மத்திய அமைச்சரவையில் மாமனாரும், மருமகனும் மந்திரிகள்....

Thursday, May 28, 2009

இன்றைக்கு பதவியேற்றிருக்கும் மத்திய அமைச்சரவையில் மாமனாரும் மருமகனும் இடம் பெற்றிருக்கின்றனர்.

கேபினட் மந்திரியாக பதவியேற்றிருக்கும் காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் திரு.பஃருக் அப்துல்லாவின் மகளை மணந்திருக்கும் திரு. சச்சின் பைலட்டும் இன்று மத்திய இனை அமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.

இதைத் தவிர நம்மூர் மாமா, மருமகனும் கேபினட் மந்திரிகளாகியிருக்கின்றனர்...

மாமா - திரு.அழகிரி
மருமகன் - திரு. தயாநிதிமாறன்

இந்த மாதிரி வேற எங்கியாச்சும் நடந்திருக்கா?....

தெரிஞ்சவங்க சொல்லுங்க....

4 comments:

Kaattaaru said...

எங்க வீட்டுல நடந்திருக்கு. இங்க மாமியாரும் மருமகளும் கேபினட் மினிஸ்டர்ஸ். இதெல்லாம் கணக்குல வருமா?

$anjaiGandh! said...

தெய்வமே, பரூக் அப்துல்லாவும் சச்சின் பைலட்டும் வேறு வேறு கட்சிகளை சார்ந்தவர்கள். இருவருக்கும் வேறு வேறு காரணங்களுக்காக் பதவி வழங்கப் பட்டிருக்கு. பரூக் ஒரு கூட்டணிக் கட்சியில் தலைவர். அதனால் அவருக்கு பதவி. சச்சின் காங்கிரசின் இளைஞர் படையின் முக்கியஸ்தர். அதனால் அவருக்குப் பதவி. இதர்கும் மாமா, மரும்கன் உறவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.


டமிள் நாட் மாமா மருமகன் ஒரே கட்சியை சார்ந்தவர்கள்.. அதற்கு நோ கமெண்ட்ஸ் .. :)

மங்கை said...

காட்டாறு ஆத்தா...நீ சொன்ன கேஸ் ஐயா நிறைய பார்த்திருப்பார்...:-)

ஏனுங்க யட்சரே...அப்படித்தானே

ஜீவன் said...

இந்த பதிவுல எதோ உள் அரசியல் இருக்கு ...............