அப்படி ஏதும் நடந்துவிடுமா...?

Sunday, May 10, 2009

சோனியா சென்னை வருகிறாராம்...என்னவொரு முட்டாள்தனமான முடிவு !

வலையுலகில் உணர்ச்சிபிழம்பாய் கொதித்துப் போயிருக்கும் அநேக தமிழ்பதிவர்களை ப்ற்றி அவருக்கு தெரிந்திருக்குமா என தெரியவில்லை. இதையெல்லாம் அறியாமல் சோனியா அவர்கள் இந்த தன்மான் சிங்கங்களின் குகைக்குள்ளேயே வருக்கிறார். என்னவொரு அசட்டுத்தனம்....ம்ம்ம்ம்

அநேகமாய் இந்த தமிழ் பதிவர்கள் எல்லோரும் சோனியா வரும் வழியில் அல்லது பொதுக்கூட்டத்தில் ஏதாகிலும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்...ஏனெனில் அவர்களின் பதிவில் அத்தகனை காரமும், வீரமும் இருந்தது.

ஜெயா டிவியில் இவர்களின் போராட்டத்தினை நேரலையாக காட்டுவார்கள் என்கிற ஒரே காரணத்திற்காகவே அந்த அலைகாட்சியினை தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நாளைய செய்திதாள்களில் நமது பதிவர்களின் வீரதீர பிரதாபங்களை படித்து மகிழ்வோம் என்கிற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்கிறேன்.

பின்குறிப்பு : இனி எவரும்(நான் உட்பட) இவர்கள் ஏசி ரூமில் ஓசி கண்ணியில் பதிவிடும் வாய்ச்சொல் மண்ணிக்கவும் படங்காட்டும் பதிவுலக வீரர்கள் என யாரும் சொல்லமுடியாது.

5 comments:

Anonymous said...

ஒரு ம....ரும் நடக்காது. தப்பு தப்பாய் யோசிக்கும் உன் தலையில் இடி விழ.

மங்கை said...

ஏனுங்க..இதைப்பத்தி இனி மேல் எழுத மாட்டேன்னு சொன்னீங்கோவ்வ்வ்...

ஞாயிறு அதுவுமா நிம்மதியா டீவி பார்த்தமா..தூங்குனமா...குழந்தைகளுக்கு ஐஸ் கீரீம் வாங்கி குடுத்தமானு இல்லாம.. ஏன்...ஏன்...ஏன்

savuccu said...

என்ன ஒரு மன 'வக்கிரம்'?!

நேற்றுக்கூட 3000 பேருக்கு மேல் கொன்று குவிக்கப்பட்ட அவலம் நடந்திருக்கிறது.

ஏதோ திரைப்படம் பார்க்கும் உணர்வில் .....
சே!

savuccu said...

?! ?! ?!

ராஜ நடராஜன் said...

மனிதர்கள் பலவிதம்.அதில் நீங்களும் ஒருவிதம்:)Pessimistic ஆ பதிவு போட்டாத்தான் தூக்கமே வருதுன்னு சொல்றமாதிரியே பதிவு போடறீங்களே!