ஓடி வருகிறான் உதய சூரியன்.....

Wednesday, May 13, 2009

நான் தி.மு.க காரன் இல்லை...

ஆனா இந்த தடவை தி.மு.க வுக்கு ஓட்டு போட்டுட்டேன்...

அதுனால தி.மு.க ஜெயிக்கும்னு நினைக்கிறேன்....

தி.மு.க தோத்தாலும் கவலை இல்லை...சந்தோசம்தான்.

ஏன்னா அம்மா ஜெயிச்ச அடுத்த நிமிசம் இலங்கைக்கு ராணுவத்த அனுப்பி தமிழீழம் அமைச்சுக் கொடுத்துருவாங்கல்ல....

வாழ்க ஜனநாயகம்....

9 comments:

Anonymous said...

varummm... anaaaaaa varathuuu........

மங்கை said...

நான் இங்க இருக்கேன்...என் ஓட்டு என்ன ஆச்சுன்னு தெரியலை...

சோ..நீங்க போடுற கட்சி தான் செயிக்குமாக்கும்...

லக்கிலுக் said...

//ஏன்னா அம்மா ஜெயிச்ச அடுத்த நிமிசம் இலங்கைக்கு ராணுவத்த அனுப்பி தமிழீழம் அமைச்சுக் கொடுத்துருவாங்கல்ல....//

இதற்காகவே திமுக தோற்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

இப்படிக்கு
திமுககாரன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...
This comment has been removed by the author.
மங்கை said...

நான் பார்த்தேன் லட்சுமி... ஓ நீங்களும் பார்த்தீங்களா...நல்லது

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எலெக்ஷன் அனாலிஸஸ் ல யட்சன் யாருக்கு போடுவாரோ அவங்க தான் ஜெயிப்பாங்கன்னு டீவியில் போட்டாங்களே பாக்கலையா?

:)

மங்கை ஒன்னுமில்ல சில ஸ்பெல்லிங் மிஸ்டேக் அதான் திரும்ப போட்டிருக்கேன் பின்னூட்டம்..

தமிழ் அமுதன் said...

நானும் திமுக காரன் இல்ல! திமுக தோக்கணும்னு நினைக்கல! ஆனா? திமுக தோத்தா
அம்மா சொல்லுரதுபோல நடக்குமா? அப்படின்னா திமுக தோக்கனும் அம்மா ஜெயிக்கணும்!;;))

ஆனா என்னோட ஒரே ஆசை காங்கிரெஸ் எல்லா இடங்கள்லயும் தோக்கனும்!

பாலா said...

நான் ஜீவன் அவர்களை வழிமொழிகிறேன்

Anonymous said...

தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.

அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.

ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா