நான் ரசித்த பெண்பதிவர்கள்...

Wednesday, May 13, 2009

நான் பதிவெழுத துவங்கிய வரலாறு மற்றும் அதன் காரண காரியங்கள் ஏற்கனவே புராண இதிகாசங்களில் பதிந்திருக்கிறபடியால் அதைபற்றியெல்லாம் தம்பட்டம் அடிக்காமல் நேரடியாகவே பெண்பதிவர்களிடம் வந்து விடுகிறேன்.

நான் பதிவெழுத துவங்கிய காலத்தில் மதி கந்தசாமி, துளசி கோபால் மாதிரியானவர்கள்தான் பிரபலமான பெண் பதிவர்கள்...அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் பெண்பதிவர்கள் வரத்துவங்கினர்.

அந்த காலகட்டத்தில் துளசிகோபாலுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்குமளவுக்கு வெறித்தனமான பாசக்கார கூட்டமிருந்தது இப்போதைய புதியவர்களுக்கு தெரியாது. காலப்போக்கில் அதன் தீவிரம் குறைந்து போனது... தானாக நிகழ்ந்ததா இல்லை நிறைய பெண் பதிவர்கள் வந்த பின்னால் நீர்த்துப் போனதாவென தெரியவில்லை. நான் மதிக்கும் மிக மூத்த பதிவர் திருமதி. துளசி கோபால். அவரின் எழுத்துகளில் காணும் எளிமையும், யதார்த்தமுமே அவரின் வெற்றிக்கும், இத்தனை நாள் நிலைத்திருப்பதற்கும் காரணமென நினைக்கிறேன். திருவாளர் போலி டோண்டுவால் பாதிக்கப்பட்டவர்களில் அம்மையாரும் அடக்கம். வலையுலக மனோரமாவாய் இவரை கூறலாம்....பல பரிணாமங்களில் மிளிர்பவர்.

மதி கந்தசாமியின் எழுத்துக்களில் காணக்கிடைக்கும் சரளமான நடைபோக்கினை பின்னாளில் நான் காப்பியடித்திருக்கிறேன் என்றால் அது மிகையில்லை. அவர் சென்னை அன்னாநகரில் வசித்த காலகட்டத்தைய அனுபவங்களின் பதிவுகள் என்னுடைய ஆல் டைம் பேவரைட் பதிவுகளில் ஒன்றாக இருக்கிறது. தமிழ்மணம் உருவாக காரணமாயிருந்தவர்களில் இவரும் ஒருவர் என்பதும், பின்னாளில் தமிழ்மண நிர்வாகம் கைமாறிய போது புதிய குழுவில் அங்கம் வகித்தவரென்பதும் குறிப்பிட தக்கது.

ராமச்சந்திரன் உஷா....இவரின் ஆரம்பகால பதிவுகளில் இருந்து இவரை தொடர்ந்து வருகிறேன். வலையுலகத்துக்கு முந்தைய குழும எழுத்துக்களில் துவங்கியது இவரது எழுத்தாளர் பணி. முன்பெல்லாம் அடிக்கடி...நானும் ரவுடிதான்னு சொல்ற, வடிவேலு மாதிரி அப்பப்ப நானும் எழுத்தாளர்னு சொல்லிக்குவார். உண்மையில் அதற்கான உழைப்பு அவரிடமிருந்தது. வளைகுடாவிலிருந்த போதும் சரி பின்னர் சூரத்துக்கு மாறி வந்த பின்னரும் சரி தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறார். தற்போது அவரின் ஆக்கமொன்று புத்தகமாய் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது . இவர் வரையில் இது கொஞ்சம் கால தாமதமாக நடந்த ஒன்றாகவே நினைக்கிறேன்.

கவிஞர் மதுமிதா.....இவர் சராசரிகளில் இருந்து விலகியவர் என்பது அவரது பதிவுகளில் தெறிக்கும். சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றவர். ஒரு சமயத்தில் பதிவர்களை பற்றிய தகவல்களை புத்தகமாய் போடப்போவதாய் சொல்லி பதிவர்களின் விவரம் கேட்டார். ஆளாளுக்கு மாய்ந்து மாய்ந்து கொடுத்தனர். அது வேலைக்காவாது என்கிற தீர்க்க தரிசனம் எனக்கு தெரிந்ததால் நான் கொடுக்க வில்லை. அது புத்தகமாய் வந்ததா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.

மதுரா...அதிர்ச்சி வைத்தியமென்பார்களே அம்மாதிரியான எழுத்துக்கு சொந்தக்காரர். இவர் தனது பதிவினை அழித்துவிட்டார் என்பது வரலாற்று சோகம். காரணம் சில அநாமதேயங்கள். பின் நவீனத்துவமெல்லாம் இவரின் எழுத்துக்களுக்கு முன்னால் மண்டியிட வேண்டும். உண்மையான கட்டுடைப்பு அல்லது முகத்திலறைந்த எழுத்துக்கள் என்றால் அது இவரின் அடையாளம். அநாயசமாய் எல்லா எல்லைகளையும் தொட்டு மீளும் நடைக்கு சொந்தக்காரர். இவரின் ஆங்கில பதிவு மாத்திரம் தற்போது எஞ்சியிருக்கிறது. நான் பொறாமை பட்ட எழுத்து இவருடையது.

பொன்ஸ்....பரபரவென வலையுலகத்தில் பிரபலாமான பதிவர். நிறைய படிக்கிற ஒரு பதிவர். வலையுலக செயல்பாடுகளில் தன்னை முன்னிறுத்தியவர். பா.க.ச வின் நிறுவனர். ஜூனியர் துளசியாய் வருவார் என எதிர்பார்க்கப் பட்டவர். சில பிரச்சினைகளினால் இப்போது அமைதியாய் எந்த திரட்டியிலும் இனையாமல் பரபரப்பு சூழலில் இருந்து விலகி தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். இவரின் எழுத்துக்களில் மிளிரும் முதிர்ச்சியும், அதில் அவர் செய்யும் பரிசோதனைகளும் எனக்கு மிக பிடித்தமான ஒன்று.

மங்கை, ரொம்பவும் அப்பாவியாய் எழுத ஆரம்பித்து இன்றைக்கு சகலராலும் மதிக்கத்தக்க பதிவராய் செயல்படுகிறார். இவருக்கு இவர் சார்ந்த துறை தவிர வேறெதுவும் எழுதத் தெரியாது என்பது மாதிரியாய் அது தொடர்பான பதிவுகளையே இடுபவர். கடந்த இரண்டு வருடங்களில் இவரின் எழுத்து பிரம்மிக்கத் தக்க வகையில் மெருகேறியிருக்கிறது. இவரின் துறை சார்ந்த புத்தகம் ஒன்றினை இவர் எழுதிட வேண்டுமென்பது என்னுடைய எதிர்பார்ப்பு. பதிவுகளை உருப்படியான காரணத்திற்கு பயன்படுத்திடும் பதிவர். இவர் நம்ம தோஸ்த்து, அதுனால அவர் பதிவில் அதிகமாய் கலாய்த்திருந்தாலும் பெருந்தன்மையாய் என்னை விட்டு வைத்திருக்கிறார்.

கயல்விழி முத்துலட்சுமி....அல்லது ஜூனியர் பொன்ஸ் அல்லது ஜூனியர் துளசி. வீட்டின் கடைக்குட்டி சகோதரி மாதிரியான உரிமையும் கலகலப்புமான எழுத்து இவருடையது. இவரின் பயண கட்டுரைகள் அது தரும் விவரிப்புகள் என் மாதிரியான ஆட்களுக்கு வயிற்றெரிச்சலை தருபவை. வலையுலகின் பல தளங்களில் சிறப்பான பங்களிப்பு தரும் திறமைசாலி இவர்.

