காடுவெட்டி...

Friday, July 11, 2008

கலைஞரை பகைத்துக் கொண்டால் இப்படியெல்லாம் நடக்குமென தமிழ்குடிதாங்கி எதிர்பார்த்திருப்பார்தான். ஆனால் தன்னுடைய ஆளை இப்படி எந்த சேதாரமுமில்லாமல் கோழிக்குஞ்சை அமுக்குவது போல் அமுக்கிக் கொண்டு போய் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பூட்டுவார் என எதிர்பார்த்திருக்க மாட்டார்தான்.

வட தமிழகமே குலுங்கும், பொங்கிப் பிரயளமாகும், ரத்த ஆறு ஓடும்...ம்ரங்களெல்லாம் மல்லாந்து கிடக்கும் என்ற் மார்தட்டியவர்கள் இன்றைக்கு என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என தெரியவில்லை. ஏதோ பேருக்கு நாலு இடத்தில் மறியல், ஒரு பஸ் எரித்தல் என்கிற வகையில் சம்பிரதாயமாய் கைகழுவி விட்டதைப் போலத்தான் தோன்றுகிறது.

காடுவெட்டியின் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பலவும் அம்மாவுக்கு எதிராக பேசியதாய் போட்டிருப்பதால், அம்மாவின் அனுசரனையையும் தற்போதைக்கு எதிர்பார்க்க முடியாது.

வன்னியர் வாரியம், பங்காரு அடிகளார் கலைஞரை சந்தித்தது...திருமாவை அரவனைப்பது என மிக நேர்த்தியாய் காய்கள் நகர்த்தப்படுகிறது. தனது சொந்த பலம் சிதைவதை தடுக்கமுடியாமல் பாமக தலைமை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகம் அவர் கட்சிக்காரர்களுக்கு வருவதற்கு முன்னர் ஏதாவது தடாலடியாய் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் அய்யா தமிழ்குடிதாங்கி இருக்கிறார்.

என்னுடைய ஆலோசனையை தமிழ்குடிதாங்கி கேட்பாரேயானால்...மத்திய அரசு நம்பிக்கை வாக்கு கோரும் இந்த சமயத்தில் சோனியா மூலமாய் பேரம்பேசி கலைஞரோடு சமாதானமாய் போய்விடுவதே தற்போதைக்கு சாதகமான உத்தியாய் இருக்கும்.

செய்வாரா பெரிய அய்யா?

0 comments: