இனி இப்படியெல்லாம் பதிவுகள் போடப்போவதில்லை...

Monday, May 4, 2009

கடந்த எனது பத்து பதிவுகளில் பெரும்பான்மையானவை இலங்கை நிலவரம் , அதையொட்டிய அரசியல் மற்றும் வலையுலக விளம்பர பித்தர்களையொட்டியே அமைந்திருந்தது, தற்செயலானதல்ல.

வலியின் வேதனையில் பதிவிடுவோர் ஒருபுறம்,,,,வலிக்கிற மாதிரி திறமையாய் நடிப்பவர்களொருபுறம். இதுதான் வாய்ப்பென தங்கள் அரசியல் எதிர் முகாமை வசைமாறியிடுவது ஒருபுறம். சந்தடி சாக்கில் நான்கூட பிரபாகரனுக்கு கடிதம் எழுதி,, நமீதாவுக்கு வீரவணக்கம் செலுத்தி என் சுய அரிப்புகளை தீர்த்துக் கொண்டேன்

இத்தனை வலையுலக கூத்துகள்...மன்னிக்கவும் வலையுலக உணர்ச்சி கொந்தளிப்புகள் நடந்தும் இலங்கையில் ஒரு மயிரும் பிடுங்கப்படவில்லை என்பதுதான் வேதனையான வேதனை.....இலங்கையில் உருப்படியாக நடக்கும் என எதிர்பார்ப்பதோ அல்லது வலையுலக கலைஞர்களை தோலுரிப்பதிலோ எதுவும் நடந்துவிடப் போவதில்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

கலைஞர் மட்டும் கையாலாகாமல் இல்லை....பெரும்பான்மையான தமிழகத்து தமிழனே அப்படித்தானிருக்கிறான் என்பதுதான் உண்மை.....ஊருக்கு நாற்பது பேர் கொதிதெழுந்து போராடுவதால் என்ன நடந்துவிடுமென எதிர்பார்க்க முடியும். வைக்கோவுக்கும், திருமாவுக்கும் அரசியல் சுயநலமே பிரதானமாய் போய்விட்டதால் இவர்கள் கலைஞரை விட ஆபத்தானவர்களாகி போய்விட்டதை புரிந்து கொள்ள வேண்டும்.. ஜெயாவும், ராமதாசுவும் ...சோனியாவை விட, காங்கிரஸை விட ஆபத்தானவர்கள்.

அநேகமாக வரும் மே 13ம் தேதி மாலையில் இருந்து மிக வலுவாக தமிழர்களின் மீது தாக்குதல் நடத்தப்படலாம். மே 16ம் தேதிக்குள் பிரபாகரனுக்கு முடிவுகட்டப்படும் நிதர்சனங்களை எதிர்பார்க்கிறேன். இருக்கிற மிச்ச சொச்ச தமிழனும் ஈழத்தில் பிச்சைக்காரர்களை விட கேவலமாய் போய்விடுவார்கள். இத்தனைக்கும் பின்னால்....

கலைஞர் தமிழின தலைவராகவே மிச்சநாளைக்கு தொடர்வார்...
ராசபக்‌ஷே சிங்களர்களின் காவல் தெய்வமாவார்...
பிரபாகரன் சரித்திர நாயகனாவார்....
கொத்து கொத்தாய் செத்துப்போன புலிகள் வித்தாவார்கள்....
சோனியா நவீன கண்ணகியாய் புன்னகைக்கலாம்....
வைக்கோவும், நெடுமாறனும் இனி மலேய தமிழனுக்காய் மருகத்துவங்கலாம்....
இவர்களுக்கிடையே சிக்கி இழப்பதற்கேதுமில்லாத ஈழத்து அப்பாவிகள் என்னவாவார்கள்.....

வலிக்கிறது.....

இனி இப்படியெல்லாம் பதிவுகள் போடப்போவதில்லை.....


6 comments:

யட்சன்... said...

ஒரே மூச்சில் எழுதியது....திரும்ப படிக்கவில்லை...எழுத்துப்பிழை, கருத்துப்பிழை பார்க்கவில்லை....கோர்வையாக வந்திருக்கிறதாவென கூட படிக்கத் தோணவில்லை...

ம்ம்ம்ம்ம்.....

லக்கிலுக் said...

நிதர்சனம் :-(

இனி இந்த விவகாரத்தில் கலைஞரை நம்பி பிரயோசனமில்லை. அதற்காக ஜெ.வை நம்புவது வடிகட்டிய முட்டாள்தனம்.

Anonymous said...

Sir,this is the real situation in Tamil Nadu.Nobody ,particularly villagers, not worry about others.

சென்ஷி said...

செருப்படி!

மங்கை said...

:-(

Subha said...

மனது வலிக்கிறது :(