காட்டாறு.....இவரை ஜூனியர் மதுரா என்பேன். அவரளவிற்கு காரமில்லா விட்டாலும் துணிச்சலான எழுத்துக்காரர். என் அறிவிற்கு எட்டிய வரையில் வலையுலகில் இவர் ஒரு காதல் கவிதை ஸ்பெஷலிஸ்ட். வேலைப் பளு இவரை எழுதவிடாமல் செய்கிறது என நினைக்கிறேன்.

தமிழ்நதி....போகிற போக்கில் காற்று இறகை ஏந்திச்செல்வது போல நம்மையும் மிதக்கவைத்துவிடும் மாயாஜாலம் இவரது எழுத்துக்களில்....வாக்கியங்களை கட்டமைப்பதில் இவரின் நேர்த்தி அசாத்தியமானது...ஸ்கூல் பையன் வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்வதைப்போல இவரின் வாக்கியங்களை திரும்ப திரும்ப படித்துப் பார்த்து அதிசயித்திருக்கிறேன். தன் இயல்புக்கு மாறாய் சென்னை செந்தமிழில் இவர் ஒரு பதிவு எழுதியிருக்கிறார், படித்துப் பாருங்கள், மொழியின் மீதான அவரின் ஆளுமை புலப்படும். இவருக்காகவாவது இலங்கையில் நிலமை சீரடைய வேண்டுமென பல முறை யோசித்திருக்கிறேன். அத்தனை சோகம் ஊடாடுகிறது இவரின் எழுத்துக்களில்....ம்ம்ம்ம்ம்

டாக்டர்.டெல்ஃபின் விக்டோரியா.....பெரிய போலீஸ் அதிகாரியின் அதிகாரி(பாஸ்!)....மளமளவென எழுதியவர் திடீரென வேலை நிமித்தமாய் எழுதுவதை குறைத்து விட்டார். துறை சார்ந்த விடயங்களை எளிமையாய் விவரிக்கின்றன இவரது பதிவுகள்.

இந்த அளவில் முடித்துக் கொள்வோம், இதற்காக மற்ற பெண் பதிவர்கள் என் மீது கோவிக்க வேண்டாம். என்னை மிகவும் பாதித்தவர்களை பட்டியலிட்டிருக்கிறேன் அவ்வளவே....யாரையாச்சும் விட்ருக்கேனா தெரியலை, அப்படி யாராவது உரிமையா வந்து திட்டினா கால்ல விழுந்துர்றேன் என்பதை தெரிவித்துக் கொண்டு இந்த பதிவினை இந்த அளவில் முடிக்கிறேன்.













20 comments:

பதி said...

ரசித்த எழுத்துக்களைப் பற்றி ரசிக்கும்படியாக ஒரு பதிவு !!!!!!! :)

துளசி கோபால் said...

நன்றின்னு சொல்றதுக்கு வேற ஏதாவது சொல் இருக்கான்னு சொல்லுங்க யட்சன்.

முத்துலெட்சுமி என் சிஷ்யப்பிள்ளைன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க:-))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) பொன்ஸ் & துளசி நான் எழுதவந்தபுதிதில் நான் ஆவென்று பார்த்து ஆச்சரியப்பட்ட பதிவர்கள் அவர்கள் பெயரோடு சேர்த்து சொன்னதை நினைச்சா எனக்கு கைகால் ஓடலை..


மத்தவங்கள் பற்றியும் நல்லா எழுதி இருக்கீங்க..

@ துளசி .. சொல்லிக்கிட்டிருக்கேனா அப்ப ஏத்துக்கலையா நீங்க..சிஷ்யையா..?

துளசி கோபால் said...

கயலு,

அச்சச்சோ..... அப்படி ஒன்னு இருக்கா? :-))))
குரு தட்சிணையா என்ன கேக்கலாமுன்னு யோசனையா இருக்கு இப்ப:-))))

முரளிகண்ணன் said...

\\வலையுலக மனோரமாவாய் இவரை கூறலாம்....பல பரிணாமங்களில் மிளிர்பவர்.
\\

வலையுலக பானுமதி என்று சொல்லவேண்டும். பல பரிமாணங்களில் மின்னுபவர் டீச்சர்.

