இருபத்தியிரண்டாம் தேதி !
நாடாளுமன்றத்தில் தனது அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவிருக்கிறார் பிரதமர், தற்போதைய நிலவரத்தின் படி எப்படி கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் பத்திலிருந்து, பதினைந்து வாக்குகள் தேவைப்படுகிற பரிதாப நிலையில்தான் தற்போதய மத்திய அரசு இருக்கிறது.
தற்போதைய நிலையில் அரசுக்கு உறுதியான் ஆதரவினை தெரிவித்துள்ளவர்கள் பட்டியலின் படி 257 பேர் இருக்கின்றனர், இதன் படி இன்னமும் பதினைந்து பேரின் ஆதரவினை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது.
Congress | 153 |
Samajwadi Party | 39 |
Rashtriya Janata Dal | 24 |
Dravida Munnetra Kazhagam | 16 |
Nationalist Congress Party | 11 |
Pattali Makkal Katchi | 6 |
Lok Janshakti Party | 4 |
Marumalarchi Dravida Munnetra Kazhagam | 2 |
Indian Union Muslim League | 1 |
Republican Party of India | 1 |
TOTAL | 257 MP |
இதேவகையில், அரசுக்கு எதிராக....
Bharatiya Janata Party | 130 |
Communist Party of India-Marxist | 43 |
Bahujan Samaj Party | 17 |
Shiv Sena | 12 |
Biju Janata Dal | 11 |
Communist Party of India | 10 |
Janata Dal - United | 8 |
Shiromani Akali Dal | 8 |
Telugu Desam Party | 5 |
All India Forward Bloc | 3 |
Rashtriya Lok Dal | 3 |
Telangana Rashtra Samithi | 3 |
Revolutionary Socialist Party | 3 |
Marumalarchi Dravida Munnetra Kazhagam | 2 |
Assom Gana Parishad | 2 |
National Conference | 2 |
Kerala Congress | 1 |
Nagaland People's Front | 1 |
Janata Dal-Secular | 1 |
Trinamool Congress | 1 |
TOTAL | 266 MPs |
ஆக இவர்களுக்கு இன்னமும் ஆறு உறுப்பினர்களின் ஆதரவிருந்தால் எதிர்கட்சிகள் அரசினை கவிழ்த்துவிட முடியும். தற்போதைய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கும் பட்சத்தில் ஆதாயம் பெறப்போகும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். அதனால் அவர்கள் வாயில் விரலை வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
இரண்டு புறமும் குதிரை பேரம் நடக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. காங்கிரஸ் தரப்பில் ஒரு உறுப்பினருக்கு இருபத்தியைந்து கோடி வரை கொடுக்க தயாராய் இருப்பதாய் கம்யூனிஸ்ட்டுகள் குற்றம் சாட்டியியிருப்பதை கவனிக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி இதைவிட அதிகம் கொடுத்து தங்களுக்கு தேவையான ஆறு உறுப்பினர்களை விலைபேசும் வாய்புகளை மறுப்பதற்கில்லை.
தற்போதைய நிலையில் ஆறு உதிரிகளுக்குத்தான் கொண்டாட்டம், மத்திய அரசினால் அவமானப்படுத்தப்பட்டதாய் கருதும் சிபுச்சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஐந்து உறுப்பினர்களின் நிலைப்பாடுமே நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவினை தீர்மானிக்கும் வாய்ப்பிருக்கிறது.
துவக்கத்தில் இருந்தே சிவசேனா மற்றும் திரினமுல் காங்கிரஸ் கட்சிகள், அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தினை எதிர்க்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். எதிர்வரும் ஓட்டெடுப்பில் இவர்கள் கலந்து கொள்ளாமல் நடுநிலைவகிக்கும் வாய்புகளையும் மறுப்பத்ற்கில்லை.அவ்வாறான சூழல் ஆளும் கட்சியின் வெற்றிவாய்புகள் எளிதாகும்.
இப்போது பதிவின் தலைப்புக்கு வருவோம்....
திமுக தலைமையினால் தொடர்ச்சியாய் அவமானப்படுத்தப் பட்டுவரும், மாறன் சகோதரர்கள் இந்த வாக்கெடுப்பினை முன்வைத்து கட்சித்தலைமையுடன் சமரசம் பேச முனைவார்கள். ஒருவேளை தங்கள் முயற்சிகள் தோற்கும் பட்சத்தில் தயாநிதி மாறன் வாக்கெடுப்பினை புறக்கணிப்பார் என்றே எதிர்பார்க்கிறேன்.அத்தகைய ஒரு நடவடிக்கை தயாநிதி மாறனை எதிர்முகாமுக்கு கொண்டு்செல்லும் முதல் தப்படி(Setp)யாக அமையும்.பணபலமிக்க மாறன் சகோதரர்களை அரவனைக்க விஜயகாந்த் முதல் அம்மா வரை தயாராகவே இருப்பார்கள்.
கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயலாய் கருதி, தயாநிதி மாறன் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டால், அது தனக்கு சாதகமான நிலைப்பாடாய் அமையும் என தயாநிதி கணக்குப் போடுவார்.எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்த்தின் தேமுதிக அல்லது அதிமுக நிறைய இடங்களை பிடிக்கும் பட்சத்தில், அடுத்து அமையவிருக்கும் மத்திய அரசிடம் பேரம் பேசும் தரகர் வேலைக்காவது இவரை தங்கள் அருகாமையில் வைத்துக் கொள்ள இந்த கட்சிகள் நினைக்கலாம்.
திமுக தலைமை மாறனுக்கு கருனை காட்டுமா அல்லது எதிர்முகாமுக்கு அவரை விரட்டியடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
(முதல் அரசியல் கட்டுரை...அத்தனை கோர்வையாக வரவில்லை என நினைக்கிறேன்...நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?...பின்னூட்டமிடுங்கள்.ஆதரவினை பொறுத்து வ்ரும் நாளில் அரசியலை பிரித்து மேய்வோம்)
2 comments:
எனக்கு மனக்கணக்கு( கணக்கு) வராது/ அதனால் பதிவைப்பற்றி கருத்து சொல்ல முடியல :(
அரசியல் நடப்புக்களை நன்றாக கணித்துள்ளீர்கள். அனால் என்னஅந்தப் புயல் எந்தப் பக்கம் வேண்டு மென்றாலும் திரும்பலாம்.
எழுத்து நடை நல்ல இருக்கு. வாழ்த்துக்கள்.தொடரவும்.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com
Post a Comment