இன்று மாலை லக்கிலூக்கின் பதிவில் பதிவர் அனுராதா அவர்களின் பிரிவு பற்றி அறிந்த கணத்திலிருந்து உறுத்திக் கொண்டிருந்த ஒன்றினையே தமிழ்மண நிர்வாகத்திற்கு வேண்டுகோளாய் இந்த பதிவின் மூலமாய் வைக்கிறேன்.
சக பதிவர்களின் அங்கீகரிப்புகளையும், வெற்றிகளையும் தன் முதல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு அதனை தன் பயணச்சுவட்டில் பதிந்து வைக்கும் தமிழ்மணம், தளரா நெஞ்சுறுதியுடன் காலனை எதிர்த்து தன்னந்தனியாய் போராடிய அந்த தாய்மையின் பிரிவினையும் அவர்பால் சக பதிவர்கள் கொண்டிருந்த அக்கறையையும் தமிழ்மண வரலாற்றில் பதிவது அவசியமென படுகிறது. இதனை ஒரு வேண்டு கோளாய் ஏற்று அண்ணாருக்கு சக பதிவர்களின் அஞ்சலியினை பதியும் விதமாய் தமிழ்மண முகப்பில் ஒரு அறிவிப்பினையும் ஏற்பாடினையும் செய்யலாம்.
யோசியுங்கள் நண்பர்களே...
தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்....
Thursday, August 28, 2008
Posted by யட்சன்... at 7:36 AM
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
யட்சன்,
வழிமொழிகிறேன்,
நானும் இதுபற்றி லக்கிலுக் பதிவில் சொல்ல நினைத்தேன்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம்
15 நாட்கள் வரை முகப்பில் அறிவிப்பு பகுதியில் செய்தியாக வைக்கலாம்
நல்ல வேண்டுகோள். கண்டிப்பா செய்வாங்க. ஒரு மடல் தட்டுங்களேன்.
வழிமொழிகிறேன்!
நல்ல யோசனை கோவி...
மடல் அனுப்பிவிட்டேன் வெட்டி...
வழிமொழிகிறேன்!
அண்ணே,
உங்க கருத்துக்களை அப்பிடியே வழிமொழிகிறேன்...
யட்சன், பெரும்பாலோர் எண்ணியதை நீங்கள் எழுதிவிட்டீர்கள். நன்றி. உங்களுக்கும்தான் கோவி.
வழிமொழிகிறேன்!
வழிமொழிகிறேன்!
சீரிய சிந்தனைக்கு தலைவணங்கி, உங்கள் கருத்தை நானும் மனமார வழிமொழிகிறேன்.
தமிழ்மணம் கட்டாயம் இதைச் செய்ய வேண்டும். தமிழ் மணத்திற்கு புதியவர்களான என் போன்றோரும் மின்னஞ்சல் செய்ய வசதியாய் தமிழ்மணத்தின் தொடர்பு மின்னஞ்சல் முகவரியை தயவு செய்து வெளியிடுங்கள்.
வழிமொழிகிறேன்!
வரிக்கு வரி வழிமொழிகிறேன்...
தமிழ்மணம் ஏற்கனவே போட்டிருக்கிறதே?
உருப்படியான நல்லதொரு யோசனைமூலம் அதை செயல்படுத்தியும் விட்டீர்கள்!
அதுமட்டுமல்ல, அவரது எழுத்துக்களை புத்தக வடிவில் கொண்டுவரும் முயற்சிக்கு தமிழ்மணம் துணை நிற்க வேண்டும். அனுராதாவே அவரது எழுத்துக்களை புத்தக வடிவில் கொண்டுவர விரும்பினார் என்று கேள்விப்பட்டேன். இந்தப் பணியை ஒருங்கிணைத்து செய்ய வலைப்பதிவர்களும் முன்வர வேண்டும்!!
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்..
வழிமொழிகிறேன்.
லக்கி கிருஷ்ணா சொல்வது போல புத்தகமாக கொண்டுவர அனைத்து பதிவர்களும் இணைந்து செயல்படுவோம்.
லக்கியார் இந்த பொறுப்பினை ஏற்று செயல் படுத்தினால் நலம். பங்களிக்க தயாராக இருக்கிறேன்.
பின்னூட்டத்தின் மூலம் ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி...
வேண்டுகோளினை உடனடியாய் செயல்படுத்திய தமிழ்மணத்தாருக்கும் நன்றி...
எனக்கொரு யோசனை...
பதிவர் அனுராதாவின் பதிவினை ஒரு புத்தகமாய் தொகுத்து அவரின் நோக்கமான பெண்களிடையே விழிப்புணர்வினை பரப்பும் விதத்தில் அந்த புத்தகத்தினை அனைவருக்கும் இலவசமாய் தரலாம். இதற்காகும் செலவினை பதிவர்களான நாமே ஏற்றுக் கொள்ளலாம். இதுவே அந்த புண்ணியாத்மாவிற்கு நாம் செய்யும் நல்லஞ்சலியாக இருக்கும்.
கண்டிப்பாக செய்யலாம் யட்சன். அதற்கு என்னாலான உதவிகளை செய்வேன்.
பின்னுறீங்க முத்துதமிழினி.. வாழ்த்துக்கள். யாரிடமும் சொல்ல மாட்டேன். நம்பலாம்.
Post a Comment