சென்ஷி said...

//Blogger பதி said...

ரசித்த எழுத்துக்களைப் பற்றி ரசிக்கும்படியாக ஒரு பதிவு !!!!!!! :)//

ரிப்பீட்டே:)

மங்கை said...

நன்றி எல்லாம் நாங்க பங்காளிக்கு சொல்லனும்...ஆமா நீங்க யாரு... துளசி அக்கா..உஷா பத்தி எல்லாம் எழுதி இருக்கீங்க...

நீங்க யாருன்னு சொல்லவே இலலியே.. சீனியர் பதிவர்களை பத்தி ஒரு சின்ன பையன் எழுதி இருக்கீங்க

சென்ஷி said...

//துளசி கோபால் said...

நன்றின்னு சொல்றதுக்கு வேற ஏதாவது சொல் இருக்கான்னு சொல்லுங்க யட்சன்.//

ரீச்சர்! தேங்க்ஸ்ன்னு இங்கிலீசுல சொல்லலாமுன்னு அகராதி புடிச்சவங்க சொல்றாங்க ;-)

சென்ஷி said...

//மங்கை said...

நன்றி எல்லாம் நாங்க பங்காளிக்கு சொல்லனும்...ஆமா நீங்க யாரு... துளசி அக்கா..உஷா பத்தி எல்லாம் எழுதி இருக்கீங்க...

நீங்க யாருன்னு சொல்லவே இலலியே.. சீனியர் பதிவர்களை பத்தி ஒரு சின்ன பையன் எழுதி இருக்கீங்க//

ஹி..ஹி..

கன்னா பின்னான்னு ரீப்பீட்டு வுட்டுக்கறேன் :)

Unknown said...

உங்கள் காலகட்டத்தைப் பகிரும் எனது அனுபவத்திலும் நீங்கள் இரசித்த இவர்களே என்னையும் பாதித்தவர்கள் (மதுராவைத் தவிர..எங்கேயோ விட்டிருக்கிறேன்)! உங்கள் குறிப்புக்களுடன் நானும் உடன்படுகிறேன்.

தமிழ் அமுதன் said...

இதுல எனக்கு மூனு பதிவர் களின் பதிவை மட்டும்தான் படிச்சு இருக்கேன் !

ஒன்னு துளசி கோபால் மேடம்! நான் பதிவுலகிற்கு புதுசு அதனால பழைய விஷயங்கள்
அதிகம் தெரியாது! இப்போ கொஞ்சம் தெரிஞ்சு கிட்டேன். இவங்க பதிவுகள் எல்லாமே
எளிதில் கவர கூடியவை!

அடுத்து நம்ம மங்கை மேடம்! இவங்க எழுதுறது சமுகத்துக்கு மருந்து மாதிரி! அதோட ஒரு டாக்குமெண்டரி படம்போலன்னு கூட சொல்லலாம்.இவங்க தனது துறை சாராத சில பதிவுகள் எழுதி இருக்காங்க அவை எல்லாம் மிகவும் ரசிக்க தக்க வகைல இருக்கும்.என்ன இவங்க ரொம்ப கம்மியா எழுதுறாங்க! நெறைய எழுதனும்!
இவங்க கடைசியா எழுதின அஞ்சு பதிவுல மூனு பதிவு விகடன் குட் ப்லோக் ல வந்தது!

அடுத்து முத்து லட்சுமி இவங்க பதிவுகளையும் படிச்சு இருக்கேன்!

நல்ல இயல்பான நடையில எழுதுறாங்க! இவங்க பதிவுகளை எல்லாம் ஒரு புத்தகமா போடுறதா சொல்லி இருந்தாங்க எப்போ வெளியிடுராங்கன்னு தெரியல!;;))

சொல்லி இருக்கும் அனைத்து பதிவர்களின் லிங்க் கொடுத்து இருக்கலாம்!

