தெரிகிறார்கள்.

Anonymous said...

************************************************************************இப்பின்னூட்டம் வெளியிட அல்ல**

வணக்கம் நீங்கள் சொக்கன் தானே? இன்று தான் இந்த பதிவை பார்த்தேன். பழைய தோஸ்துன்னு சொல்றாரே யாருன்னு தெரிந்த பதிவர்கிட்ட கேட்டேன். 2ஆம் சொக்கன் என்கிறார். அதை உறுதியானால் எனக்கு ஒரு மின்னஞ்சல் செய்துடுங்க..
tamizachi@Gmail.com

எப்போதாவது உங்கள் ஞாபகம் வரும். நல்லா இருக்கிங்களா?

நான் இப்போது எந்த திரட்டியிலும் இணையாமல் இருக்கிறேன். அதனால் என்னுடைய புதிய இணையதளம் முகவரி உங்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

http://tamizachi.com/
http://tamizachiyin-periyar.com/

விரைவில் சந்திப்போம்.

தோழமையுடன்
தமிழச்சி