பதிவுகளுக்கு எப்படி தலைப்பு வைக்கிறதுன்னு உங்க கிட்டதான் கத்துக்கணும் !

லக்கிலுக் said...

பெண்பதிவர்களை அவ்வளவாக படிப்பதில்லை. நிறைய பேர் கவிதை எழுதுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பதால்! :-)

பொன்ஸ் மட்டும் அப்பப்போ எட்டிப் பார்ப்பேன்!

நீங்கள் செய்துவைத்திருக்கும் அறிமுகம் அவ்வப்போது மற்றவர்களையும் எட்டிப்பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறது.

யட்சன்... said...

பதி..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

துளசிம்மா...

நன்றியெல்லாம் நான்ல சொல்லனும், தமிழ் வலையுலகின் பிதாமகள்னு நீங்க! நானெல்லாம் உங்களை அன்னாந்து பார்த்து வளரும் சிறிய செடி

கவி.முத்துலட்சுமி...

உங்க பலம் உங்களுக்குத் தெரியலை...

யட்சன்... said...

முரளி கண்ணன்...

பானுமதின்னா கொஞ்சம் தள்ளி போகிற உணர்வு...மனோரமான்னா ஒரு அன்னியோன்யம் இருக்குல்ல...

சென்ஷி...

நீங்களும் இந்த மாதிரி ஒரு லிஸ்ட் போடலாம்ல...

மங்கை...

இதைத்தான் முற்பகல் செய்யின்னு சொல்றதா...நடத்துங்க நடத்துங்க...

அப்புறம் யாராந்த பங்காளி...பார்த்தா கேட்டேன்னு சொல்லிடுங்க ...ஹி..ஹி..

Anonymous said...

தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.

அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.

ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா

மங்கை said...
This comment has been removed by the author.
காட்டாறு said...

மங்கை இழுத்து கொண்டுவந்து விட்டுட்டு போனாங்க.

தலைப்பை பார்த்ததும், as usual, உள்ள சப்புன்னு ஏதாவது லொல்லு பேசியிருப்பாருன்னு நெனச்சேன். ஹி ஹி ஹி.

நானும் யட்சனோடு சேர்ந்து சொல்லிக்கிறேன். இவர் சொன்ன அம்பூட்டு பேரும் எனக்கும் பிடிக்கும். லிஸ்ட்ல இருக்குறவங்க 2 பேரு தெரியாது. கவிஞர் மதுமிதா, மதுரா. சீனியர் மதுரா எங்கிருந்தாலும் வாங்கப்பா. ஆளாளுக்கு மதுரா மாதிரியேன்னு சொல்லுறாங்க.

ஒரு நாள் அவங்கள பார்த்து ஹாய் சொல்லாமல் பதிவுல படியை மிதிக்கிறதில்லன்னு ஹி ஹி ஹி உறுதி மொழி எடுத்துக்குறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பா.. நாங்க எல்லாம் புதுசா வந்து இருக்கவங்க.. எனக்கு கயல்விழி அவர்களை மட்டுமே நன்றாகத் தெரியும்.. துளசி கோபால் அவங்களோட பெயரை ரெண்டு மூணு தரம் பின்னூட்டத்துல பார்த்து இருக்கேன்.. நீங்க சொன்ன பதிவர்களோட லிங்க கொடுத்து இருந்தா இன்னும் வசதியா இருக்குமே..

எம்.எம்.அப்துல்லா said...

// delphine said...

ம்ம்ம்.. நன்றி யட்சகரே!!!.. நேரம் இல்லாததால்தான் எழுத இயலவில்லை..நன்றி.. எனக்கும் ஒரு விசிறி!!!!!!... நீங்கள்தான்..

//

me too doctor :)

மங்களூர் சிவா said...

சென்ஷி said...

//Blogger பதி said...

ரசித்த எழுத்துக்களைப் பற்றி ரசிக்கும்படியாக ஒரு பதிவு !!!!!!! :)//

ரிப்பீட்டே:)